அழுத்தம் தாங்கல! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த என்.ஸ்ரீனிவாசன்.. இந்தியா சிமெண்டை விற்றது ஏன்?

post-img
சென்னை: இந்தியாவின்.. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிஸ்னஸ்மேன்களில் ஒருவர் என். ஸ்ரீனிவாசன். தமிழ்நாட்டில் நெல்லைக்காரர்கள் பலர் மிகப்பெரிய தொழிலதிபர்களாக உள்ளனர். அதில் என். ஸ்ரீனிவாசன் முக்கியமான அடையாளங்களில் ஒருவராக இருந்தார். நாராயணஸ்வாமி சீனிவாசன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராகவும், இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான ஆளும் அமைப்பான பிசிசிஐயின் தலைவராகவும் இருந்தார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியின் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளராகவும் உள்ளார். ஆனால் இதெல்லாம் 2கே கிட்ஸ்சுக்கு தெரிந்த அடையாளம். ஆனால் அவர் உண்மையில் இந்தியாவின் பெரிய பிஸ்னஸ்மேன்களில் ஒருவர். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாக இயக்குநராக அவர் பதவி வகித்து வந்தார். 1946 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்ரீநிவாசனின் தந்தையான எஸ் என் என் சங்கரலிங்க ஐயர் மற்றும் டி எஸ் நாராயணசாமி ஆகியோரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம், சுதந்திரம் அடைந்த சிறிது நேரத்திலேயே நாட்டின் முதல் ஐபிஓவை வெளியிட்ட நிறுவனங்களில் ஒன்றாகும். 1969 ஆம் ஆண்டில், அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு, சீனிவாசன், அப்போது தனது 20-வது வயதில், நிறுவனத்தின் கூட்டு நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். அதன்பின் சீனிவாசன் 1989 இல் இந்தியா சிமெண்ட்ஸின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். 90களில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராசி சிமெண்ட்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் வகையில் இவர் மேற்கொண்ட முயற்சியை இந்தியாவே திரும்பி பார்த்த்து. வெற்றிகரமாக அந்த நிறுவனத்தை கைப்பற்றி அதை இந்தியா சிமெண்ட்ஸுடன் இணைத்தார். 380 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், இந்திய நிறுவன வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய கையகப்படுத்தல்களில் ஒன்றாகும். அப்போது இந்தியாவே அவரை திரும்பி பார்த்தது. ஒரு நிறுவனத்தை hostile attempt முறையில் கையகப்படுத்தும் வழக்கம் அப்போது இந்தியாவில் பெரிதாக இல்லை. ஸ்ரீனிவாசன் மேற்கொண்ட இந்த நடவடிக்கைதான் இந்தியாவில் முதல் வெற்றிகரமான hostile attempt முறையில் கையகப்படுத்தப்பட்ட நிறுவனம் ஆகும். இதன் மூலம் வெறும் மொத்தம் சுமார் 500 கோடி செலவழித்து, சுமார் 1000 கோடி செலவில் ஒரு கிரீன்ஃபீல்ட் ஆலையைப் பெற முடிந்தது. பின்னர், அவர் அரசாங்கத்திற்குச் சொந்தமான சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (சிசிஐ) யின் யர்ரகுன்ட்லா ஆலையை ஏலம் எடுத்து அதை இந்தியா சிமெண்ட்ஸுடன் இணைத்தார். இதேபோல் பல முக்கியமாக சிமெண்ட் நிறுவனங்களை பல ஏலத்திலும் போட்டியிலும் வீழ்த்தி தொடர்ந்து தனது நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்போது இதன் சிஇஓ பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார். குமார் மங்கலம் பிர்லா கட்டுப்பாட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 56 % பங்கை ஸ்ரீனிவாசன் விற்ற நிலையில்.. இந்த நிறுவனம் கைமாறி உள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட டெலிகாம் துறை தொடங்கி பல துறைகள் மோனோ பாலி அல்லது டூயல் பாலி ஆகி வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் சிமெண்ட் துறையும் கிட்டத்தட்ட 2 நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. சிமெண்ட் விலையில் சந்தை போட்டியை சமாளிக்க முடியாதது, இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கும் கீழ் உள்ள நிலங்களை விற்று சிமெண்ட் விலையை குறைக்கலாம் என்றால் அதிலும் சட்ட சிக்கல்கள் நிலவிய காரணத்தால் வேறு வழி இல்லாமல் நிறுவனத்தை விற்றார். சந்தை போட்டி அளவிற்கு விலை நிர்ணயிக்க முடியாத அளவிற்கு நிலவிய அழுத்தம் காரணமாக.. தனது பங்குகளை காப்பாற்றும் பொருட்டு.. கடனில் சிக்காத வகையில் குமார் மங்கலம் பிர்லா கட்டுப்பாட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 56 % பங்கை ஸ்ரீனிவாசன் விற்று உள்ளார். தற்போது இதன் சிஇஓ பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார். இதன் மூலம் சிமெண்ட் துறையில் என். ஸ்ரீனிவாசனின் பெரிய அத்தியாயம் முடிந்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post