சர்க்கரை அட்டைதாரர்களுக்கு இனிப்பு செய்தி.. இந்த 2 நாளும் ரேஷன் கடைகள் இயங்கும்.. விடுமுறை கிடையாது

post-img
சென்னை: பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டு தாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள நிலையில், மீண்டும் ஒரு முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் குறித்த அறிவிப்பை தமிழக அரசு அறிவத்துள்ளதுடன், பண்டிகைக்கு முன்பு பரிசு தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிடவும் அறிவுறுத்தியிருந்தது. டோக்கன்கள்: அதன்படி ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும் பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்கவும், இரண்டாம் நாள் முதல் முற்பகல் 200 பேருக்கும் பிற்பகலில் 200 பேருக்கும் டோக்கன் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் கடைகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே, கூட்டுறவு துறை பதிவாளர் சுப்பையன் கூட்டுறவு இணைப்பதிவாளர்களுக்கு முக்கிய சுற்றறிக்கை ஒன்றை 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அதில், "பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை வரும் 9ம் தேதி முதல், முறையாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு வழங்க வேண்டும். பொருள் பெறும் நாள், விவரம் இருக்க வேண்டும். கூடுதல் ஊழியர்: முதல் நாள் காலை மற்றும் பிற்பகல் தலா 100 பேர், 2வது நாள் முதல் காலை 150, பிற்பகல் 200 பேர் என பொருள் வழங்குவதோடு, அதன் விவரம் கடை முன் வைக்கப்பட வேண்டும். மேலும் 1500 கார்டுக்கு மேல் உள்ள கடைகளுக்கு கூடுதல் ஊழியர் பெற்றுக் கொள்ளவேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடிய இடங்கள், கூட்ட நெரிசல் ஏற்படும் கடைகளுக்கு உரிய வகையில் போலீஸ் பாதுகாப்பு கேட்டுப் பெற வேண்டும். டோக்கன் வினியோகம் குறித்த தகவல் தினமும் மாலை 5:00 மணிக்குள் அளிக்கப்பட வேண்டும்" என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தவகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அனைத்து பணிகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில், தமிழக அரசு மகிழ்ச்சி தகவல் ஒன்றை ரேஷன்தாரர்களுக்கு அறிவித்திருக்கிறது.. அதாவது, "தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறையாகும்.. அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக செயல்படும். பரிசுத்தொகுப்பு: ஆனால், தற்போது பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டு தாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ளதால், வரும் 3 மற்றும் 10ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவித்து, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது... இந்த வேலை நாட்களை ஈடுசெய்வதற்காக ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுதினம் கார்டுதாரர்களின் வீடுகளில், டோக்கன் வழங்க வேண்டும். வரும், 10ம் தேதி கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்ய வேண்டும்" என ரேஷன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில், 3, 10ம் தேதி ரேஷன் கடைகள் இயங்குவது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது. முக்கிய கோரிக்கை: சில நாட்களுக்கு முன்பு, ரேஷன் ஊழியர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்திருந்தனர். அதாவது, ''கடந்த காலங்களில் பொங்கல் பரிசு வழங்கும்போது ஏராளமான பிரச்சனைகள், நடைமுறை சிக்கல்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் எழுந்தன.. அதனால், இந்த முறை அவைகளை தவிர்க்கும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பை மாதம் முழுவதும், அனைத்து வேலை நாட்களிலும் வழங்கலாம் என்ற அறிவிப்பு வைக்க அனுமதிக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post