பிறந்தது 2025.. சென்னை மெரினா, பெசன்ட் நகர், கோவையில் ரேஸ் கோர்ஸ்.. மிரள வைத்த கொண்டாட்டங்கள்

post-img
சென்னை: 2025 புத்தாண்டு பிறந்தது. இந்தியா முழுக்க பல்வேறு நகரங்களில் மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர். சென்னையை பொறுத்தவரை மெரினா கடற்கரையிலும், பெசன்ட் நகர் கடற்கரையிலும் , பாலவாக்கம் கடற்கரை, கோவளம் கடற்கரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புத்தாண்டை கொண்டாடினார்கள். கோவையை பொறுத்தவரை ரேஸ் கோர்ஸ் சாலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். சென்னை மெரினா கடற்கரையில் இந்த முறை கடற்கரைபகுதியில் புத்தாண்டை கொண்டாட தடைவிதிக்கப்பட்டது. மணல் பகுதிகளுக்கோ, கடல் பகுதிக்கோ செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டதால், மக்கள் சாலைகளிலேயே கூடி புத்தாண்டை கொண்டாடினார்கள். மெரினா கடற்கரையில் பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டம் என்பது அண்ணா சதுக்கம் தொடங்கி லைட் ஹவுஸை கடந்து பட்டினம்பாக்கம் வரை ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு இருக்கும். இந்த ஐந்து கிலோ மீடடர் தூரத்திற்கு மணலா அல்லது மக்களின் கடலா என்பது போல் கூட்டம் இருக்கும். எங்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், வாண வேடிக்கை என களைகட்டும்.. கேக் வெட்டியும், பட்டாசு வெடித்து உற்சாகமா கொண்டாடுவார்கள். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே இல்லை. கடற்கரை பகுதியில் மக்கள் அனுமதிக்கப்படாததால் மெரினா வெறிச்சோடியே காணப்பட்டது. அதேநேரம் நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் ஓரளவிற்கு வந்தது. வந்தவர்களும் சாலையில் மட்டுமே புத்தாண்டை கொண்டாடினார்கள். யாரும் கடற்கரைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.. #WATCH | Tamil Nadu | People cut cake to celebrate and welcome the New Year 2025 in Chennai. pic.twitter.com/6hYony9Mvh அதேநேரம் பெசன்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. மக்கள் மொத்தமாக குவிந்ததால் பல ஆயிரம் பேர் குவிந்து ஆட்டம் பாட்டத்துடன் 2025 புத்தாண்ட வரவேற்றனர். சென்னையில் மெரினாவை மூடியாதால், அதனை ஓட்டியுள்ள அனைத்து சாலைகளும் ஸ்தம்பத்து போயின. வாகன ஒட்டிகள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தபடி நகர்வலம் சென்றார்கள். 2025 புத்தாண்டு பிறந்ததையொட்டி பலர் கோயில்களில் சென்று வழிபாட்டார்கள்.அதனால் சென்னையில் பல்வேறு கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. #WATCH | Tamil Nadu | People celebrate and welcome the New Year 2025 in Chennai. pic.twitter.com/6gWHOkYtsq இதேபோல் சென்னையில் எல்லா பார்களும், எல்லா பப்களிலும், எல்லா ஓட்டல்களிலும் குடிமக்களின் கூட்டம் அலைமோதியது.சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டன. போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள் . விபத்தை தடுக்கும் பொருட்டு சோதனைநடத்தி வருகிறார்கள். சென்னையில் இப்படி என்றால், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரனான கோவையில் புத்தாண்டு கொண்டாட்டம் ரேஸ் கோர்ஸ் சாலையில் களைகட்டியது. ரேஸ் கோர்ஸ் சாலையில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் குவிந்து உற்சாகமாக நடனமாடியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை வரவேற்றனர். #WATCH | Coimbatore, Tamil Nadu | People celebrate and welcome the New Year 2025. pic.twitter.com/vBY0kFAPBa இதேபோல் கோவை உக்கடம் வாகை குளம் பகுதியிலும் ஏராளமானோர் குவிந்த புத்தாண்டை கொண்டாடினார்கள். இதேபோல் திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் , ஈரோடு உள்ளிட்ட பல்வறு நகரங்களிலும் மக்கள் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்றனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post