இளநீர் கேட்ட கர்ப்பிணி மனைவி.. வேக வேகமாக தென்னை மரம் ஏறிய கணவர்.. அடுத்த செகண்டே ஆடிப்போன கடலூர்

post-img
கடலூர்: இளம் மனைவியை சந்திப்பதற்காக, விடுமுறையில் மாமியார் வீட்டுக்கு வந்திருந்தார் இளைஞர்.. அப்போது இளநீர் வேண்டும் என்று ஆசையாக கணவரிடம் கேட்டுள்ளார் மனைவி.. அப்போதுதான் இப்படியொரு சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த தெற்கு திட்டைகிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் சென்னை வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார்.. இதனால் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். ஆனந்தராஜ் மனைவி பெயர் நீதிகா. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. இப்போது நீதிகா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.. எனவே, சேத்தியாத்தோப்பு அருகே ஓடாக்கநல்லூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டில் வசித்து வருகிறாா். மாமியார் வீடு: இந்த நிலையில் நீதிகாவை பார்ப்பதற்காக ஆனந்தராஜ் சனி, ஞாயிறு விடுமுறையில், மாமியார் வீட்டுக்கு வந்தார். இவர்கள் வீட்டின் பின்புறத்திலேயே தென்னை மரங்கள் உள்ளன. எனவே, மனைவிக்கு இளநீா் பறிப்பதற்காக, தென்னை மரத்தில் ஆனந்தராஜ் ஏறினார். அப்போது மரத்திலிருந்து திடீரென தவறி விழுந்தார்.. ஆனால், கீழே விழுந்தபோது எதிர்பாராதவிதமாக மரத்தின் பக்கத்தில் கொட்டகைக்கு சென்று கொண்டிருந்த மின்ஒயரில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கியதில், ஆனந்தராஜ் பலத்த காயமடைந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆனந்தராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர்.. இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரண்ட் கம்பிகள்: குறுக்கே பாயும் கரண்ட் கம்பிகளால் அடிக்கடி உயிரிழப்புகள் நடந்து வருகின்றன. சமீபத்தில்கூட கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலும் மின்ஒயர் தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.. ரத்தினமணி நீலா தம்பதியருக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார்.. சம்பவத்தன்று துவைத்த ஈர துணிகளை காயப்போட, வீட்டின் பின் பகுதிக்கு சென்ற நீலா, இரும்பு கம்பியால் கட்டப்பட்டிருந்த கொடியில் துணியை போட்டார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால், சத்தமிட்டவாறு கீழே விழுந்தார். மனைவியின் அலறல் கேட்டு ஓடிச்சென்ற ரத்தினமணி அவரை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. தம்பதி பரிதாபம்: இதில் தம்பதி இருவருமே மயங்கி சரிந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், இருவரையும் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அதாவது, பக்கத்து வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக அந்த வீட்டில் உள்ளவர்கள், கரண்ட் இணைப்பு தந்திருக்கிறாரகள்.. அதனால் மின் கம்பியில் உராய்வு ஏற்பட்டு, ரத்தினமணி வீட்டின் இரும்பு கூரையில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இது தெரியாமல் அந்த கூரையுடன் இணைத்திருந்த இரும்பு கம்பியில் துணியை காயப்போட்ட போது, தம்பதி விபத்தில் சிக்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது. பரிதாபம்: இப்போது கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற இளைஞரும், குறுக்கே சென்ற மின்ஒயர் தாக்கி இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post