கோவாவில் பயணிகள் குறைந்துவிட்டதாக பரவும் வதந்தி! அம்பலமான சீனாவின் சதி? வெளியான புள்ளி விவரம்

post-img
வாஸ்கோடகாமா: கடந்த சில வாரங்களாக கோவாவின் சுற்றுலாத் துறையைப் பற்றிய தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அங்கே செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக ஒரு கருத்து திட்டமிட்டு பரவி வருகிறது. பண்டிகைக் காலத்தில் மக்கள் வருகை குறைந்துள்ளதாகக் பல போஸ்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால்.. உண்மை அதுவல்ல.. அங்கே செல்லும் பயணிகள் குறித்த புள்ளிவிவரம் வேறு மாதிரி உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சியடைந்து வருவதால், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் அதிகம் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக கோவா மாறி உள்ளது இதற்கான புள்ளி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. கோவா சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான எழுச்சியைக் கண்டுள்ளது. ஹோட்டல்கள் முழுவதும் புக்கிங் ஆன நிலையில்.. புதிதாக புக்கிங் செய்ய ரூம்கள் கிடைக்காத நிலை கூட சில நாட்கள் உள்ளன. கடற்கரைகளும் மக்கள் கூட்டங்களால் நிரம்பி உள்ளன. மக்கள் இல்லாமல் வெறிச்சோடு போய்விட்டது என்று பொய்யாக பரப்பப்படும் வீடியோக்களுக்கு பதில் அளிக்கும் விதமாக கோவா முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எப்போதும் போல இரவு வாழ்க்கை அங்கே துடிப்பாகவே உள்ளது. அஞ்சுனா மற்றும் கலங்குட் போன்ற பிரபலமான இடங்களுக்கு மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் இப்போது வடக்கில் கெரி மற்றும் தெற்கில் கனகோனா போன்ற அதிகம் செல்லாத இடங்களுக்கு கூட செல்ல தொடங்கி உள்ளனர். ஆனால் சமூக ஊடகங்களில் மட்டுமே தவறான, பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. கோவாவிற்கு எதிராக பரவும் ஆதாரமற்ற வதந்திகளுக்கு பின் China Economic Information Center எனப்படும் அமைப்பின் பொய்யான சர்வே ஒன்றுதான் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின் இந்த பொய்யான கருத்து கணிப்பு சில சமூக வலைதள இன்ஃப்ளுயன்சர்கள் மூலம் பரப்பப்படுகிறது. அதன்பின் இந்த பொய்யான தகவல்கள் அப்படியே டிரெண்ட் ஆனது. ஒரு பக்கம் அதிக விமானம் மற்றும் ஹோட்டல் செலவுகள் குறித்து பொய்யான செய்தி பரப்பப்பட்டது. மறுபுறம், கோவாவின் கடற்கரைகளும் தெருக்களும் காலியாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இரண்டு தகவல்களும் பொய்யானவை என்று டேட்டா மூலம் தெரிய வந்துள்ளது. கோவாவில் சுற்றுலாத் துறையானது இன்னும் செழிப்பாகவே இருக்கிறது.. சுணக்கம் ஏற்படவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு அவர்களுக்கு வந்த வருமானமே! 2024 டிசம்பரில் மட்டும் கோவா மாநிலம் அசத்தலான வருவாயை சுற்றுலாத்துறை மூலம் ஈட்டி உள்ளது. 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது ரூ.75.51 கோடி கூடுதல் வருமானத்தை கோவா 2024 ஆண்டு ஈட்டி உள்ளது. ஏப்ரல் மற்றும் டிசம்பர் 2024 க்கு இடைப்பட்ட காலத்தில் மொத்த வருவாய் ரூ. 4614.77 கோடிகள். இது 2023ம் ஆண்டில் அதே காலகட்டத்துடன் ஒப்பிட்டால் 365.43 கோடிகள் அதிகம். இதில் ஜிஎஸ்டி வருவாயில் 9.62% அதிகரிப்பு மற்றும் VAT வசூலில் 6.41% அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது. கோவாவில் சுற்றுலாத் துறையானது இன்னும் செழிப்பாகவே இருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். கோவா இந்திய மற்றும் சர்வதேச பயணிகளுக்கு விருப்பமான இடமாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இடையே கோவா கடற்கரைகள், பாரம்பரிய தளங்கள் மற்றும் கடைகள் இன்னும் பிரபலமாகவே உள்ளது. சர்வதேச பார்வையாளர்களை கோவாவின் வசீகரம், அமைதியான சூழல் மற்றும் வளமான கலாச்சாரம் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. கோவாவில் உள்ள உணவகங்கள், அங்கே உள்ள கலாச்சாரம், சாகச விளையாட்டுகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் இன்னமும் பிரபலம் குறையாமல் உள்ளது. கோவா குறித்து தவறான செய்திகளைப் பரப்புவது மாநிலத்தின் சுற்றுலாத் துறை மற்றும் அம்மாநில மக்களின் கடின உழைப்பைக் குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. கோவாவின் இமேஜை கெடுக்க வேண்டும்.. இந்தியாவின் சுற்றுலாத்துறையை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இது போன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. கோவாவில் சுற்றுலா குறைந்து வருகிறது என்ற கருத்து ஒரு வதந்தி என்பது இதன் மூலம் புலனாகிறது. புள்ளி விவர அடிப்படியில் மக்கள் வருகை, வருமானம், வரி கட்டுதல் எல்லாவற்றிலும் கோவா தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதன் சுற்றுலா துறை தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆனால் திட்டமிட்டு சீனாவின் பின்புலத்துடன் கோவா குறித்தும்.. இந்தியாவின் சுற்றுலாத்துறை குறித்தும் தவறாக செய்திகள் பரப்பப்படுகின்றன. கோவா இந்தியாவின் சுற்றுலாத் துறையில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. பொய்யான வதந்திகள் கோவாவின் வெற்றியை மறைக்க முடியாது! Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post