2 உலகப்போர்களை பார்த்தவர்.. உலகின் வயதான நபர் காலமானார்.. எத்தனை வயது தெரியுமா?

post-img
டோக்கியோ: உலகின் மிக வயதான நபர் என்று அறியப்பட்ட ஜப்பானின் டோமிகா இடுகா காலமானார். 1914 முதல் 1918 வரை நடைபெற்ற முதல் உலகப்போருக்கு முன்பாகவே பிறந்த இவர் தனது 116 வயதில் காலமாகியுள்ளார். தனது வாழ்நாளில் இரண்டு உலகப்போர்களையும் ஜப்பானின் வீழ்ச்சி, உச்சம் என என இரண்டையும் ஒரு சேர பார்த்த பெருமை இவர் பெற்று இருக்கிறார். உலகின் வயதான நபர் என்று அறியப்பட்ட டோமிகோ இடுகா காலமானார். இவருக்கு வயது 116.. கின்னஸ் உலக சாதனை புத்தக தகவலின் படி இவர்தான் தற்போது உலகின் வயதான நபராக இருந்தார். ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ல டோமிகா யனோ நகரில் கடந்த 1908 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி பிறந்தார். இவருடன் உடன்பிறந்தவர்கள் இரண்டு பேர். ஜப்பானின் அஷியா நகரில் வசித்து இந்த வயதான பெண்மனி கடந்த 29 ஆம் தேதி உயிரிழந்து இருக்கிறார். ஆஷியா நகர மேயர் ரையோசுகே தகாஷிமா, உலகின் வயதான நபர் என்று கருதப்பட்ட டோமிகா உயிரிழந்ததை முறைப்படி அறிவித்தார். எனினும் உயிரிழப்புக்கான காரணம் குறித்து அறிவிக்கவில்லை. வயது முதிர்வு காரணமாக அவர் அமைதியான முறையில் உயிரிழந்துவிட்டதாக மட்டும் கூறியுள்ளார். மேலும் தனது வாழ்நாள் முழுவதும் துணிச்சல் மிக்கவராகவும், நம்பிக்கை மிக்கவராகவும் விளங்க்கினார் என்றும் கூறியுள்ளார். முதலாம் உலகப்போருக்கு முன்பே பிறந்த டொமிகா இடுகா, கடந்த ஆண்டு 117-வயதான மரியா பிரன்யாஸ் மறைவுக்கு பிறகு உலகின் வயதான நபராக நம்பப்படுகிறார். 20 வயதில் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் தனது கணவரின் ஜவுளித்தொழிற்சாலையை கவனித்து வந்துள்ளார். இவரது கணவர் 1979- ஆம் ஆண்டு இறந்த பிறகு நாரா என்ற நகரில் தனியாக வசித்து வந்தார். ஒரு மகன் மற்றும் ஒரு மகள், ஐந்து பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்து இருக்கிறார். 116- வயதில் இடுகா மரணம் அடைந்த நிலையில், தற்போது உலகின் வயதான நபராக பிரேசிலை சேர்ந்த கனபர்ரோ லுகாஸ் அறியப்படுகிறார். இவர் இடுகாவை விட 16 நாட்கள் இளையவர் ஆவார். தற்போதுள்ள வாழ்க்கை முறையில் 100 வயது வாழ்வது என்பதெல்லாம் பகல் கனவகாகத்தான் இருக்கும் என்று சொல்வதை பார்த்து இருக்கிறோம். இன்றைய வாழ்க்கை சூழலில 100- வயது வரை வாழ்வது கிட்டதட்ட சாத்தியமே இல்லை என சொல்லிவிடலாம். 25 வயதிலேயே மாரடைப்பு முதல் சர்க்கரை வியாதி எல்லாம் பலருக்கு வந்து விடுகிறது. 40 வயதை கடந்தால் உடலில் சர்க்கரை நோய் அழையா விருந்தாளியாக பலருக்கும் வந்து விடுகிறது. 100 வயது வாழ்வது என்பது மிக அரிதான ஒன்றாக மாறி உள்ள 116-வயது வரை இவர் வாழ்ந்தது உண்மையிலே அதிசயம்தான் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். இடுகா நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு வாழைப்பழங்கள், பண்ணையில் இருந்து பெறப்படும் பால் பொருட்கள் ஆகியவையே காரணம் என உள்ளூர் ஊடகங்கள் கூறி வருகின்றன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post