உ.பி அவ்வளவு விளம்பரம் செய்ததே.. இப்போ பாருங்க.. தமிழ்நாடுதான் எப்பவும் கிங்.. வெளியான புள்ளி விவரம்

post-img
சென்னை: தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் உத்தர பிரதேசம் முந்துவிட்டதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவ்வப்போது கூறி வருகிறார்.. உத்தர பிரதேசம் சார்பாக இதற்காக விளம்பரங்களும் கூட செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2024 வருட டேட்டா உண்மையில் ஜிடிபியில் எந்த மாநிலம் எந்த இடத்தில் உள்ளது என்ற விவரங்களை வெளியிட்டு உள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான RBI அரிசிவப்பின்படி டாப் 5 மாநிலங்களின் GSDP: (INR லட்சம் கோடிகளில்) பின்வருமாறு 1. மகாராஷ்டிரா - 40.44 2. தமிழ்நாடு - 27.21 3. உத்தரப் பிரதேசம் - 25.47 4. கர்நாடகா - 25.00 குஜராத்துக்கான தரவு வெளியாகவில்லை(2022-23க்கான குஜராத் மதிப்பு 22.03 லட்சம் கோடிகள்). தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பது மட்டுமின்றி.. 3ம் இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் இருந்து தனது வேறுபாட்டை அதிகரித்துள்ளது. அதன்படி இரண்டு மாநிலங்களுக்கான வித்தியாசம் 2023-24ல் வெறும் ~1 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது வித்தியாசம் 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு உத்தர பிரதேசத்தை விட வேகமாக வளர்கிறது என்பது உறுதியாகி உள்ளது. தமிழ்நாடு தற்போது ஜிடிபி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. முதல் இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டை உத்தர பிரதேசம் முந்திவிட்டதாக பொய்யான செய்தி ஒன்றி பரவி வருகிறது உண்மை என்ன?: ஒரு தனியார் ட்விட்டர் பக்கம் வெளியிட்ட பொய்யான செய்தியில் இருந்துதான் இந்த வதந்தி பரவியது. அந்த நிறுவனம்தான் முதலில் உத்தர பிரதேசத்தில் ஜிடிபியில் இரண்டாம் இடம் பிடித்ததாக கூறியது. அதை தொடர்ந்து வடஇந்திய ஊடகங்கள் பல இதே செய்திகளை வெளியிட்டன. எல்லா நிறுவனங்களும் சோர்ஸ் என்று கூறியது. ஆனால் உண்மையில் அந்த சோர்ஸ் என்ன என்பதை கூறவே இல்லை. பொதுவாக ஜிடிபி டேட்டா ஒன்றிய புள்ளியியல் துறை மூலம் அல்லது ஆர்பிஐ மூலம் வெளியிடப்படும். ஆனால் இதுவரை ஒன்றிய புள்ளியியல் துறை அல்லது ஆர்பிஐ அப்படி ஒரு டேட்டாவை வெளியிட்டு.. தமிழ்நாட்டை உத்தர பிரதேசம் முந்துவிட்டதாக கூறவில்லை. இன்னொரு பிரபல ஊடகம் ஒன்றும் உ.பி; நாட்டின் 2-வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியது என்று கூறியது., உத்தர பிரதேசத்தின் பங்களிப்பு 9.2 சதவீதமாக ஜிடிபி பங்களிப்பில் உயர்ந்துவிட்டதாக கூறியது. தமிழ்நாட்டில் இது 9.1 சதவீதமாக உள்ளது என்றும் .. இதனால் தமிழ்நாடு மூன்றாவது இடம் என்றும் எப்போது போல 15.7 % பங்களிப்புடன் மஹாராஷ்டிரா என்றும் செய்திகளில் பொய்யாக கூறப்பட்டது, முன்னதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இதை பற்றி கூறுகையில், நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம், தமிழ்நாட்டு இளைஞர்களை சர்வதேச சாதனையாளர்களாக மாற்றுவது, அறிவுசார் பொருளாதார வளர்ச்சி, சமநிலையுடன் கூடிய பெண் முன்னேற்றம், நிலையான எதிர்காலம், தமிழ்மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. உண்மை என்ன?: இணையத்தில் பரவி வரும் இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது ஆகும். தமிழ்நாடு தற்போது ஜிடிபி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. முதல் இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. தொடர்ந்து இதே நிலைதான் நீடிக்கிறது. SOIC என்ற தளம் வெளியிட்ட GDP தரவுகள் அடிப்படையில்தான் இந்த பொய்யான செய்தி பரவுகிறது. அந்த நிறுவனம்தான் உத்தர பிரதேசத்திற்கு 9.2 சதவிகிதம் கொடுத்தது. அந்த நிறுவனம் கொடுத்த எல்லா மாநிலங்களின் கூட்டு தொகை ஜிடிபியை கூட்டினால் 108 சதவிகிதம் வருகிறது. அந்த டேட்டா பொய்யானது, அரைகுறையானது என்பதை உறுதி செய்ய இதுவே பெரிய உதாரணம். அதோடு கர்நாடகா டாப் 5 மாநிலங்களில் இல்லை. 6வது இடத்தில் இருந்த உத்தர பிரதேசம்.. இரண்டாம் இடத்திற்கு வந்தது போல டேட்டா மாட்டப்பட்டு உள்ளது. கூட்டு சதவிகிதம் 100 வர வேண்டும் என்ற அடிப்படையை கூட அந்த தளம் கணக்கில் கொள்ளவில்லை குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post