இஸ்ரேல் மீதான பாசம்.. சவூதி அரேபியாவை ஏமாற்றிய அமெரிக்கா.. துருக்கியில் இருந்து வரும் போர் விமானம்

post-img
ரியாத்: அமெரிக்காவின் 5ம் தலைமுறை எஃப் 35 ரக போர் விமானத்தை சவூதி அரேபியா வாங்க ஆர்வம் காட்டி வந்தது. இந்த விமானத்தை வழங்குவதாக 4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா கூறிய நிலையில் தொடர்ந்து இழுத்தடித்து வந்தது. இதன் பின்னணியில் இஸ்ரேல் மீதான பாசம் இருப்பது உறுதியான நிலையில் சவூதி அரேபியா தற்போது துருக்கியின் கான் 5ம் தலைமுறை விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது. சவூதி அரேபியா - அமெரிக்கா இடையே நல்ல நட்பு என்பது உள்ளது. இருநாடுகள் இடையே வணிக ரீதியிலான நல்ல உறவு அமைந்துள்ளது. அமெரிக்காவிடம் 5ம் தலைமுறை விமானம் உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை லாக்ஹிட் மார்ட்டின் எஃப் 22 ராப்டர் (Lockheed Martin F-22 Raptor) மற்றும் லாக்ஹுட் மார்ட்டின் எஃப் 35 லைட்னிங் II (Lockheed Martin F-35 Lightning II) ஆகிய 5ம் தலைமுறை விமானங்கள் உள்ளன. இதுதவிர ரஷ்யா மற்றும் சீனாவிடம் மட்டுமே 5ம் தலைமுறை போர் விமானங்கள் உள்ளன. இந்நிலையில் தான் அமெரிக்காவிடம் இருந்து லாக்ஹுட் மார்ட்டிங் எஃப் 35 லைட்னிங் II எனும் போர் விமானத்தை வாங்க சவூதி அரேபியா முடிவு செய்தது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கிய நாடாக உள்ள நிலையில் விமானப்படையை வலுப்படுத்தும் கட்டாயம் சவூதி அரேபியாவுக்கு உள்ளது. இதனால் கடந்த 2017 ம் ஆண்டில் இருந்தே சவூதி அரேபியா, அமெரிக்காவிடம் இருந்து எஃப் 35 ரக போர் விமானத்தை வாங்க விருப்பம் தெரிவித்தது. தொடர்ந்து சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா நாட்டின் பிரதிநிதிகள் பலக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமெரிக்கா, எஃப் 35 ரக போர் விமானத்தை சவூதி அரேபியாவுக்கு வழங்க ஒப்புக்கொண்டது. இதுதொடர்பான அறிவிப்பு என்பது கடந்த 2020ம் ஆண்டு வெளியானது. இதனால் சவூதி அரேபியா மகிழ்ச்சியடைந்தது. ஆனால் அமெரிக்கா கூறியபடி எஃப் 35 ரக போர் விமானத்தை சவூதி அரேபியாவுக்கு வழங்கவில்லை. தொடர்ந்து இழுத்தடித்து கொண்டே இருந்தது. இதன் பின்னணியில் சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அதாவது ஏமன் உள்நாட்டு போரில் சவூதி அரேபியா தலையிட்டது, சீனாவுடன் ராணுவ ஒத்துழைப்பை சவூதி அரேபியா அதிகரித்தது உள்ளிட்டவை முக்கியமானதாகும் . இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு விஷயம் உள்ளது. அதாவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் உள்ளது. சுற்றி சுற்றி இஸ்லாமியர்களின் நாடுகள் அதிகம் உள்ள நிலையில் இஸ்ரேல் மட்டும் யூதர்களின் தேசமாக மத்திய கிழக்கில் உள்ளது. இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நல்ல நட்பு உள்ளது. அதோடு இருநாடுகள் இடையே முக்கியமான ஒப்பந்தம் ஒன்று உள்ளது. அதாவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சார்பில் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ தளவாடங்கள் என்பது மற்ற நாடுகளை விட நவீனத்துவத்துடன் இருக்க வேண்டும் என்பது தான் அந்த ஒப்பந்தமாகும். அதன்படி அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானத்தை இஸ்ரேல் பயன்படுத்தி வரும் சூழலில் அதனை சவூதி அரேபியாவுக்கும் விற்பனை செய்வது என்பது இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் இருக்கும். இதனால் அமெரிக்கா தொடர்ந்து சவூதி அரேபியாவுக்கு எஃப் 35 ரக போர் விமானத்தை விற்பனை செய்யாமல் இழுத்தடித்து வந்தது. மேலும் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் பெண்டகன் சார்பில், ‛‛சவூதி அரேபியா எஃப் 35 ரக போர் விமானத்தை வாங்க ஆர்வமாக உள்ளது. இதுபற்றி மீண்டும் ஆலோசனை செய்து கடைசி கட்ட முடிவு எடுக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் மாதம் ஆனபோதிலும் கூட அமெரிக்கா சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் சவூதி அரேபியா கடும் அதிருப்தியடைந்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து 5ம் தலைமுறை விமானம் கிடைக்காததால் சவூதி அரேபியா ரஷ்யா, சீனாவை நோக்கி நகரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ரஷ்யாவிடம் மிக் 31 (MiG-31) மற்றும் சுகோய் சு-75 (Sukhoi Su-75) என்ற 5ம் தலைமுறை விமானங்களும், சீனாவை எடுத்து கொண்டால் செங்குடு ஜே -20 (Chengdu J-20) மற்றும் சென்யாங் ஜே-35 (Shenyang J-35) ரக 5ம் தலைமுறை விமானங்களும் உள்ளன. இருப்பினும் அந்த நாடுகளும் விமானங்களை வழங்க யோசிக்கலாம். அதோடு ஒருவேளை ரஷ்யா, சீனாவிடம் இருந்து விமானம் வாங்கும்போது அமெரிக்காவின் உறவில் அது விரிசலை ஏற்படுத்தலாம் என்று சவூதி அரேபியா நினைக்கிறது. ஏனென்றால் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்காவுக்கு மோதல் போக்கு உள்ளது. இருப்பினும் கூட தனது விமானப்படையை வலிமைப்படுத்தும் வகையில் வேறு முக்கிய முடிவை சவூதி அரேபியா எடுத்துள்ளது. அதாவது சவூதி அரேபியா 4+ தலைமுறை போர் விமானமான பிரெஞ்ச் டசால்ட் ரபேல் அல்லது இரோபைட்டர் டைபூன் விமானங்களை வாங்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது சவூதி அரேபியா துருக்கியுடன் கைகோர்த்துள்ளது. அதாவது துருக்கி நாட்டின் கான் 5ம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் (KAAN 5th generation stealth fighter jet) வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துருக்கி தலைநகர் இஸ்தான் புல்லில் சவூதி அரேபியாவின் விமானப்படை காமாண்டர் துர்கி பின் பந்தார் அல் சாத் சவூதி அரேபியா விமான போக்குவரத்து துறை அமைச்சர் காலித் பின் உசேன் அல் பியாரி மற்றும் துருக்கி பாதுகாப்பு துறை இண்டஸ்ட்ரிஸ் தலைவர் ஹல்க் கோர்கன் ஆகியோருடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் சவூதி அரேபியா சார்பில் துருக்கியிடம் இருந்து கான் 5ம் தலைமுறை விமானம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துருக்கியை எடுத்து கொண்டால் அந்த நாடும் தற்போது தான் 5ம் தலைமுறை விமான தயாரிப்பை தொடங்கி உள்ளது. ட்ரோன், விமான தொழில்நுட்பத்தில் துருக்கி முன்னணியில் இருந்தாலும் கூட கடந்த ஆண்டு (2024)பிப்ரவரியில் தான் 5ம் தலைமுறை விமானத்தை துருக்கி தயாரித்தது. 2028ம் ஆண்டுக்குள் 20 விமானங்களை துருக்கி விமானப்படையில் சேர்க்க திட்டமிட்டுள்ள நிலையில் அந்த நாட்டிடம் இருந்து 5ம் தலைமுறை விமானத்தை வாங்க சவூதி அரேபியா முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post