தமிழ் சினிமாவில் 1000 கோடி நஷ்டம்? என் 23 படங்கள் போச்சு..! பணம் வரல.. ? தயாரிப்பாளர் கண்ணீர்

post-img
சென்னை: கடந்த ஆண்டு தான் பைனாஸ் செய்த 20 சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவராமல் முடங்கிப் போய் கிடப்பதாக தயாரிப்பாளர் கே.ராஜன் வேதனையுடன் பேசி இருக்கிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை வாரிக் குவித்தது 'அமரன்' என்று பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் சொல்கிறது. இரண்டாவது வெற்றிப் படம் என்றால் அது விஜய்யின் 'தி கோட்' என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். மூன்றாவது இடத்தில் தான் ரஜினியின் 'வேட்டையன்' வசூல் இடம் பித்திருக்கிறது. இந்த வரிசையில் நடுத்தர பட்ஜெட்டில் வெளியான 'மகாராஜா', 'அரண்மனை 4', டிமாண்டி காலனி, கருடன், மெய்யழகன் ஆகிய படங்களும் இடம்பெற்றுள்ளன. உலகம் முழுவதும் பெரிய வசூலை வேட்டையை நடத்திய 'புஷ்பா 2' தமிழ் ரசிகர்களால் கண்டுகொள்ளப்படவில்லை. 3 நாட்கள் நல்ல கலெக்‌ஷன் என்கிறார்கள். பெரிய படங்களின் நிலவரம் இதுதான். பெரிய நடிகர்களின் துணை இல்லாமல் எடுக்கப்பட்ட 'வாழை', 'லப்பர் பந்து', பேச்சி, அந்தகன், ஆகியவையும் வெற்றிப் படங்கள்தான் என்கிறார்கள். இதைப் பற்றி தயாரிப்பாளர் கே.ராஜான், "இப்போது வெளியாகும் படங்கள் சில நேரங்களில் நன்றாக இருக்கிறது. பல நேரங்களில் நன்றாக இருப்பது இல்லை. மக்கள் தியேட்டருக்கு வராமல் போனதற்கு டிக்கெட் விலை உயர்ந்தது ஒரு காரணம். கடந்த ஆண்டு 2024 மட்டும் தமிழ் சினிமா 1000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமடைந்துள்ளது. இது தோராயமான கணக்கு மட்டுமே, சரியாகக் கணக்குப் போட்டால் அதைவிட அதிகம் இருக்கும். கடந்த ஆண்டு 300 படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் பாதியிலேயே பல படங்கள் நின்று போய்விட்டன. சில படங்கள் முக்கால்வாசி வேலைகள் முடிந்து நின்றுபோய்விட்டன. சென்சார் கிடைக்காமல் பல படங்கள் முடங்கிப் போய் உள்ளன. இந்த நெருக்கடியை எல்லாம் மீறி கடந்த 2024இல் மட்டும் 241 படங்கள் வெளிவந்துள்ளன. இதில் பெரிய பட்ஜெட்டில் உருவான படங்கள் 40 என வைத்துக் கொள்ளலாம். அதில் 18 படங்கள் வெற்றி பெற்றுள்ளன. லாபம் சம்பாதித்த படங்கள் அதில் எத்தனை எனப் பார்த்தால் 4 படங்கள்தான் வரும். மீடியம் பட்ஜெட் என்று பார்த்தால் 150 படங்கள் வரை இருக்கும். சின்ன பட்ஜெட் படங்கள் இதைவிட அதிகம் இருக்கின்றன. வெளிப்படையாகச் சொல்லப் போனால், 3 கோடி செலவழித்துப் படத்தை எடுத்துவிட்டு க்யூப்க்கு படம் கட்டி வெளியிட முடியாமல் பல தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். அதனால் பல படங்கள் திரையில் வெளிவராமல் முடங்கிப் போய் கிடக்கின்றன. நானே 28 படங்களுக்கு பைனாஸ் செய்துள்ளேன். எல்லாம் சிறிய படங்கள். அதில் 18 படங்கள் சென்சார் செய்த பிறகும் வெளிவரமுடியாமல் உள்ளது. அவற்றை வாங்க ஆள் இல்லை. திரையரங்குகள் கிடைக்கவில்லை. அதுதான் இன்றைய சினிமா உலகில் நிலைமையாக இருக்கிறது. கடந்த ஆண்டு சின்ன பட்ஜெட் படங்கள் பல வெற்றிபெற்றுள்ளன என்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. இதில் பெரிய நடிகர்கள் யாரும் நடிக்கவே இல்லை. அப்படி இருந்து மக்கள் அந்தப் படங்களின் கதையை நம்பி அவற்றை வெற்றியடைய வைத்துள்ளனர்" என்று கூறியுள்ளார். இன்றைக்கு சினிமா எடுப்பதற்காகச் செலவு செய்யும் பட்ஜெட்டை விட, அதற்காக புரமோஷன் செய்யும் செலவு அதிகமாக இருக்கிறது. அதற்காகவே ஒரு தனி பட்ஜெட்டை ஒதுக்கிவிடுகிறார்கள். அப்படிப் பல புரமோஷன் செய்து 'கங்குவா' போன்ற படங்களை மக்கள் மூட்டைக் கட்டி முதல் நாளே வீட்டுக்கு அனுப்பிய சம்பவமும் கடந்த ஆண்டு சினிமா உலகம் கற்றுக் கொண்ட பாடமாக இருக்கிறது. இனி சூர்யாவின் மார்கெட் வேல்யூ மறுபடியும் பழைய நிலைக்கு திரும்புமா? என யோசிக்க வைக்கும் அளவுக்கு 'கங்குவா'வின் தோல்வி அமைந்துவிட்டது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post