சூரியன் நட்சத்திரப் பெயர்ச்சி: புத்தாண்டு பிறக்க ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளன. வரும் டிசம்பர் 29 ஆம் தேதி சூரிய பகவான் பூரட்டாதி நட்சரத்திற்குள் நுழையவுள்ளார். சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... (Lucky Zodiac signs)
ஒவ்வொரு கிரகங்களுமே குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இன்னொரு ராசிக்கும், ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு தங்களின் இடத்தை மாற்றும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. அவ்வாறு இந்த கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தாக்கமானது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும், சில ராசிகளுக்கு பாதகத்தையும் ஏற்படுத்தும். (Lord sun transit)
மாதம்தோறும் கிரகங்களின் நிலைகளின் மாற்றம் ஏற்படும். 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் உள்ளோம். இன்னும் ஒரு சில நாட்களில் 2025 புத்தாண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளோம். இந்நிலையில், டிசம்பர் 29 ஆம் தேதி சூரியன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவக்கிரகங்களின் தலைவனான சூரியன், சுக்கிரனின் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கிறது.
சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்திலேயே அதிர்ஷ்டமும், பண மழையும் கொட்டப் போகிறது. ஆண்டின் ஆரம்பமே மகிழ்ச்சியை அள்ளித் தரப்போகிறது. சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் (Mesam rasi palan): சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தரப் போகிறது. நீண்ட நாட்களாக செய்து முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தையும் முடித்து அதில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் உங்களுடைய நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தால் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தகைப் போடும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபமும், வருமானமும் கிடைக்கும். பணத்தை சேமிக்கத் தொடங்குவீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
மிதுனம் (Midhunam rasi palan): பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையும் மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றிகளை அள்ளித் தரும் காலமாக இருக்கும். உங்களுடைய உழைப்புக்கான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் உறவு மேம்படும். தொழில், வியாபாரம் சார்ந்த சுப பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி சார்ந்த ஆதாயம் உண்டாகும். அதில் லாபம் காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பயணம் மேற்கொள்வது குறித்து திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம் (Viruchigam rasi palan): சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் காலமாக இருக்கும். வந்து சேர வேண்டிய பணங்கள் உங்களிடம் வந்து சேரும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்களால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உங்களுடைய உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு வெற்றி காண்பீர்கள். நிதி சார்ந்த ஆதாயம் உண்டாகும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.