ஜன.1 முதல் ரயில்கள் புறப்படும், சேரும் நேரத்தில் மாற்றம் - முழு விவரம்

post-img
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் , தெற்கு ரயில்வே அறிவித்துள்ள புதிய ரயில் அட்டவணை அமலுக்கு வருகிறது. அதன் படி, சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது, சில ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருப்பவர்களும் புதிய நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தெற்கு ரயில்வே அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? அதன்படி, தமிழ்நாட்டில் எந்தெந்த ரயில்களின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளன? அதேபோன்று சில ரயில்கள் வந்தடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இரு ரயில்களும் இனிமேல் நாமக்கல் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-மைசூரூ எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது 12609 என்ற எண்ணை கொண்டுள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த ரயில் 16551 என்ற எண்ணை கொண்டிருக்கும். மைசூரூ – சென்னை எம் ஜி ஆர் சென்ட்ரல் ரயில் எக்ஸ்பிரஸ் 12610 என்ற எண்ணுக்கு பதிலாக 16552 என்ற எண்ணை கொண்டிருக்கும். எம் ஜி ஆர் சென்ட்ரல்- ஹூப்ளி இடையேயான வாரந்தோறும் செல்லும் அதிவிரைவு ரயில் 17311 என்ற எண்ணுக்கு பதிலாக மார்ச் 7ம் தேதி முதல் 20679 என்ற எண்ணை கொண்டிருக்கும். ஹூப்ளி மற்றும் எம் ஜி ஆர் சென்ட்ரல் இடையேயான ரயிலின் எண் மார்ச் 6ம் தேதி முதல் 17312 என்பதற்கு பதிலாக 20680 ஆக மாற்றப்பட்டுள்ளது. புவனேஸ்வர்-ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர அதிவிரைவு ரயிலின் எண் 20896 என்பதிலிருந்து 20895 என்று, மார்ச் 7ம் தேதி முதல் மாற்றப்படுகிறது. ராமேஸ்வரம்-புபனேஸ்வர் ரயிலின் எண் 20895 என்பதிலிருந்து மார்ச் 9ம் தேதி முதல் 20896 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதை தவிர மேலும் சில ரயில்களின் நேரமும், சில ரயில்களின் எண்களும் மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்கள் முன்பதிவு செய்யும் போதும், முன்பதிவு செய்த ரயிலில் பயணம் மேற்கொள்ளும் முன்னரும் 139 என்ற ரயில்வே உதவி எண்ணை அழைத்து தகவல்களை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post