இந்தியாவின் இளம் சி.இ.ஓ! ரூ. 4300 கோடி சொத்து: யார்ரா அந்த பையன்?

post-img
மும்பை: இந்தியாவின் இளம் சி.இ.ஓ. என்ற அடையாளத்தைப் பெற்றுள்ள இந்தப் பாலிச்சா யார்? அவர் எப்படி இந்த இடத்தை எட்டிப் பிடித்தார் தெரியுமா? இந்தியாவின் பெரிய பலமே நம் நாட்டில்தான் இளைஞர்கள் சக்தி அதிகம் இருக்கிறது. சீனா போன்ற மக்கள் தொகையில் வளர்ந்த நாடுகள் கூட இளைய சக்திகள் என்று வரும்போது இந்தியாவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலம் உருவாகி இருக்கிறது. இந்தியாவின் பணக்காரர் யார் என்றால் உடனே கூகுள் உதவி இல்லாமலே பலரும் அந்தப் பணக்காரர் பெயரைச் சொல்லிவிடுவார்கள். பழைய தலைமுறையைக் கேட்டால் திருபாய் அம்பானி என்பார்கள். அது வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம். இன்று மோடி பிரதமராக இருக்கும் காலம். ஆட்சி மாறும் போது காட்சி மாறாதா என்ன? இன்று அதானி அந்த இடத்தை நிரப்பி இருக்கிறார். ஆனால், இந்தப் பணக்கார சாம்ராஜ்யத்தில் இளம் வயதிலேயே ஒருவர் கொடியை நாட்டி உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர்தான் இந்தியாவின் இளம் சி.இ.ஒ. இவர் சொத்தின் மதிப்பு என்ன தெரியுமா? அதற்கு முன்னதாக இவர் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். தலை எது எனக் கண்டுபிடித்துவிட்டால் வால் தானாக பின்னால் வந்துவிடும் இல்லையா? இந்த இளம் சி.இ.ஓ.வின் பெயர் ஆதித் பாலிச்சா. ராக்கெட் வேகத்தில் வேலை பார்த்து வரும் கம்பெனியின் சி.இ.ஓ. இவர். அது என்னது? ஆன்லைன் வர்த்தகத்தில் அசைக்கமுடியாத அளவுக்கு உயர்ந்து நிற்கும் Zeptoவின் தலைமை அதிகாரி இவர்தான். இந்த இளம் வயதில் BigBasket, Dunzo, Amazon ஆகிய பன்னாட்டு கம்பெனிகளுடன் போட்டிப் போடுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஆகஸ்ட் 2024 நிலவரப்படி Zepto கிட்டத்தட்ட ரூ.11,600 கோடிக்கும் ( யுஎஸ்டி 1.4 பில்லியன்) மதிப்பை எட்டியுள்ளது என்றால் சும்மாவா? ஆதித் பாலிச்சா கடந்த 2001 இல்தான் பிறந்தார். இப்போது அவருக்கு 24 வயதுதான் ஆகிறது. இன்று அவர் இந்தியாவின் இளைய பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ள நிறுவனத்தின் சி.இ.ஓகளில் ஒருவர். கோவிட்-19 தொற்றுநோய் அவரது கல்வியைக் கடுமையாகப் பாதித்தது. வகுப்புகளில் மெய்நிகர் முறையில் பாடம் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து dropped out ஆனார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் கற்று அவரது கனவை எட்டிப்பிடித்தார். . பாலிச்சாவின் சொத்து மதிப்பு ரூ.4,300 கோடி. இதனால் இந்தியாவின் பணக்கார தொழில்முனைவோரின் வரிசையில் அவர் இணைந்துள்ளார். அவரது இளவயது நண்பர் கைவல்ய வோஹ்ரா இணைந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாலிச்சா தொழில்முனைவோர் வாழ்க்கை 17 வயதில் ஆரம்பித்தது. பல அடிகளை தொழிலில் சந்தித்தார். 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில்தான் Zepto நிறுவனத்தைத் தொடங்கும் யோசனை அவர் மனதில் உருவானது. அந்தக் கனவு இன்று இவரை தொழிலதிபராக மாற்றி உள்ளது. இது இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத் துறையில் ஒரு பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. கம்பெனி தொடங்கப்பட்ட 5 மாதங்களில் 500 மில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டியது. இரண்டாவது ஆண்டின் இறுதியில் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்தது. அதன் மூலம் இந்தியாவில் உள்ள பணக்கார கம்பெனியின் இளம் சி.இ.ஓ. என்ற உயர்ந்த இடத்தை இவர் தட்டிச் சென்றுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post