சென்னை மாரத்தான்.. மக்களே இந்த ரூட்ல போய்டாதீங்க.. சிறப்பு ஏற்பாடுகளை செய்த மெட்ரோ நிர்வாகம்!

post-img
சென்னை: சென்னையில் இன்று மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று மாரத்தான் பங்கேற்பாளர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கிமீ. 32.186 கிமீ, 21.097 கிமீ மற்றும் 10 கிமீ) "FRESH WORKS CHENNAI MARATHON" ஓட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதிகாலை 4 மணி முதல் நேப்பியர் பாலத்திலிருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 42.195 கி.மீ, ஈ.சி.ஆர், நேப்பியர் பாலத்திலிருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 32.186 கி.மீ. எலியட்ஸ் கடற்கரையிலிருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 21.097 கி.மீ, மற்றும் நேப்பியர் பாலத்திலிருந்து சிவானந்தா சாலை வரை 10 கி.மீ வரை நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளனர். இந்நிலையில், சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் பங்கேற்பார்கள் என்பதால் இன்று ஜனவரி 5 ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மாரத்தான் ஓட்டம் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறுகிறது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், Fresh Works Chennai Marathon உடன் இணைந்து, அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயணத்தை வழங்குவதற்காக, மெட்ரோ ரயில் சேவைகள், இன்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட மராத்தான் QR குறியீடு பதியப்பட்ட சிறப்பு பயணசீட்டை பயன்படுத்தி 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். வாகன நிறுத்துமிடத்தில் இந்த QR / Bib குறியீட்டை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று சென்னை மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதையொட்டி, சென்னையில் காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. * காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னத்திலிருந்து காந்திசிலை வரை இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. * அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் காந்தி சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம். * போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, வாலாஜா பாயின்ட் அண்ணாசாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம். * ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர். ஆர்.கே.மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம். * LB சாலை X SP சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம். * காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் இராஜீவ்காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம். * பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும். * MTC பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, ML பார்க் நோக்கி அனுமதிக்கப்படமாட்டாது. * பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post