786 பழைய ரூபாய் நோட்டு இருக்கா? லட்சம் லட்சமாக பணம் சம்பாதிக்கலாமே. இப்படியும் ஜாக்பாட் விளம்பரம்

post-img
சென்னை: பழைய ரூபாய் நோட்டு இருந்தால், லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஆன்லைனில், ஒரு விளம்பரம் மீண்டும் சுற்ற துவங்கியிருக்கிறது.. இது எந்த அளவுக்கு உண்மை? பழைய ரூபாய் நோட்டுக்களை ஆன்லைனில் விற்க முடியுமா? எப்படி விற்பது? விரைவாக மட்டுமல்ல, உழைக்காமலும் பணம் சம்பாதிக்க ஆன்லைனில் எத்தனையோ வழிகள் வந்துவிட்டன. அதில், ஒன்றுதான், பழைய ரூபாய், பழைய நாணயங்களை ஆன்லைன் சந்தையில் விற்பது. சில ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் தற்போது புழக்கத்தில் இல்லை.. இதன்காரணமாவே, இதுபோன்ற ரூபாய் நோட்டுகளுக்கும், நாணயங்களுக்கும் டிமாண்டு கூடுகிறது. எத்தனையோ நபர்கள், ஸ்டாம்ப் கலெக்ஷன் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறப்பு நோட்டுகள்: அதுபோல, பழங்கால நாணயம் மற்றும் வரலாற்று நாணயங்களை சேகரிப்பதில் பலரும் ஆர்வம் உள்ளது. இதன்காரணமாக இவைகளுக்கு டிமாண்டு அதிகமாகிறது. அதாவது, அசல் மதிப்பை விட, இந்த பழைய நாணயம், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு அதிக மதிப்புகள் கிடைத்து வருகின்றன. இதை மையப்படுத்திதான் கவர்ச்சிகரமான விளம்பரங்களும் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பெருகி வருகின்றன. ஆனால், எல்லாவகையான நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களுக்கும் இது பொருந்தாது. ஒருசில அடையாளங்களுடன் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்பார்கள். உதாரணத்துக்கு, 1994-ல் நம்முடைய தேசியக்கொடியுடன் கூடிய ரூ.2 நாணயம் உங்களிடம் இருந்தால், அதனை ஆன்லைன் சந்தையில் நீங்கள் ரூ.5 லட்சம் கிடைக்குமாம். இப்படி 5 ரூபாய், 2 ரூபாய், 50 ரூபாய் என ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கும். ஸ்பெஷல் நம்பர்: இப்போது விஷயமென்னவென்றால், 786 என்ற நம்பர் கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கு டிமாண்டு கூடியிருக்கிறதாம்.. 1, 5, 10, 20, 50, 100 அல்லது 2000 ரூபாய் நோட்டுகள் என எந்த ரூபாய் நோட்டுகளாக இருந்தாலும் சரி, அதில் இந்த 786 என்ற எண் இருந்தால், அதை விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். முக்கியத்துவம்: இதற்கு காரணம், இஸ்லாமிய மக்களிடையே 786 என்ற எண் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் 786 எண் பற்றி பல்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும், 786 என்ற எண்ணை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், பிற மதங்களை சேர்ந்தவர்களும், அதிர்ஷ்ட எண்ணாக கருதுகிறார்கள். 786 என்ற எண் ரூபாய் நோட்டு இருப்பவர்கள், www.ebay.com என்ற வெப்சைட்டில் விற்பனை செய்யலாம். அதிலுள்ள Vendor பக்கத்தை கிளிக் செய்து விற்பனையாளராக உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். தெளிவான போட்டோ: பிறகு நீங்கள் வைத்திருக்கும் 786 எண் கொண்ட ரூபாய் நோட்டை இரண்டு பக்கமும் தெளிவாக போட்டோ எடுத்து எடுத்துக் கொண்டு, மேற்கண்ட விற்பனை தளத்தில் அப்லோடு செய்ய வேண்டும். பிறகு உங்களது போன் நம்பர், மின்னஞ்சல் ஐடியையும் கொடுத்தால் போதும். இந்த விளம்பரத்தை பார்ப்பவர்கள், தங்களுக்கு தேவையென்றால், உங்களிடம் அணுகுவார்கள். உங்கள் பழைய கரன்சி நோட்டுகளை விற்க, eBay போலவே, CoinBazzar என்று இன்னும் நிறைய வெப்சைட்கள் உள்ளன.. இப்படி நாணயங்களை விற்பனை செய்வது சட்டபூர்வமானது தான் என்றாலும், நீங்கள் விற்கும் தளத்தின் விதிமுறைகளை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கி: இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க நீங்கள் மட்டுமே கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் இந்த ரூபாய் நோட்டு விற்பனையில்கூட மோசடிகள் நடக்கின்றன. கடந்த டிசம்பர் ராமநாதபுரம் மாவட்டத்திலும் கூட ஒரு சம்பவம் நடந்தது. 786 எண்ணில் முடியும் ரூபாய் நோட்டுகள் இருந்தால் ரூ.12 லட்சம் கொடுத்து பெற்றுக்கொள்வதாக ஆன்லைனில் விளம்பரம் வந்துள்ளது. இதைப்பார்த்த 60 வயது முனியசாமி, விளம்பரத்திலிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். தன்னிடம் ஆறு ரூபாய் நோட்டுகள் 786 எண் கொண்டதாக இருப்பதாக கூறி, அதனை போட்டோவும் எடுத்து அனுப்பினார். ஆனால், போனில் பேசிய மர்ம நபர், முனியசாமியிடம் பதிவு கட்டணம், சேவை வரி செலுத்த வேண்டும் என்றெல்லாம் சொல்லி 1.14 லட்சம் முனியசாமியை ஏமாற்றி பறித்துள்ளார். சைபர் கிரைம்: ஆனால், அதன் பிறகு அந்த மர்மநபர் போன் எடுக்கவே இல்லையாம். இதையடுத்து, மாவட்ட எஸ்பியிடம் முனியசாமி புகார் தரவும், சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், கிருஷ்ணகிரியை ஷெர்கன் என்ற 40 வயது நபர், முனியசாமியை ஏமாற்றி 1.14 லட்சம் பணம் பறித்தது உறுதியானது. பழைய நாணயங்களை விற்பனை செய்து தருவதாககூறி, பலபேரை ஏமாற்றி, பலமுறை ஜெயிலுக்கு போனவர்தான் ஷெர்கன்.. சமீபத்தில்தான் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தாராம் மறுபடியும் கைதாகி ஜெயிலுக்கு போயிருக்கிறார். ஆன்லைன்: எனவே, ஆன்லைனில் வரும் ரூபாய் நோட்டு விளம்பரங்கள் உண்மைதானா? என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டுமாம். காரணம், இதுபோன்ற ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டு, நாணயங்களை விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி எப்போதுமே ஆதரிக்கவில்லை என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post