வேலூர் ஆனந்தனுக்கு 33 வயது.. கல்யாண ஏக்கம்... வீட்டிற்குள் கண்ட காட்சியால் ஆடிப்போன போலீஸ்

post-img
வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே தென்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கட்டிட தொழிலாளியாவார். இவர் பெரிய நகரங்களுக்கு சென்று கட்டுமான பணிகளை செய்து வந்தார். ஆனந்தனுக்கு 33 வயது ஆகிறது. இன்னம் திருமணம் ஆகவில்லை..திருமணம் ஆகாததால் மன அழுத்ததில் இருந்து வந்த ஆனந்தன், வீட்டிற்குள் சென்று தாழ்பாள் போட்டவர், திரும்ப வரவே இல்லை.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம். இன்றைக்கு திருமணம் என்பது நன்கு சம்பாதித்து, நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு எளிதாக நடப்பது இல்லை.. நன்கு படித்திருக்க வேண்டும்.. நல்ல வேலையில் இருக்க வேண்டும். நன்கு வேலையில் இருந்தாலும், நன்றாக படித்திருந்தாலும்,குடும்பம் எப்படி, அழகானவாரா என்று பல விஷயங்களை இன்றைக்கு பெண் வீட்டார் பார்க்கிறார்கள்.. அக்காள் தங்கையுடன் பிறந்தவர் என்றால் ஒரு மாதிரியும், ஒரே பையன் என்றால் ஒரு மாதிரியும் பெண் வீட்டார்கள் பார்க்கிறார்கள். நிறைய சொத்து, நல்ல படிப்பு, நல்ல வேலை, அழகு இவை இருந்தால் தான் இன்றைக்கு பெண் கிடைப்பது எளிதாக இருக்கிறது. மற்றவர்களின் நிலை கவலைக்கிடமாகே உள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே தென்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவருடைய மூத்த மகன் ஆனந்தன் (வயது 33). கட்டிட தொழிலாளியான இவர் திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வேலை பார்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று இவரது குடும்பத்தினர் அனைவரும் இவரை விட்டு விட்டு கட்டிட வேலைக்கு திருப்பூர் சென்று வந்துள்ளார்கள். இந்த நிலையில் ஆனந்தனுக்கு நேற்று முன்தினம் இரவு அவருடைய அம்மா கல்யாணி போன் செய்துள்ளார். போனை அவர் எடுக்காத நிலையில் மீண்டும் நேற்று காலையில் போன் செய்திருக்கிறார். அப்போதும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் என்னவென்று பார்க்குமாறு கல்யாணி கூறியிருக்கிறார். அவர்கள் சென்று பார்த்தபோது வீடு உள் தாழ்ப்பாள் பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. ஜன்னல் வழியாக பார்த்த போது ஆனந்தன் தூக்கிட்ட உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.. இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள் ஆனந்தனின் உடலை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஆனந்தன் இறப்புக்கு குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். ஆனந்தன் திருமணம் ஆகாமல் தனிமையில் மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக இதே போல் யாருமில்லா நேரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு உயிரைவிடுவதற்கு முயற்சித்தார். அப்போது உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து உயிரோடு மீட்டுள்ளார்கள். இந்த நிலையில் மன அழுத்தத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை விட்டுள்ளார் என்பது போலீசின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post