புத்தாண்டு பலன் 2025: உங்கள் ராசிக்கு தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்?.. எதில் கவனம் தேவை

post-img
புத்தாண்டு 2025: வரும் புத்தாண்டு பலவிதமான மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரப்போகும் ஆண்டாக அமையப் போகிறது. அந்த வகையில், தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு 2025 புத்தாண்டு என்னவிதமான பலன்களைத் தரப் போகிறது. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... (New year rasi palan for businessmans and entrepreneur) மேஷம்: எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உழைப்புக்கேற்ற பலன் எதுவுமே இல்லை என்று வருத்தப்பட்டவர்களுக்கு எல்லாம் இந்தப் புத்தாண்டு சிறப்பாந காலமாக இருக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனையுடன் தொழிலில் முதலீடு செய்து அதில் லாபத்தைக் காண்பீர்கள். அலுவலகத்தை, கடைகளை இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றும் வாய்ப்பு உண்டாகும். வேலையாட்களுக்கும் தொழிலைக் கற்றுக் கொடுப்பது நல்லது. தொழில் ரகசியங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உணவகங்கள், விடுதிகல், மரப் பொருள் விற்பனையாளர்கள், பர்னிச்சர் தொழில் செய்வோருக்கு நல்ல ஆதாயம் உண்டாகும். ரிஷபம்: வியாபாரம், தொழிலில் பெரிய முதலீடுகளைப் போடாமல் சிறிய முதலீடுகளைப் போட்டு செய்வது நல்லது. மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வது லாபத்தை தரும். வியாபாரம், தொழில், கடையை விரிவுபடுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களிடம் நல்ல முறையில் நடப்பது நல்லது. வேலைக்கு வரும் ஊழியர்களால் டென்ஷன், விவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருந்துக் கடை, துணி வியாபாரம், எண்டர்பிரைசஸ் வைத்திருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மிதுனம்: உங்களுடைய செயல்களால் போட்டியாளர்களுக்கு இனி டென்ஷன் அதிகரிக்கும். புதிய புதிய திட்டங்களை வகுத்து அதில் லாபம் காண்பீர்கள். விற்காமல் இருந்த பொருள்கள் அனைத்தையும் விற்றுத் தீர்ப்பீர்கள். சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கல்களில் இருந்து வந்த அனைத்து சிக்கல்களும் தீரும். தொழில் கூட்டாளிகளுடன் இருந்து வந்த மனத்தாங்கல்கள் தீரும். கருத்து வேறுபாடுகள் மறைந்து மீண்டும் ஒன்று சேர்வீர்கள். கடகம்: வியாபாரம், தொழில், கடையை பெரிய முதலீடுகளைப் போட்டு விரிவுபடுத்தியிருந்தாலும் அதில் சில நஷ்டத்தைக் கண்டிருப்பீர்கள். வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு அந்தப் பொருளை கொள்முதல் செய்து தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். என்ன மாற்றங்களை எல்லாம் செய்யலாம் என்று நினைத்தீர்களோ அவை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய தொழில் சார்ந்த விளம்பரங்கள் மூலம் வியாபராத்தைப் பெருக்கி நிதி ஆதாயம் காண்பீர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்காமல் இருப்பது நல்லது. உங்களுடைய அனுபவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றியடைவீர்கள். வேலையாட்களிடம் கொஞ்சம் கறாராக இருப்பது நல்லது. மருந்து துறை, ரசாயன துறைகளில் உள்ளவர்களுக்கு சிறந்த காலமாக இருக்கும். பங்குதாரர்களால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படும். புதிய ஒப்பந்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிம்மம்: மற்ற தொழில் செய்பவர்களைப் பார்த்து நீங்களும் பெரிய முதலீடுகளைப் போடாமல் இருப்பது நல்லது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக லாபத்தை குறைத்து பொருள்களை விற்பனை செய்யும் நிலை ஏற்படும். வேலை ஆட்களால் சிறு சிறு பிரச்னைகள் வந்து போகும். கடன் தருவதால் பெரிய பிரச்னைகளில் சிக்கும் வாய்ப்பு உண்டு. கடன் தராமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். எலக்ட்ரிக்கல் துறை, ஹோட்டல், புரோக்கரேஜ் போன்ற துறைகளில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பார்ட்னர்களுடன் கருத்து மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கன்னி: வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவதற்காக சலுகைகளை அறிவிப்பீர்கள். பெரிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது. நல்ல அனுபவ சாலிகளை பணிக்கு அமர்த்துவீர்கள். கடன் தராமல் இருப்பது நல்லது. ஏஜென்சி, புரோக்கரேஜ் தொழில்களைச் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். ரியல் எஸ்டேட், இரும்பு பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் துறை தொழிலைச் செய்பவர்களுக்கு ஆதாயம் ஏற்படும். துலாம்: தொழில், வியாபாரத்தில் மாற்று யோசனைகளைக் கொண்டு முன்னேற்த்தைக் காண்பீர்கள். உங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் முன்னேறி இருப்பார்கள். அவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். திடீர் லாபம், பணவரவு, புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி ஏற்படும். ரியல் எஸ்டேட், மருந்து துறையில் லாபம் உண்டாகும். பங்குதாரர்களுடன் ஏற்பட்டு வந்த பிரச்னைகள் அனைத்தும் பனி போல் விலகும். விருச்சிகம்: புதிய புதிய திட்டங்களை வகுத்து அதில் வெற்றி காண்பீர்கள். பெரிய முதலீடுகளைப் போடாமல் இருப்பது நல்ல பலன்களைத் தரும். தேங்கியிருந்த பொருள்கள் அனைத்தையும் சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் ஏற்பட்டு வந்த பிரச்னைகள் தீரும். பழைய ஆட்களை மாற்றிவிட்டு அனுபவசாலிகளை வேலைக்கு அமர்த்துவீர்கள். வாடிக்கையாளர்களை ஈர்க்க புது திட்டங்களை செயல்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், உணவு, எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். தொழில், வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் பதவிகளைப் பெறுவீர்கள். உங்களிடம் இருந்து சென்று வேலையாட்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேர்வார்கள். பங்குதாரர்களை சேர்க்கும் வாய்ப்பு உண்டாகும். தனுசு: பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். விளம்பரம், சுவரொட்டி, துண்டுப் பிரசுரம் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவீர்கள். தொழில் போட்டியாளர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் தீரும். வேலையில் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். கமிஷன், கெமிக்கல் துறை, வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்பவர்கள் லாபத்தைக் காண்பீர்கள். பார்ட்னர்களின் துரோகங்களை மறந்து மீண்டும் ஒன்று சேருவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மகரம்: தொடர் சிக்கல்களால் பாதிக்கப்பட்டு வந்த மகர ராசிக்காரர்களுக்கு இனி நல்ல மாற்றம் ஏற்படும். சிக்கல்கள் அனைத்தும் தீரும். பண வரவு உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கை, மரியாதை உயரும். வேலை ஆட்களால் லாபம் காண்பீர்கள். துணிக் கடைகள், மருந்து துறைகள், ஹோட்டல் துறையினருக்கு ஆதாயம் ஏற்படும். புதிய கிளைகளை தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பிரச்சனை செய்து வந்த பங்குதாரர்கள் பணிந்து போவார்கள். உங்களுடைய கருத்து காது கொடுத்து கேட்பார்கள். புது ஒப்பந்தங்கள் கூடி வரும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்துக்கு கடையை மாற்றும் முயற்சியில் ஈடுபடலாம். கும்பம்: தொழில், வியாபாரத்தில் பொறுப்பாக இருப்பது நல்லது. பெரிய முதலீடுகளைப் போடுவதை தவிர்க்க வேண்டும். பங்குதாரர்கள் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில், கமிஷன், அரிசி மண்டி, எண்ணெய் மண்டி வைத்திருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஏஜென்சி, கிளைகளைத் தொடங்குவீர்கள். பண வரவு கணிசமாக இருக்கும். மீனம்: தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சரக்குகள் விற்றுத் தீரும். சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்து லாபமடைவீர்கள். மருந்து பொருள்கள், பர்னிச்சர், இரும்பு பொருள்கள் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு சார்பில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் விலகும். வேலையாட்கள், பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள். வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சலுகை, தள்ளுபடிகளை அறிவிப்பீர்கள். வியாபாரம் அமோகமாக நடைபெறும். நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். இனி தொட்டதெல்லாம் துலங்கும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post