அமெரிக்காவையே மிரள வைத்தவர்.. அணு விஞ்ஞானி ஆர் சிதம்பரம் மரணம்.. சென்னையில் பிறந்தவர்.. யார் இவர்?

post-img
டெல்லி: இந்தியாவின் அணு சக்தி துறையில் மிக முக்கிய பங்காற்றிய விஞ்ஞானிகளில் ஒருவரான, ராஜகோபால் சிதம்பரம் காலமானார். ஆர். சிதம்பரம் என அறியப்பட்ட இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மும்பையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் பிறந்த இவர், 60 வருடங்களுக்கும் மேலாக அணு சக்தி துறையில் பணியாற்றியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆர் சிதம்பரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "இந்தியாவின் அணு திட்டங்களை வடிவமைத்த முக்கிய சிற்பிகளில் ஆர். சிதம்பரம் ஒருவர்" என்று கூறியுள்ளார். இந்தியாவின் அணு சக்தி துறையில் மிக முக்கிய பங்காற்றிய விஞ்ஞானிகளில் ஒருவராக விளங்கிய ராஜகோபால் சிதம்பரம் காலமானார். அவருக்கு வயது 88. ஆர். சிதம்பரம் என அறியப்பட்ட இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அணு சக்தி துறையில் 60 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய ஆர். சிதம்பரம், இந்திய அணு சக்தி துறையை வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர். கடந்த 1974 மற்றும் 1998 ஆம் ஆண்டு நடத்திய அணு குண்டு சோதனையில் ஆர்.சிதம்பரம் மிக முக்கிய பங்காற்றினார். சென்னையில் கடந்த 1936 ஆம் ஆண்டு பிறந்த ஆர் சிதம்பரம் மாநிலக்கலூரி மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் உள்ளிட உயர் கல்வி நிறுவனங்ளில் படித்துள்ளார். இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் கடந்த 1999 இல் இவருக்கு வழங்கப்பட்டது. 1974 பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு தலைமை தாங்கிய ஆர். சிதம்பரத்திற்கு அமெரிக்கா விசா மறுத்தது. விசா மறுத்தது மட்டு இன்றி, அவரை மேலும் சர்வதேச படிகவியல் கருத்தரங்கில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது. அணுக்களின் ஒழுங்கமைப்புக்களை ஆராயும் அறிவியற் துறை படிகயவியல் என்று அழைக்கப்படுகிறது. ஆர்.சிதம்பரத்தின் மறைவு இந்திய அணுசக்தி துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று மத்திய அரசின் அணுசக்தி துறை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் அணு திட்டங்களை வடிவமைத்த முக்கிய சிற்பிகளில் ஆர். சிதம்பரம் ஒருவர் என பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post