தமிழக பாஜக என்னை புறக்கணிக்கிறது! குஷ்பு பகீர் குற்றச்சாட்டு

post-img
சென்னை: தமிழக பாஜக நடத்தும் நிகழ்ச்சிகளில் என்னை அழைக்காததால் நான் கலந்து கொள்ளவில்லை என்றும் என்னை ஏன் அழைப்பதில்லை என்பதை கட்சித் தலைவர் அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும் என்றும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து குஷ்பு வெளியிட்டுள்ள ஒரு ஊடகத்தின் தொலைபேசி உரையாடல் ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது: பாஜக நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்காததால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ஒரு தகவல் வருகிறதே என செய்தியாளர் கேட்கிறார். அதற்கு குஷ்பு, "என்னை கூப்பிடுவதில்லை, நான் பங்கேற்பதில்லை. என்னை ஏன் கூப்பிடவில்லை என்பதை கட்சித் தலைவர் அண்ணாமலை, கட்சி நிர்வாகிகளிடம்தான் கேட்க வேண்டும்" என கூறியிருக்கிறார். இந்த பேட்டியை தனது தளத்தில் பதிவிட்டுள்ள அந்த ஊடகம், இந்த தொலைபேசி உரையாடல் ஆடியோவானது குஷ்புவின் ஒப்புதலுடன் பதிவிடப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து குஷ்பு சுந்தர் தனது ட்விட்டரில் வெளியான பதிவில், எனது அனுமதி இல்லாமல் என் பேச்சை ரெக்கார்டு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. ஆனால் நான் பேசியது உண்மைதான். பாஜக நிகழ்ச்சிகளில் ஏன் உங்களை பார்க்க முடிவதில்லை என நிறைய பேர் கேட்கிறார்கள். அதற்கு பதில் ஒன்றுதான் , என்னை யாரும் அழைப்பதில்லை, அப்படியே அழைத்தாலும் கடைசி நிமிடத்தில் அழைப்பது! அதற்காக நான் கட்சியை விட்டு விலகமாட்டேன். என்னால் முடிந்த அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களை மக்கள் முன் கொண்டு சேர்க்கும் பணியை செய்வேன் என அந்த ஊடகத்தை கடுமையாக பேசி பதிவிட்டுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post