சென்னைக்கு ரயிலில் போறீங்களா? கண்டிப்பாக இதை நோட் பண்ணுங்க! நாளை முதல் மாற்றம்! வெளியான அறிவிப்பு!

post-img
சென்னை: திருச்சி - திண்டுக்கல் ரயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை முதல் வரும் ஜனவரி 11ஆம் தேதி ரயில்வே சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை, குருவாயூர், ஹவுரா, நாகர்கோவில் மும்பை, நாகர்கோவில் கச்சிகுடா ரயில் உள்ளிட்ட சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னகத்தின் நுழைவாயில் என அழைக்கப்படும் திண்டுக்கல் ரயில் நிலையம் முக்கியமான ரயில் நிலையமாக இருக்கிறது. சென்னை - திருச்சியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் திண்டுக்கல் ரயில் நிலையம் வழியாகத்தான் செல்கிறது. தற்போது திண்டுக்கல் திருச்சி இடையிலான ரயில் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டு இருக்கும் நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பாண்டியன், வைகை , முத்துநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களும், வந்தே பாரத், தேஜஸ் உள்ளிட்ட ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மீண்டும் நடைபெற்று வருவதால் தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," செங்கோட்டையில் இருந்து வருகிற 7, 8, 11ம் தேதிகளில் மயிலாடுதுறை புறப்பட்டு செல்லும் ரயில் (வ.எண்.16848), நாகர்கோவிலில் இருந்து வருகிற 9ம் தேதி மும்பை செல்லும் ரயில் (வ.எண்.16352), குருவாயூரிலிருந்து 8, 10ம் தேதிகளில் சென்னை செல்லும் ரயில் (வ.எண்.16128), கன்னியாகுமரியில் இருந்து வருகிற 11ம் தேதி ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12666), நாகர்கோவிலில் இருந்து வருகிற 7ம் தேதி மும்பை செல்லும் ரயில் (வ.எண்.16340), நாகர்கோவிலில் இருந்து வருகிற 11ம் தேதி கச்சிகுடா செல்லும் ரயில் (வ.எண்.16354) ஆகிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் விருதுநகரில் இருந்து மதுரை ரயில் நிலையம் வருவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில், மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் (வ.எண்.16847) வருகிற 9, 11ம் தேதிகளிலும், கச்சிகுடாவில் இருந்து வருகிற 10ம் தேதி நாகர்கோவில் புறப்படும் ரயில் (வ.எண்.07435), பனாரசிலிருந்து கன்னியாகுமரி புறப்பட்ட தமிழ்ச்சங்கம் ரயில் (வ.எண்.16368) ஆகியவை திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் கோவையில் இருந்து வருகிற 7, 9, 11ம் தேதிகளில் புறப்பட வேண்டிய பகல் நேர ரயில்கள் (வ.எண்.16321 /16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். மதுரையில் இருந்து வருகிற 9ம் தேதி பிகானீர் புறப்படும் அனுராவத் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22631) திண்டுக்கல் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். குஜராத் ஒகாவில் இருந்து வருகிற 7ம் தேதி ராமேசுவரம் புறப்படும் ரயில் (வ.எண்.16734) மதுரை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாகவும், கொல்லத்தில் இருந்து வருகிற 11ம் தேதி செகந்திராத் புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.07176) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும் இயக்கப்படும். மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22671/22672) வருகிற 7ம் தேதி இரு மார்க்கங்களிலும் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு-செங்கோட்டை ரயில் (வ.எண்.16845) நாளை (திங்கட்கிழமை) மற்றும் செங்கோட்டை-ஈரோடு ரயில் (வ.எண்.16846) ஆகிய ரெயில்கள் வருகிற 7ம் தேதி கரூர் வரை மட்டும் இயக்கப்படும். திருச்செந்தூர்-பாலக்காடு ரயில் (வ.எண்.16731/16732) வருகிற 9,11ம் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். ஒகாவில் இருந்து நாளை மற்றும் மதுரையில் இருந்து வருகிற 10ம் தேதி புறப்படும் ஒகா சிறப்பு ரயில் (வ.எண்.09520/ 09519) விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post