பிளாக் ஷிப் என்ற Youtube தளத்தில் வெளியான வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. பள்ளியில் படிக்கும் போது கதை எழுதுவதில் அதீத ஆர்வம் பெற்றிருந்த நடிகை நந்தினி.
பள்ளிப்படிப்பை முடித்ததும் மீடியாவில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மீடியா சம்பந்தமான துறையை படிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் எழுதுவது, இயக்குவது போன்ற விஷயங்கள் மட்டும் ஆர்வம் இருந்த காரணத்தினால் நடிப்பின் மீது பெரிய ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கிறார் நந்தினி.
ஆனால் பிளாக் ஷீப் குழு இவரை நடிக்க சொல்லியும் கேட்டதால் நடித்துப் பார்க்கலாம் என முயற்சி செய்து சிறிது சிறிதாக நடிப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இது குறித்து பிரபல வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பெண்கள் சம்பந்தமான விஷயங்களை பேசவோ.. அல்லது செயல்படுத்தவோ.. யோசிக்க கூடிய இந்த காலகட்டத்தில்.. அது குறித்து வீடியோக்கள் வெளியிடுவது என்றால் எவ்வளவு கஷ்டமான விஷயம்.
நாம் அன்றாடம் பலதரப்பட்ட மக்களை பார்க்கிறோம். அவர்களை சந்திக்கிறோம். அவர்களைப் பற்றி கேள்விப்படுகிறோம். குறிப்பாக பெண்கள், அவர்களை நம்முடைய வாழ்க்கையில் அப்படியே ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்று விடுகிறோம்.
அப்படிப்பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும்..? அவர்கள் இந்த சமூகத்தை எப்படியான கோணத்தில் பார்க்கிறார்கள். யோசிக்கிறார்கள் என்பதை மையக்கருவாக கொண்டு இவள் என்ற தலைப்பில் ஒரு சீரிஸ் பண்ணலாம் என்று முடிவு செய்தோம்.
இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால்..? நான் கல்லூரி படிக்கும் போது விலைமாதுக்கள் மற்றும் அவர்களுடைய மனநிலையை அறிந்து ஒரு ப்ராஜெக்ட் செய்திருந்தேன்.
அவர்களுடைய வாழ்க்கை முறை, அவர்களுடைய எண்ணம், சிந்தனை, மனநிலை, போராட்டங்கள் என அனைத்தும் பற்றி நன்கு அறிந்து ஆய்வு செய்து எழுதி இருக்கிறேன்.
அந்த கண்ணோட்டம் தான் “இவள்” உருவாக காரணம். விலைமாதுக்கள் பற்றி தெரிந்து கொண்டபோது எனக்கு மனது பாரமாக இருந்தது. அவர்களுக்குள்ளும் தனிப்பட்ட உணர்வுகள், தனிப்பட்ட சூழல் எல்லாமே இருக்கிறது.
அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது உண்மையிலேயே அவர்கள் என்ன உணர்கிறார்களோ.. அதை அப்படியே புரிந்து கொள்ள முடிந்தது.. என்னை மிகவும் பாதித்த என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு கதை என்றால் இதுதான் இதற்காக அவர்களிடம் பேசும் போது மற்ற நாடுகளில் இருப்பது போல இதயும் சட்டமாக்குவது. அவர்களுக்கான அங்கீகாரம் இதையெல்லாம் தாண்டி எங்களை கடினமாக பார்க்காதீங்க எங்களை அசிங்கமாக பாக்காதீங்க என்பதுதான். எல்லோரும் சொன்ன ஒத்த கருத்து.
இது ஒரு வேலை.. எங்களின் வாழ்வாதாரத்துக்காகவும்.. சூழல் காரணமாகவும்.. நாங்கள் இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறோம். அவ்வளவுதான். இந்த வேலை வெளிநாடுகளில் எப்படி..? என்று எங்களுக்கு தெரியவில்லை.
ஆனால், இங்கே தவறாக.. அருவருப்பாக தான் பார்க்கிறார்கள். நாங்கள் யாரும் இந்த வேலையை விரும்பி செய்யவில்லை. இந்த வேலை தான் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆசையும் கிடையாது.. சூழல், வேறு வழியும் இல்லை.. அதனால் தான் இந்த இடத்தில் இருக்கிறோம்.
அதை புரிந்து கொண்டு எங்களை சக மனிதர்களாக பார்க்க வேண்டும். பார்வையாலேயே எங்களை கொலை செய்கிறார்கள். அப்படி செய்யாதீர்கள். உடல் ரீதியாக ஒவ்வொரு முறையும் நாங்கள் கொலை செய்யப்படுகிறோம்.
அதை கூட எங்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், பார்வையால் எங்களை கொள்ளுகிறார்கள்… அதுதான் எங்களை ரணமாகிறது என்று அவர்கள் சொல்லும்போது அவர்களுடைய உணர்வை புரிந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் சார்பாக முன்வைக்கிறோம் என்கிறார் நடிகை நந்தினி.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.