சென்னை: சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வங்கி கிளைகள் உள்ளன. பல ஆயிரம் ஊழியர்களுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
டேட்டா என்ஜினியர்/ஆய்வாளர் - 03
டேட்டா விஞ்ஞானி - 02 இடுகைகள்
டேட்டா-ஆர்கிடெக்ட்/ கட்டிடக் கலைஞர்/ வடிவமைப்பாளர்/மாடலர் - 02
ML Ops Engineer - 02
ஜெனரல் AI நிபுணர்கள் - 02
SEM & SMM - 01
எஸ்சிஓ ஸ்பெஷலிஸ்ட் - 01
கிராஃபிக் டிசைனர் & வீடியோ எடிட்டர் - 01
உள்ளடக்க எழுத்தாளர் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) - 01
MarTech நிபுணர் - 01
உற்பத்தி சப்போர்ட் / தொழில்நுட்ப ஆதரவு பொறியாளர் - 10
டிஜிட்டல் பேமென்ட் அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் - 10
டெவலப்பர்/ டேட்டா சப்போர்ட் என்ஜினியர் - 10
என மொத்தம் 62 ஐடி துறை சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் துறை சார்ந்த பிரிவில் தொழில் நுட்ப கல்வி படித்து இருக்க வேண்டும். அதாவது, பி இ/ பிடெக், எம்.சி.ஏ உள்ளிட்ட துறைகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
வயது வரம்பு: வயது வரம்பு பணிகளுக்கேற்ப மாறுபடுகிறது. குறைந்த பட்சமாக 23 வயது முதல் அதிகபட்சம் 38 வயது உடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ பெண்கள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்; 28.12.2024 ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்; 27.01.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.centralbankofindia.co.in/en/recruitments