வரலாற்றில் முதல்முறை.. மாமல்லபுரத்தை உலகுக்கு காட்டிய மார்ஷலின் மைத்துனர்! நீலகிரியில் நடமாடிய விஐபி

post-img
நீலகிரி: தொல்லியல் முன்னாள் தலைமை இயக்குனர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் சிலைக்கு தமிழக முதல்வர் இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்த நேரத்தில், மார்ஷலின் குடும்ப உறுப்பினர் ஒருவரை பற்றி, "ஒன் இந்தியா" வாசர்களுக்கு தெரியப்படுத்த நாம் வேண்டியிருக்கிறது. அவர் யார் தெரியுமா? அவரது சிறப்புகள் என்ன தெரியுமா? சிந்துவெளி நாகரீகத்தை, கடந்த 1924ல் உலகுக்கு அறிவித்தவர் ஜான் ஹீபர்ட் மார்ஷல்.. சிந்துவெளி நாகரிகம் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள நிலையில், மார்ஷலுக்கு சிலை அமைத்து சிறப்பித்துள்ளது தமிழக அரசு. இந்தியத் தொல்லியல் முன்னாள் தலைமை இயக்குனர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் சிலைக்கு தமிழக முதல்வர் இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறார். எழுத்துமுறை: அத்துடன், சிந்துவெளி புதிருக்கு உரிய விடையைக் கண்டறிந்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாகப் புரிந்துகொள்ள வழிவகை செய்யும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். ஜான் மார்ஷலை போலவே, இன்னொரு நபரும் சிறப்புக்குரியவர் ஆவார்.. அவருக்கும் நீலகிரிக்கும் நெருங்கிய தொடர்பும் உள்ளது.. அவர் யார் தெரியுமா? அவரை பற்றி நம்முடைய "ஒன் இந்தியா வாசகர்களுக்காக" நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால். தென்பகுதி ஆராய்ச்சி: அவரது பெயர் லாங் ஹர்ஸ்ட் (Long Hurst) என்பதாகும்.. ஜான் மார்ஷலின் மைத்துனர்தான் இந்த லாங் ஹர்ஸ்ட்.. இவரும் தொல் பொருள் ஆராய்ச்சி நிபுணர் ஆவார். இந்தியாவின் வடபகுதிகளின் தொல்பொருள் ஆராய்ச்சியை மார்ஷல் வெளியே கொண்டு வந்தார் என்றால், இலங்கை உட்பட இந்தியாவின் தென்பகுதியின் தொல் பொருள் ஆராய்ச்சியை வெளிக்கொண்டு வந்தவர் லாங் ஹர்ஸ்ட் ஆவார். ஆம்.. மாமல்லபுரத்தின் சிறப்புகள் இன்று உலகுக்கு தெரிய காரணமே இந்த லாங் ஹர்ஸ்ட்தான்.. மாமல்லபுரம் இன்று உலகளவில் அங்கீகாரம் பெறுவதற்கு காரணமும் இந்த லாங் ஹர்ஸ்ட்தான். பல்லவர்களின் வரலாற்றையும், குறிப்பாக, மாமல்லபுரத்தின் சிறப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவர் லாங் ஹர்ஸ்ட்.. நாகார்ஜூனா கொண்டா உள்ளிட்டவைகளின் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டவர். சின்னங்கள்: அதைவிட முக்கியமாக, ஸ்தூபங்களின் முக்கியத்துவத்தையும், அதன் வரலாறுகளையும் உலகுக்கு கொண்டு வந்தவர். இலங்கையிலுள்ள தொல்லியல சிறப்புகளை யும், இலங்கையின் தொல்பொருள் சின்னங்களையும் அழியாமல் பாதுகாத்தவர்தான், லாங் ஹர்ஸ்ட்.. தென்மாநிலங்கள்ல, கர்நாடகாவில் ஹம்பி, விஜயநகர நாகரீகங்கள், ஆந்திர மாநிலத்தில் நாகார்ஜூகொண்ட சார்ந்த புத்த மத அடையாளங்களையும் உலகுக்கு கொண்டுவந்தவர் இவர்தான்.. இப்படி எத்தனையோ அரிய சாதனைகளை செய்த இவரது பெயர் வரலாற்றில் பலரால் போற்றப்படாமலேயே போய்விட்டது. நீலகிரி: பணி ஓய்வுக்கு பிறகு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், மனைவி மற்றும் ஒரே மகனுடன் குடியேறினார்.. ஆனால் அப்போதும்கூட, நீலகிரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் தொல்பொருள் ஆராய்ச்சியை அவர் விடவேயில்லை.. தென்மண்டல தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலகம் சிறிதுகாலம் கோத்தகிரியிலும் செயல்பட்டது. இவர் வெறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல, ஓவிய வரலாற்று ஆய்வாளராகவும் திகழ்ந்தவர்.. தன்னுடைய கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றை பற்றியும் நூல்களை எழுதியவர். 1955-ல் லாங் ஹர்ஸ்ட் இறந்துவிட்டார்.. ஆனாலும், மலைப்பிரதேசத்தின் கடினமான பகுதிகளிலும், தொலைந்துபோன வரலாற்றை தேடிக்கொண்டேயிருந்தார் ஜான் மார்ஷலின் மைத்துனர் லாங் ஹர்ஸ்ட்" என்கிறார் வேணுகோபால். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post