கேரள நபருக்கு லாட்டரியில் அடித்த ரூ.70 கோடி! இலவசமாக கிடைத்த டிக்கெட்டால் யோகம்.. இதுதான் அதிர்ஷ்டம்

post-img
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடந்த அபுதாபி பிக் டிக்கெட் மாதாந்திர குலுக்கலில் பஹ்ரைனில் வசிக்கும் இந்தியருக்கு 30 மில்லியன் திர்ஹாம் ( இந்திய மதிப்பில் ரூபாய் 70 கோடி) பரிசு அடித்துள்ளது. ஆம்புலன்சில் செவிலியராக பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த மனு மோகனன் என்பவருக்கு தான் இந்த 70 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. இலவசமாக கிடைத்த டிக்கெட்டுக்கு தான் இந்த பரிசு கிடைத்துள்ளதாம். இது பற்றிய விவரத்தை இங்கு பார்க்கலாம். கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என பலரும் சொல்வதை கேட்டு இருப்போம்.. இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ லாட்டரியில் பணம் அடிப்பவர்களுக்கு பொருந்தும் என்றே சொல்லலாம். ஆண்டாண்டு காலமாக லாட்டரியை வாங்கி சல்லி பைசா பரிசு அடிக்காமல் பண இழப்பை சம்பாதித்தவர்களே ஏராளம் என்றாலும், ஒரு சிலருக்கு அடிக்கும் பரிசுகள் அவர்கள் தலைவிதியையே ஓவர் நைட்டில் மாற்றிவிட்டு சென்று விடுகிறது. இதனால், நாமும் கோடீஸ்வரர் ஆகிவிட மாட்டோமோ என்ற ஆசையில் பலரும் லாட்டரி வாங்க விரும்புகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இதுபோன்ற லாட்டரிகள் விற்பனை நடக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு செல்லும் இந்திய தொழிலாளர்கள் பலரும் லாட்டரி வாங்குவதைபார்க்க முடிகிறது. இதில் ஒரு சிலருக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்து பெரும் கோடீஸ்வரர்கள் ஆக்கிவிடுகிறது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி பலரையும் வியக்க வைக்கும் விதமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஐக்கிய அரபு அமீரகத்தில் வாட்ச் மேனாக பணியாற்றி வந்த ராஜமல்லையா என்ற நபருக்கு லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு விழுந்தது. தான் கண்ட பகல் கனவு பலித்து விட்டதாக சந்தோஷத்தில் துள்ளிகுதித்த ராஜமல்லையா , பரிசுத்தொகையை பயனுள்ள வகையில் செலவு செய்ய போவதாக கூறியிருந்தார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு லாட்டரியில் ரூபாய் 70 கோடி பரிசு அடித்துள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற அபுதாபி பிக் டிக்கெட் மாதாந்திர குலுக்கலில் பஹ்ரைனில் வசிக்கும் இந்தியருக்கு 30 மில்லியன் திர்ஹாம்ஸ் பரிசு அடித்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் தொகை சுமார் ரூபாய் 70 கோடியாகும். ஆம்புலன்சில் செவிலியராக பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த மனு மோகனன் என்பவர்தான் இந்த 70 கோடி ரூபாயை வென்ற அதிர்ஷ்டசாலி என்பது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி லாட்டரி டிக்கெட் வாங்கினாராம். இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்காக இலவசமாக ஒரு டிக்கெட் கிடைத்துள்ளது. இலவசமாக கிடைத்த லாட்டரிக்குதான் இந்த ஜாக்பாட் கிடைத்துள்ளது. லாட்டரி டிக்கெட் 535948 -என்ற எண்ணிற்கு இந்த பரிசுத்தொகை கிடைத்துள்ளது. 7 வருடங்களாக பஹ்ரைனில் வேலை செய்து வரும் மனு மோகனன், தனது குடும்பத்தினரை கேரளாவிற்கு அழைத்து செல்ல விமான டிக்கெட்டிற்கு கூட பணம் செலுத்த முடியாமல் இருந்தாராம். தற்போது ஒரேநாளில் தலை விதி மாறிப்போனதால் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறாராம் மோகனன். இது குறித்து அவர் கூறுகையில், "ஐந்து வருடங்களுக்கும் மேலாக லாட்டரி வாங்கி வருகிறேன். தற்பொது பரிசுத்தொகை கிடைத்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. லாட்டரி டிக்கெட் வாங்குவதற்கு உதவிய 16 பேருடன் இந்த தொகையை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்" என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post