அசத்தலான யோசனை.. தொப்பூர் கணவாயில் தொடரும் விபத்திற்கு வந்தது விடிவுகாலம்.. களமிறக்கப்பட்ட பிளான்!

post-img
தருமபுரி: தொப்பூர் கணவாயில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதமாக அங்கே புதிய திட்டம் ஒன்றை களமிறக்கி உள்ளனர். ஏற்கனவே உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு இடையே அங்கே புதிய திட்டம் ஒன்றை களமிறக்கி உள்ளனர். லாரிகளில் பிரேக் பெயிலியர் ஆவதே அங்கே பிரச்சனைக்கு காரணம். அங்கே சாலை சரிவாக செல்கிறது. இதை தடுக்க தொடர்ந்து பிரேக் பிடிப்பதால்.. பிரேக் பிரஷர் குறைந்து அப்படியே பெயிலியர் ஆகிவிடுகிறது. இதனால் முன்னாள் செல்லும் வாகனங்கள் மீது மோத வேண்டிய ஆபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க தற்போது அங்கே லாரிக்கு லாரிக்கு என்று தனி லேன் ஒதுக்கப்பட்டுவிட்டது. அதில் மட்டுமே லாரிகள் 20 கிமீ வேகத்திற்கு மிகாமல் செல்ல வேண்டும். மற்றபடி இன்னொரு லேனில் கார்கள் மெதுவாக சென்று விடலாம். இதற்காக அங்கே பெரிய தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. உயர்மட்ட சாலை அமைக்கும் வரை அங்கே இந்த முறையே தொடரும். 6.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அங்கே உயர் மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 905 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் இந்த மாதமே தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் 1010க்கும் அதிகமான விபத்துகளை தொப்பூர் கணவாய் சந்தித்து உள்ளது. இங்கே நடக்கும் விபத்துகளுக்கு காரணம் அமானுஷ்யம் , பேய் , பிசாசு என்றெல்லாம் சிலர் சொன்னாலும்.. உண்மையான காரணம் என்னவோ ஒரு சாதாரண இயற்பியல் பிரச்சனைதான். 1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் விழுந்த துளை காரணமாக மொத்தமாக கப்பலும் மூழ்கியது. 52,310 டன் எடை கொண்ட இந்த கப்பல் நியூயார்க் செல்லும் வழியில் கடலுக்குள் மூழ்கி மொத்தமாக அழிந்தது. இந்த விபத்தில் மொத்தம் 1,504 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். மனித வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான கப்பல் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். சர்வதேச அளவில் கடல் பயணத்தையே மாற்றியதுதான் டைட்டானிக் விபத்து. டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது. இந்த கப்பல் மூழ்கி இருக்கும் அந்த பகுதியில் இப்போதும் பல அமானுஷ்யங்கள் நிலவுவதாக பலர் கூறுவது உண்டு. இங்கே பல முறை சென்று வந்த.. டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூட அந்த இடத்தில் ஒரு அமானுஷ்ய ஆற்றல் இருப்பதை உணர்ந்ததாக கூறியது உண்டு. சமீபத்தில் கூட இதை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து உள்ளது. அப்போது ஜேம்ஸ் கேமரூன் தந்த இந்த பேட்டி கூட வைரலானது. தொப்பூர்: அந்த பகுதிக்கு இணையாக அமானுஷ்ய உணர்வை தரக்கூடிய, கடுமையான அழுத்தத்தை தரக்கூடிய இடம்தான் தொப்பூர் கணவாய். அந்த இடத்தை பைக், காரில் கிராஸ் செய்தாலே.. உடம்பில் ஒரு சிலிர்ப்பு, நடுக்கம் ஏற்படும். சுற்றிலும் சிறிய குன்றுகள், மரங்கள், குரங்குகள் என்று பார்க்கவே ரம்மியமாக காட்சி அளித்தாலும் கூட அந்த இடம் உடலை ஒரு நிமிடம் நடுங்க வைத்துவிடும். கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் ஏற்பட்ட விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். 11 கார்கள் சின்னாபின்னமானது. தொப்பூரில் நடந்த விபத்துகளில் இது மிக மோசமான ஒன்று. தொப்பூரில் இப்படி கொடூர விபத்துகள் நடப்பது இது புதிதல்ல.. கடந்த சில வருடங்களாக இங்கு விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இன்று மீண்டும் விபத்து: இன்று அங்கே.. தொப்பூர் கணவாயில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி பிரேக் பெயிலியர் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதில் கட்டுக்கடங்காமல் சென்ற அந்த லாரி முன்னால் இருந்த கார்கள் உட்பட 5 வாகனங்கள் மீது மோதியது. அடுத்தடுத்து இந்த வாகனங்கள் மோதி அந்த சாலையே முடங்கியது. இதில் 2 கார்கள் அப்பளம் போல நொறுங்கின. 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் சார்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. எங்கே உள்ளது?: தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். சாய்வான சாலையை கொண்ட இந்த பகுதி இரண்டு பக்கமும் மரங்கள், மலைகள் சூழ்ந்த அழகிய பகுதியாகும். ஆனால் ஆபத்தும் அதிகம்! அடுத்தடுத்த திருப்பங்கள், கடினமான வளைவுகள் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் தொம்பரகாம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் வரை உள்ள சாலைதான் அதிகம் விபத்து ஏற்படும் சாலை ஆகும். தொப்பூர் கணவாயில் 2018ல் மட்டும் 92 விபத்துகள் ஏற்பட்டன. 2019ல் 108 விபத்துகள் ஏற்பட்டன.. அதேபோல் 2020ல் 99 விபத்துகள் ஏற்பட்டன, இதில் 2018ல் 32 பேரும், 2019ல் 46 பேரும், 2020ல் 38 பேரும் பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துரையின் புள்ளி விவரங்களின்படி இங்கு 11 ஆண்டில் 961 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விபத்துகள். கணக்கில் எடுக்கப்படாத சிறிய விபத்துகளும் உள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் தொப்பூர் கணவாயில் ஏற்பட்ட விபத்துகளில் 255 பேர் பலியாகி உள்ளனர். சாய்வான சாலை, குறுகலான திருப்பங்கள் ஆகியவை இங்கு விபத்து ஏற்பட முக்கிய காரணம் ஆகும். அதேபோல் இங்கு டோல் கேட்டில் சமயங்களில் அதிக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். அப்போது பின்னாடி வரும் வாகனங்கள் இதை கவனிக்காமல் வேகமாக வந்து மோதும் வழக்கம் உள்ளது. 2020ல் ஏற்பட்ட மிக நீண்ட தொப்பூர் விபத்துக்கு இந்த போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரணம் ஆகும். உண்மையான காரணம்: பெங்களூரில் இருந்து தமிழ்நாடு உள்ளே வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக சாலையின் உயரம் குறையும். இந்த பகுதியில் சாலை எதிர்பார்க்காத அளவிற்கு சரிவாக இருக்கும். சாலையில் சாதாரணமாக செல்லும் போது அதை உணர முடியாது. ஆனால் புவியியல் அடிப்படையில் பார்த்தால் நாம் மலையில் இருந்து சரிவாக வாகனத்தை ஓட்டி இறக்குவது இறக்க வேண்டும். இதில் கார்கள் எளிதாக இறங்கிவிடும். காரணம் அதன் பிரேக். ஆனால் லாரிகளில் இருப்பது ஏர் பிரேக். அவை பிரஷர் வைத்து இயங்குபவை. இங்கே லாரியை வேகமாக இயக்கினால் அது கட்டுப்பாட்டை இழந்து சரியான ரோடு என்பதால் விபத்து ஏற்படும். அதுவே.. லாரியை பிரேக் பிடித்தபடியே மெதுவாக இயக்கினாலும் பிரேக் பிரஷர் குறைந்து குறைந்து பிரேக் பெயிலியர் ஆகிவிடும். லாரிகளில் உள்ளே ஏர் பிரேக் பெயிலியர் ஆவதே இங்கே நடந்த 90 சதவிகித விபத்துகளுக்கு காரணம் என்கிறார்கள் அங்கே உள்ள லாரி ஓட்டுனர்கள். பிரச்சனைக்கு தீர்வு: இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொப்பூர் கணவாயில் அதிக அளவில் ஸ்பீட் பிரேக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் வளைவுகளில் மெதுவாக செல்லும்படி ஸ்பீக்கர்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இங்கு 30 கிமீ வேகத்திற்கு மேல் செல்ல கூடாது என்று தொடர்ந்து இந்த ஸ்பீக்கரில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த வருடம் விபத்துகள் 23 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கே elevated சாலை எனப்படும் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது. இதையடுத்து இங்கே தற்போது உயர்த்தப்பட்ட சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தொப்பூர் கணவாயில் இன்னொரு விபத்து ஒன்றும் நேற்று ஏற்பட்டு உள்ளது.தொப்பூர் - ஓமலூர் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post