HCL வேலைவாய்ப்பு.. சென்னையில் ஜனவரி 4ல் இண்டர்வியூ.. சோழிங்கநல்லூரில் பணி நியமனம்

post-img
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல்-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஜனவரி 4ம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற உள்ளது. எச்சிஎல் டெக் (HCL Tech) எனும் எச்சிஎல் நிறுவனம் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. இன்சூரன்ஸ், பேங்கிங், சில்லரை மற்றும் கார்ப்பரேட் பேங்கிங் பிரிவுகளில் சர்வீஸ்களை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் உத்தர பிரதேசம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: அதன்படி தற்போது எச்சிஎல் டெக் நிறுவனத்தில் Healthcare Voice Inbound & Outbound பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Healthcare, Inbound & Outbound Calls, International Voice support in Healthcare Domain, RCM, Denial Management, Provider, Payer Experience, Claims Processing, AR Calling, Claims Query, Entire RCM Cycle, உள்ளிட்டவற்றை சார்ந்து பணி என்பது இருக்கும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 4ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech Sholinganllur Elcot Campus, Tower 4, Chennai -119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு Face To Face இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு மொத்தம் 3 பிரிவுகளில் இண்டர்வியூ என்பது இருக்கும். அதன்படி HR Screening, Versant Test, Operations Interview உள்ளிட்டவற்றின் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூவுக்கு செல்வோர் 3 Resume வைத்திருக்க வேண்டும். Versant Test -க்கு ஹெட்போன் வைத்திருக்க வேண்டும். லேப்டாப்புகள் கொண்டு செல்ல அனுமதியில்லை. தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சம்பளம் என்பது Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab(Chargeable)வசதி உள்ளது. இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலம் பயிற்சி என்பது வழங்கப்படும். அதேபோல் விண்ணப்பதாரர்கள் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும். பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Related Post