கல்பனா நாயக்கை களமிறக்குங்க.. ஸ்டாலின் அடித்த போஸ்டிங் ஆர்டர்.. ஆட்டத்தை ஆரம்பித்த ஐபிஎஸ்!

post-img
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றி வரும் ஐ.ஜி.க்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்தில் முக்கியமான அதிகாரி ஒருவரின் மாற்றம் கவனிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் நாம் தமிழர் உடன் ஏற்பட்ட மோதல் வாக்குவாதம் காரணமாக வருண் குமார் எஸ்.பி கவனிக்கப்பட்டார். திருச்சி எஸ்பி வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வைக்கப்பட்டது. இதில் கண்டிப்பாக கைது நடவடிக்கைகளை எடுப்பேன்.. மாற்றமே இல்லை.. யாரையும் விட மாட்டேன் என்று எஸ்பி வருண் குமார் சபதம் எடுத்தார். அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் எஸ்பி வருண்குமார் மீது அவதூறாகப் பதிவிட தூண்டியதாக திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சரமாரி புகார்களை வருண் அடுக்கி உள்ளார். அதன்பின் ஐபிஎஸ் அதிகாரிகள் மீட்டிங் நடந்தது. ஐபிஎஸ் அதிகாரிகள் மீட்டிங்கில்கூட வருண் குமார் ஐபிஎஸ் நாம் தமிழர் கட்சி மீது புகார்களை அடுக்கி இருந்தார். நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பணியாற்றி வரும் ஐ.ஜி.க்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்தில் முக்கியமான அதிகாரி ஒருவரின் மாற்றம் கவனிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு சிலைகள் திருட்டு தடுப்பு துறைக்கு ஏடிஜிபியாக கல்பனா நாயக் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். சிஐடி பிரிவான சிலை திருட்டு தடுப்பு துறைக்கு இவர் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டது கவனம் பெற்றுள்ளது. முன்னதாக பொன் மாணிக்கவேல் இதன் ஏடிஜிபியாக இருந்த போது அந்த துறை கவனிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் திருடப்பட்டது தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி பிரபலமானவர். ஓய்வு பெறும் நாளில், தமிழகத்தில் சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கவும் முடிக்கவும் ஒரு வருட காலத்திற்கு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் அவரை நியமித்தது. செப்டம்பர் 2017 இல், அவர் தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, சிலைப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்து சமய மற்றும் அறநிலையத் துறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான மதிப்புமிக்க கடத்தல் சிலைகளை இந்தியாவிற்குள் கொண்டு வந்ததாகவும் புகார் அளித்துள்ளார். குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட மன்னர் ராஜராஜ சோழன் மற்றும் அவரது ராணி லோகமாதேவி ஆகியோரின் வெண்கலச் சிலைகளை மீட்டெடுக்க அவர் உதவினார். பழனி தண்டாயுதபாணி கோவிலின் பஞ்சலோக சிலை செய்ததில் முறைகேடு, சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் சிலைகள் கொள்ளை, உலக சிலை கடத்தல் நெட்வொர்க் உள்ளிட்ட பல்வேறு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார். சிலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு வலியுறுத்திய போதிலும், சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்து, ஓராண்டு நீட்டிப்புடன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் சந்தேகப்படும்படியான ஒரு தரப்பினருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கருதிய போலீஸார், அவர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த நிலையில்தான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு கல்பனா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் பிட்ஸ் பிலானி & ஐஐடி சென்னையின் முன்னாள் மாணவர் அவார். அமெரிக்காவில் கிடைத்த பல கோடி சம்பள வேலையை உதறிவிட்டு ஐபிஎஸ் ஆனார். பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில் பணிபுரிந்துள்ளார். சுனாமி நிவாரணப் பணிகளை செய்தது, சென்னை வெள்ள பணிகளை செய்தது, போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், என்ஆர்ஐ மற்றும் திருமணக் குற்றங்களைக் கையாள்வது மற்றும் சைபர் குற்றங்களைக் கையாள்வது ஆகிய வழக்குகளில் இவர் கவனம் பெற்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post