ரயில்வேயில் வேலை.. 4 ஆயிரம் பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..

post-img
சென்னை: இந்தியன் ரயில்வேயில் 4,232 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏசி மெக்கானிக், ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். 10 ஆம் வகுப்பு மற்றும் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. மண்டல வாரியாக ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி நிரப்புவது வழக்கம். இது போக ரயில்வேயில் அப்ரெண்டீஸ் எனப்படும் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பணியிடங்களும் அவ்வப்போது தேர்வுகள் இன்றி மார்க் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? ஆகியவை பற்றி இங்கே பார்க்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. ஏசி மெக்கானிக் - 143 2. ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் - 32 3. கார்பெண்டர் - 42 4. டீசல் மெக்கானிக் - 142 5. எலக்ட்ரானிக் மெக்கானிக் - 856. 6. இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் - 10 7. எலக்ட்ரீசியன் - 1053 8. எலக்ட்ரிக்கல் (எஸ்&டி) (எலக்ட்ரிசியன்) - 10 9. மின் பராமரிப்பு (எலக்ட்ரிசியன்) - 34 10. ரயில் விளக்கு (எலக்ட்ரீஷியன்) - 34 11. ஃபிட்டர் -1742 12. மோட்டார் மெக்கானிக் வாகனம் (MMV) - 08 13. மெஷினிஸ்ட் -100 14. மெக்கானிக் மெஷின் டூல் பராமரிப்பு (MMTM) - 10 15. பெயிண்டர் - 74 16. வெல்டர் - 713 என மொத்தம் 4,232 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. கல்வி தகுதி: அனைத்து பணியிடங்களுக்கும் பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ தொழிற்படிப்பு முடித்து இருக்க வேண்டும். 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தியானவராக இருத்தல் வேண்டும். 24 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது. 28.12.2024 அன்றைய தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மெரிட் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் அப்ரெண்டீஸ் பணியாளர்களுக்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிற்சிகள் அளிக்கப்படும். விண்ணப்ப கட்டணம்: தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 28.12.2024 ஆகும். கடைசி தேதி: 27.01.2025 ஆகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. http://www.scr.indianrailways.gov.in/ என்ற வெப்சைட் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை படிக்க: http://olympiantek.in/ACT-APP-RRC-2024-NOTIFICATION-2024-25.pdf

Related Post