டிகிரி போதும்..60,000 வரை சம்பளத்தை அள்ளி தரும் எஸ்பிஐ! 2025ல் சூப்பர் வேலைவாய்ப்பு.. ஒரே வாரம் டைம்

post-img
சென்னை: இந்திய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கும் மொத்தம் 340 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஏராளமான பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதற்கான பணியாளர்கள் ஆட்சேர்க்கை ஐபிபிஎஸ் மூலமாகவும், விண்ணப்பங்கள் அடிப்படையில் சில நேரடியாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்திய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலை வகையில் கீழ் வரும் இந்த பணியில் 13,735 காலி பணியிடங்கள் இருக்கிறது.கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 13,400 காலிப் பணியிடங்கள் இருக்கிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும்340 காலி பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. காலி பணியிடங்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், ஜெனரல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 300 காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். 2025 ஜனவரி 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்.. பணியின் பெயர்: ஜூனியர் அசோசியேட்ஸ் ( வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவு) காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 13,735 ( இந்தியா முழுவதும்) ( தமிழ்நாடு-336, பாண்டிச்சேரி - 4) வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 28க்குள் இருக்க வேண்டும். 2.4.1996 தேதிக்கு முன்பாகவும், 1.4.2004க்கு பின்பும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. தகுதி: அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பதிவு செய்யும் நாளில் பட்டதாரி என்பதற்கான செல்லுபடியாகும் மதிப்பெண் சான்றிதழ் / பட்டப்படிப்பு சான்றிதழை வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தைக் குறிப்பிட வேண்டும். தேர்வு நடப்பது எப்படி?: ஜூனியர் அசோசியேட்ஸ் பணிக்கு மூன்று தேர்வுகள் நடைபெறும். அதன்படி முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதி தேர்வு ஆகியவற்றின் தேர்ச்சி அடிப்படையில் பணியிடத்திற்கு அமர்த்தப்படுவார்கள். பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழ் மொழி தகுதி தேர்வு கிடையாது. மதிப்பெண் சான்றிதழை சரிபார்த்த பிறகு தேர்வு முடிவுகள் ஆனது வெளியிடப்படும். ஊதியம்: மத்திய அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,050 முதல் ரூ.64,480 ரூபாய் வரை ஊதியமாக வழங்கப்படும். ஆன்லைன் விண்ணப்பம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், https://bank.sbi/web/careers/current-openings மற்றும் https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற எஸ்பிஐ வங்கியில் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் Recruitment of Junior Associates 2024 என்பதை க்ளிக் செய்து ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம்: ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் கட்டணமாக ரூ.750 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ST, மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் கிடையாது. கடைசி நாள்: 7.1.2024ஆம் தேதிக்கும் ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://ibpsonline.ibps.in/sbidrjadec24/

Related Post