சத்தமே இல்லாமல் வேலையை காட்டிய சீனா.. அமெரிக்காவின் சீக்ரெட் ஆவணங்களை தூக்கிய சீன ஹேக்கர்கள்?

post-img
வாஷிங்டன்: அமெரிக்க அரசன் சீக்ரெட் ஆவணங்களைச் சீன ஹேக்கர்கள் ஹேக் செய்து இருப்பதாக அமெரிக்கக் கருவூலத் துறை சில பரபர புகார்களை முன்வைத்து இருக்கிறது. மேலும், அவர்கள் சீன அரசின் ஆதரவில் இயங்கும் ஹேக்கர்கள் என்றும் சில முக்கிய ஆவணங்களை அவர்கள் ஹேக் செய்து அணுகியிருப்பதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் காலத்தில் சைபர் பாதுகாப்பு என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. தனி நபர்களைக் குறிவைத்து நடக்கும் சைபர் தாக்குதல்கள் குறித்து நாம் பல செய்திகளைப் பார்த்து இருப்போம். சைபர் தாக்குதல்: சைபர் தாக்குதலில் இதுபோல தனிநபர்கள் மட்டும் சிக்குவதில்லை.. பல பெரு நிறுவனங்கள், அவ்வளவு ஏன் நாடுகள் கூட சைபர் தாக்குதலில் சிக்குகிறது. இப்போது சைபர் தாக்குதல் என்பது கிட்டதட்ட ஒரு போர்த் தந்திரமாகக் கூட மாறிவிட்டது எனச் சொல்லலாம். உலகின் பெரும்பாலான நாடுகள் சைபர் முறையில் தங்கள் போட்டி நாடுகளைக் கண்காணித்தே வருகிறது. இதற்கிடையே சீனா மீது அமெரிக்க அரசு சில பரபர புகார்களை முன்வைத்து இருக்கிறது. அதாவது , சீன அரசின் சப்போர்ட்டில் இயங்கும் ஹேக்கர்கள் சிலர் அமெரிக்கக் கருவூலத் துறையின் கணினிகளை ஹேக் செய்து சில முக்கிய தகவல்களைத் திருடியிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது. இதை மிகவும் மேஜர் சம்பவம் என்று அமெரிக்கா குறிப்பிடுகிறது. சீக்ரெட் ஆவணங்கள்: அமெரிக்கக் கருவூலத் துறைக்கு சைபர் செக்யூரிட்டி வழங்கி வந்த பியோண்ட் டிரஸ்ட் என்ற நிறுவனத்தை ஹேக் செய்த சீன ஹேக்கர்கள் சில ரகசியத் தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. "என் மகனை கொன்னுட்டாங்க.." ஓபன் ஏஐ ஊழியரின் இந்திய தாய் பரபர! திடீரென உள்ளே வந்த மஸ்க்! என்னாச்சு இது தொடர்பாக அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கருவூலத் துறை ஊழியர்களுக்கு உதவ சில கிளவுட் அடிப்படையிலான சேவை பயன்படுத்தப்பட்டு வந்தது. அதைச் சீன ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். அதில் கிடைத்த கீயை வைத்து கருவூலத் துறையின் சில முக்கிய ஆவணங்களை ஹேக் செய்து எடுத்துள்ளனர். என்ன நடந்தது: கடந்த டிசம்பர் 8ம் தேதி இந்த ஹேக் தொடர்பாக பியாண்ட் டிரஸ்ட் நிறுவனத்தை எச்சரித்தோம். இந்த ஹேக்கிங் முயற்சியில் என்ன தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து மதிப்பிட அமெரிக்க சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செக்யூரிட்டி ஏஜென்சி மற்றும் எஃப்.பி.ஐ அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், விசாரணை நடந்து வருவதைக் காரணம் காட்டி இந்த விவகாரம் தொடர்பாக எஃப்.பி.ஐ அமைப்பு எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. அதேநேரம் பியாண்ட் டிரஸ்ட் நிறுவனம் தங்கள் நெட்வொர்க்கில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதைச் சமீபத்தில் கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளது.. இதனால் சில டிஜிட்டல் கீ திருடப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சீனா திட்டவட்டமாக மறுப்பு அதேநேரம் அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பாகக் கூறுகையில், "எந்தவொரு அடிப்படை உண்மை இல்லாமல் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் இதுபோல அவதூறுகளைப் பரப்பக்கூடாது. இதைச் சீனா கடுமையாக எதிர்க்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post