வருஷத்துக்கு 1000 பேர்.. கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் டார்கெட்! கோவை கார் வெடிப்பின் பகீர் பின்னணி!

post-img
சென்னை: கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் கூட்டாளிகளான அபு ஹனிபா, பவாஸ் ரஹ்மான், சரண் மாரியப்பனிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அபு ஹனிபா ஐஎஸ் அமைப்புக்கு ஆண்டுக்கு ஆயிரம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயித்ததாக பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கடந்த 2022ஆம் ஆண்டு அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது. கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்தது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்யூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது. இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் அலுவலகம் அமைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா ,முகமது அசாருதீன், ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 6 நபர்களை உபா சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. குறிப்பாக அவர்களில் அபு ஹனிபா, பவாஸ் ரஹ்மான், சரண் மாரியப்பன் ஆகியோரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர். அதில் அபு ஹனீபா அளித்த பரபரப்பு வாக்குமூலம் வெளியாகி இருக்கிறது. இலங்கையில் 2019ல் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியான சஹரான் ஹாசிம் தலைமையிலான குழுவில் அவர்கள் இணைந்ததாகவும் அவர் சென்னை மண்ணடி, கோவையி தங்களுக்கு ரகசிய பயிற்சி அளித்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ஹாசிமுக்கு அடுத்த இடத்தில் ஜமேஷா முபின் செயல்பட்ட நிலையில் அவர் ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு துப்பாக்கி வெடிகுண்டு பயிற்சி அளித்திருக்கிறார். அவர்களுக்குள் ரகசிய மொழியில் தகவல் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது. மேலும் கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவர்கள் ஆயுதப் பயிற்சியை பெற்று இருக்கின்றனர். ஆண்டுக்கு ஐஎஸ் அமைப்பில் ஆயிரம் பேரை சேர்க்க வேண்டும் என ஹாசிம் இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை செய்து வந்துள்ளார்கள். சிலர் அந்த அமைப்பில் சேர்ந்த நிலையில், 'சில தலைவர்களை' எதிரி பட்டியலில் சேர்த்து இருத்திருக்கின்றனர். கோவையில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஜமேஷா முபின் எதிர்பாராத விதமாக பலியானார். என பல தகவல்களை அபு ஹனிபா வாக்குமூலமாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post