கையேந்தும் வங்கதேசம்.. மண்டியிட்ட மாலத்தீவு.. இந்தியாவிடம் மோதினால் இதுதான் நடக்கும்! கவனிச்சீங்களா

post-img
டெல்லி: அண்டை நாடுகளான மாலத்தீவு நம்மிடம் மோதலை கடைப்பிடித்து இப்போது சரண்டர் ஆகிவிட்டது. அதேபோல் வங்கதேசம் தற்போது மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதற்கு மத்தியில் நம்மிடம் அரிசிக்கு கையேந்தி நிற்கிறது. இதனால் மாலத்தீவை போல் விரைவில் வங்கதேசமும் இந்தியாவிடம் சரணடையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நம் நாட்டின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்டவை உள்ளன. இதில் பாகிஸ்தான், சீனாவுடன் நமக்கு தொடர்ந்து மோதல் உள்ளது. ஆனால் வங்கதேசம், மாலத்தீவு உள்ளிட்டவை நம் நாட்டுடன் நல்ல நட்பில் இருந்து வந்தன. ஆனால் திடீரென நடந்த ஆட்சி மாற்றத்தால் மாலத்தீவு, வங்கதேசம் நம்முடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க தொடங்கின. அதாவது மாலத்தீவு அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இதில் நம்முடன் நட்பாக இருந்த இப்ராஹிம் முகமது சோலி தோற்றார். சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்ஸு வெற்றி பெற்றார். இதையடுத்து மோதல் போக்கு தொடங்கியது. மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேறும்படி கூறினார். இது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதேபோல் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவுக்கு சென்று போட்டோ வெளியிட்டார். மாலத்தீவின் சுற்றுலா துறையை முடக்கும் வகையில் உள்நோக்கத்துடன் லட்சத்தீவை பிரதமர் மோடி ப்ரோமோட் செய்வதாக அந்நாட்டு அமைச்சர்கள், எம்பிக்கள் கூறியதோடு இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்தனர். இது இந்தியா-மாலத்தீவு இடையேயான பிரச்சனையை இன்னும் அதிகப்படுத்தியது.இதனால் இந்தியர்கள் கடும் கோபமடைந்தனர். மாலத்தீவு செல்வதற்கான டிக்கெட்டுகளை இந்தியர்கள் ரத்து செய்தனர். இதனால் பயந்துபோன மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிராக கருத்த தெரிவித்த 3 அமைச்சர்களை சஸ்பெண்டும் செய்தார். இருப்பினும் இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை குறைத்து கொண்டனர். இதனால் மாலத்தீவின் வருமானம் மளமளவென குறைந்தது. இதையடுத்து மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சீனாவுக்கு பயணம் செய்து அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். தனது நாட்டுக்கு இந்தியர்கள் வருவது சரிந்துள்ளது. இதனால் சீனாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகளை அனுப்பி வைக்க வேண்டும் என கூறினார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு நம்மிடம் சரணடைந்தார். கடந்த அக்டோபர் மாதம் டெல்லி வந்த அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். மாலத்தீவு சுற்றுலாவை இந்தியர்கள் மொத்தமாகப் புறக்கணித்ததே இதற்கு முக்கிய காரணமாகும். இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர். இந்தியர்கள் இப்படி மொத்தமாகப் புறக்கணித்ததால் மாலத்தீவின் பொருளாதாரமே ஆடி போனது. இதன் காரணமாகவே மாலத்தீவு அதிபர் முய்சு இப்போது மொத்தமாக இந்தியாவிடம் சரண்டர் ஆனார். அதோடு இரு நாட்டு உறவில் முக்கிய திருப்பமாக இந்தியாவின் ரூபே கார்டுகள் இப்போது மாலத்தீவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாலத்தீவு செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியர்கள் வருகை மாலத்தீவில் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், அதை பூஸ்ட் செய்யவும் இது நிச்சயம் உதவும். இதுபற்றி முகமது முய்ஸு, "அண்டை வீட்டாருக்கு மரியாதை அளிப்பது எங்கள் டிஎன்ஏவிலேயே இருக்கிறது. இந்தியா எங்களுக்குப் பெரிய பங்களிப்பைத் தருகிறது... இந்தியச் சுற்றுலாப் பயணிகளை நாங்கள் எப்போதும் வரவேற்கக் காத்திருக்கிறோம்" என்று கூறி சமாதானம் அடைந்தார். அந்த வரிசையில் இப்போது நம்மிடம் வங்கதேசம் மோதலை தொடங்கி உள்ளது. வங்கதேச வன்முறைக்கு பிறகு அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டுக்கு வந்தார். தற்போது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவது, கோவில்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க இடைக்கால அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் எல்லையில் ட்ரோன் பறக்கவிட்டு பதற்றத்தை ஏற்படுத்துவது, பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுவது உள்ளிட்ட விஷயங்களில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்து ஆயுத உதவிகளை பெற்று பயங்கரவாதிகளை புதிதாக வங்கதேசம் உருவாக்க உள்ளதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல்வெளியாகி உள்ளது. இதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவை ஒப்பிடும்போது வங்கதேசம் மிகவும் சின்ன நாடு. ராணுவம், கப்பல்படை, விமானப்படையில் இந்தியாவின் கிட்ட கூட வங்கதேசத்தால் வர முடியாது. இதனால் வங்கதேசம் எப்படி மோதினாலும் அதற்கு நம்மால் உரிய முறையில் உடனடியாக பதிலடி கொடுக்க முடியும். தற்போது வரை நம் நாடு வங்கதேசத்தை எதிரியாக ஏற்கவில்லை. தொடர்ந்து நட்பு நாடாகவே பார்த்து வருகிறது. ஆனால் அங்குள்ள முகமது யூனுஷ் தலைமையிலான அரசு நம்மை தொடர்ந்து சீண்டி பார்க்கிறது. இது எல்லை மீறும் பட்சத்தில் இந்தியாவும் வங்கதேசத்துக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் தற்போது மோதல் நடந்தாலும் கூட இந்தியாவிடம் தான் அந்த நாடு உணவு, ஜவுளித்துறை சார்ந்த உற்பத்திக்கு சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. அந்த வகையில் சீமீபத்தில் 2 லட்சம்டன் அரிசியை வங்கதேசம் நம் நாட்டிடம் கேட்டுள்ளது. இதில் 27 ஆயிரம் டன் அரிசி வங்கதேசம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அரிசி அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனால் நம்மை புறக்கணித்துவிட்டு வங்கதேசத்தால் ஒன்றும் செய்ய முடியாது. இதனை விரைவில் உணர்ந்து வங்கதேசமும் நம் நாட்டிடம் சரணடையும் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post