இப்போது என் Privacy கெட்டுபோச்சு? யாரால் தெரியுமா? நம்ம லைலாவா இது?

post-img
சென்னை: தனது பிரைவேசி கெட்டுபோய் விட்டதாக நடிகை லைலா தனது பேட்டி ஒன்றில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த 'கள்ளழகர்' படத்தின் மூலம் கோடம்பாக்கம் சினிமா உலகில் அறிமுகமானவர் லைலா. ஆனால், அவர் நடித்த 'பிதாமகன்' படம்தான் பலரையும் அவர் பக்கம் திரும்பி பார்க்கவைத்தது. அதில் வெகுளிப் பெண்ணாக லைலா நடித்திருந்தது பலரது கவனத்தை பெற்றிருந்தது. 'துஷ்மன் துனியா கா' ஹிந்தியில் 1996இல் அறிமுகமான லைலா, தெலுங்கு படங்களில் நடித்து பெரிய அளவில் பெயர் பெற்ற பிறகே தமிழில் நடிக்க தொடங்கினார். கடந்த ஆண்டு வெளியான 'தி கோட்' மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார் லைலா. அவர் சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் சினிமா உலகம் தொழில்நுட்ப ரீதியாக பல மடங்கு முன்னேறிவிட்டது. அவர் உச்சநடிகையாக இருந்த காலத்தில் சமூக ஊடகங்கள் இல்லை. ஓடிடி போன்ற தளங்கள் இல்லை. அதைப் பற்றி மதன் கவுரி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் லைலா, "நான் நடிக்க வந்த காலத்தில் இருந்து நிம்மதியாக இருந்தேன். என் சொந்த வாழ்க்கையும் சுதந்திரமும் பாதுகாப்பாக இருந்தது. இந்த ஓடிடி எல்லாம் வந்த பிறகு என் சொந்த வாழ்க்கையை கெடுத்துவிட்டது. சுத்தமாக தனிப்பட்ட வாழ்க்கை என்பதே இல்லாமல் போய்விட்டது" என்று தெரிவித்திருக்கிறார். தான் நடிக்க வந்த போது தமிழ் கற்றுக் கொள்வது கஷ்டமாக இல்லை என்றும் சொல்லப் போனால் தமிழ் மக்களை அதிகம் விரும்பியதாகவும் தனது குடும்பத்தில் ஒரு பகுதியாகவே உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழில் பேசும் போது எதிர்காலம், கடந்த காலம் பற்றி சரியான வாக்கியங்களை தன்னால் அமைக்க முடியவில்லை. அதனால் தவறாக பேசி விடக்கூடாது என அஞ்சி ஆங்கிலத்தில் பேசி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். விஜயகாந்த் படத்தின் மூலம்தான் லைலா அறிமுகமானார். அவர் மறைந்த போது கூட அவர் வரவில்லை. மும்பையில்தான் அவர் வசித்து வந்தார். அவருடன் இணைந்து நடித்த போது தனக்கு ஒரு அச்சம் இருந்ததாக தெரிவித்திருக்கும் லைலா, விஜயகாந்த் தன்மையான மரியாதை உள்ள மனிதர் என்றும் கூறியுள்ளார். "அதாவது 'கள்ளழகர்' படப்பிடிப்பின் போது தனக்கு நீளமான வசனம் கொடுத்துவிட்டார்கள். அதனால், அதைப் பேச கஷ்டமாக இருந்தது. விஜயகாந்த் பெரிய நடிகர் என்பதால் பதற்றமாக இருந்தேன். அவர் ஒன்றுமே சொல்லவில்லை. மிக அன்பாக நேரம் எடுத்து வசனத்தை பேச உற்சாகப்படுத்தினார்" என்கிறார். குறிப்பாக அவர் ஈகோவே பார்க்காத மனிதர் என்றும் அவரைப் போல ஒரு தங்கமான மனிதரைப் பார்க்க முடியாது என்றும் கூறியுள்ள லைலா மறுபடியும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதாக நம்பிக்கையுடன் பல விசயங்களைப் பேசி இருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post