வேலூரிலும் பரவுது ஸ்க்ரப் டைபஸ்.. தமிழகத்தில் கிளம்பிய புது வைரஸ்! அதிக பாதிப்பு இவர்களுக்குத்தானாம்

post-img
வேலூர்: "ஸ்க்ரப் டைபஸ்" எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் தற்போது அதிகரித்து வருவதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டிலேயே, "ஸ்க்ரப் டைபஸ்" என்ற புதிய வைரஸின் பெயர் அடிபட்டது.. அந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த மர்மக் காய்சல் வேகமாக பரவியது.. முதலில், கொரோனா, டெங்கு என சந்தேகப்பட்ட நிலையில், வைரஸின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்குட்படுத்தியபோதுதான், அது புதிய வைரஸான "ஸ்க்ரப் டைபஸ்" என்று தெரியவந்தது. அறிகுறிகள்: ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள லார்வா பூச்சிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுவதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் தாக்கும் இந்த பாக்டீரியா, உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. எனினும், தேசிய சுகாதார நிறுவனம் உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள், சில நேரங்களில் சொறி போன்றவையே இந்த நோயின் அறிகுறியாகும்.. நோய் தாக்கம் தீவிரமான நிலையை எட்டியிருந்தால் நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை குழப்பம் அல்லது கோமா, இதய செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம். கடுமையான தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு உறுப்புகள் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனினும் ஸ்க்ரப் டைபஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது. சுகாதாரத்துறை: இந்நிலையில், "ஸ்க்ரப் டைபஸ்" எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் தற்போது அதிகரித்து வருவதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உள்ளதாவது: "ரிக்கட்ஸியா'" எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது, அவர்களுக்கு ஸ்க்ரப் டைபஸ் நோய் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள், முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்துார், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில் அதிக அளவில் ஸ்க்ரப் டைபஸ் பரவல் உள்ளது. கர்ப்பிணிகள்: அதேபோல், கிழக்கு தொடர்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், இத்தகைய பாதிப்பு காணப்படுகிறது. விவசாயிகள், புதர் மண்டிய, வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணியர், பூச்சி கடிக்கு உள்ளாகும் சூழலில் இருப்போருக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 'எலிசா' ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் வாயிலாக நோயை கண்டறியலாம். ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு, 'அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின்' போன்ற ஆன்டி பயாடிக் மருந்துகள் அளித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். பின், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டால், ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள்: தேவைப்பட்டால் உயர் சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதலின் கீழ், ஸ்க்ரப் டைபஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post