புத்தாண்டு 2025: மிதுனம், கன்னி, தனுசு ராசிக்கு ஏற்படும் பெரிய மாற்றம்.. இதில் மட்டும் கவனமா இருங்க

post-img
புத்தாண்டு 2025: 20245 ஆம் ஆண்டு நிறைவடையப் போகிறது. புத்தாண்டு பிறக்க இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே உள்ளது. புத்தாண்டில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளதால் 12 ராசிகளுக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மிதுனம், கன்னி, தனுசு ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் ஏற்படப் போகும் மாற்றங்கள், சாதக, பாதகமான பலன்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... (New year rasi palan) மிதுனம்: இந்தப் புத்தாண்டில் மிதுன ராசியைப் பொருத்தவரை முதல் ஏப்ரல் மாதம் வரை விரைய குரு, ஏப்ரலுக்குப் பிறகு ஜென்ம குரு. ஜென்ம குரு வரும்போது மோசமான காலமாகத்தான் இருக்கும். மிதுன ராசிக்கு பாதகாதிபதி குரு என்பதால் அவர் ஜென்ம குருவாக வரும்போது திட்டம் போட்டுவந்த அனைத்து காரியங்களும் தவறாகும். அதிக செலவுகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் உண்டாகும். (New year rasi palan for midhunam) ராசிக்கு ஜென்ம குருவாக வந்தாலும் ஏழாம் இடமான தன்னுடைய வீட்டையே குரு பார்ப்பதால் கெடுபலன்கள் எதுவும் ஏற்படாது. பாசிட்டிவான விஷயங்கள் நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். தொழிலில் நல்ல கூட்டாளி கிடைத்தால் பரவாயில்லையே என்று நினைப்பவர்களுக்கு நல்ல பார்ட்னர் கிடைப்பார்கள். ராசிக்கு ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தையும் பார்ப்பதால் பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும். கடன் வாங்கி சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. நாட்பட்ட நோய்களில் இருந்து விடுதலையாவீர்கள். ராசிக்கு ஒன்பதாம் இடத்துக்கு ராகு செல்வதால் தகப்பனாருக்கு வைத்தியச் செலவுகள் உண்டாகும். கேது விலகுவதால் தாய்க்கு இருந்து வந்த நோய்கள் தீரும். மகன், மகள்களுக்கு திருமணமாவதற்கான வாய்ப்புகள் உண்டு. ராசிக்கு ஜென்ம குரு வந்தால் உங்களுடைய பேச்சால்தான் நீங்கள் பிரச்னையை சந்திப்பீர்கள். அடுத்தவர்கள் பிரச்னையில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில் ஸ்தானம் கொஞ்சம் மெதுவாகத்தான் இருக்கும். திருமண வரன்களை தவறாக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவிக்கிடையே பிரச்னைகள் ஏற்படும். பெரியவர்களிடம் கொண்டு போகாமல் இருப்பது நல்லது. கன்னி: 2025 புத்தாண்டில் கன்னி ராசியில் இருந்து கேது பகவான் விலகுவது நல்ல விஷயம். ராசிக்கு ஏழாம் இடத்தில் கண்டகச் சனி வருவதால் கொஞ்சம் பாதகம். பதற்றம், ஏற்கனவே இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும். தைரியம், பலம் உண்டாகும். கைவிட்டுப் போன பொருள்கள், பதவிகள் வந்து சேரும். சொத்து சேரும். அதன் மூலம் பகை மற்றும் அவமானம் ஏற்படும். (New year rasi palan for kanni) ஆறாம் இடத்துக்கு ராகு வருவதால் கடன் அதிகமாகும். ஆனாலும் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. வேலை விஷயமாக வெளியூர் செல்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். பெண் ஜாதகமாக இருந்தால் கணவருடன் அதிகமாக சண்டை வரும். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தனுசு: புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு ராசியாதிபதி ஆறாம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்துக்கு போகிறார். ஏப்ரல் மாதத்துக்கு மேல் உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். முதல் நான்கு மாதங்கள் கடன் வாங்கக் கூடிய சூழலும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் கடனை அடைப்பதற்கான சூழலும் ஏற்படும். தவறான உணவுப் பழக்கங்கள் உண்டாகும். உடல் பருமன் உண்டாகும் வாய்ப்பு உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. (New year rasi palan for dhanusu) ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் கேது செல்வதால் நல்ல நபர்களின் நட்புகளை இழக்கும் வாய்ப்புண்டு. நண்பர்களின் பேச்சை கேட்காததால் சில இழப்புகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. சொந்த தொழிலில் கடின உழைப்பைப் போடுவதன் மூலம் லாபம் கிடைக்கும் வாய்ப்புண்டு. அதன் மூலம் கடன்களை அடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். தனுசு ராசிக்காரர்கள் மூலமாக தனது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், உறவினர்கள் நற்பலன்களை அடைவார்கள். நீங்கள் மட்டும் செருப்பாகத் தேயும் சூழல் ஏற்படும். ஆனால் இந்த உழைப்புக்கான பலன் அடுத்த குருப்பெயர்ச்சியில் கிடைக்கும். இந்த ஓராண்டு படும் கஷ்டத்துக்கு அதன் பிறகு வரும் ஆண்டுகளில் சூப்பரான பலன்களைப் பெறுவீர்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post