காய்ச்சல்? ரெய்டு பீவர்? சட்டசபைக்கு 2வது நாளாக எடப்பாடி ஆப்சென்ட்! அடடா இப்படி ஒரு காரணம் இருக்கா?

post-img
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்ட தொடருக்கு 2வது நாளாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. நேற்று நடந்த கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. இன்று முக்கியமான நாள். சட்டசபையில் அதிமுக ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளது. கருப்பு நிற உடை அணிந்து யார் அந்த சார் என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. இன்று முக்கியமான நாளாக இருந்தும் கூட எடப்பாடி அவைக்கு வரவில்லை. அவருக்கு காய்ச்சல்.. இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லை என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் அவரின் உறவினர் வீடுகளில் நடக்கும் ரெய்டுகளும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதிமுகவின் இரட்டை இலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த ரெய்டு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி உறவினர் ராமலிங்கம் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி உறவினர் ராமலிங்கத்தின் சென்னை, ஈரோடு, பெங்களூர் வீடுகளில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் அக்கா மகன் வெற்றிவேல் முதன்மை இயக்குநராக உள்ள அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஈபிஎஸ்-ன் நெருங்கிய உறவினரான ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனத்தில் 2ஆவது நாளாக சோதனை நடைபெறுகிறது; சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனையை விரிவுபடுத்தியுள்ளனர் வருமான வரித்துறையினர். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக புகழேந்தி அளித்த மனுவை விரைவாக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வருகின்றன. தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்புகள் நிலை ஏற்பட்டு உள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பற்றி முடிவெடுக்கும் முன் ஓ பன்னீர்செல்வத்திடம் கருத்து கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லி உள்ளது. எடப்பாடிக்கு இது கூடுதல் சிக்கல் ஆகி உள்ளது. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிய பொதுக்குழுவே சட்டத்தை திருத்தி செய்யப்பட்ட பொதுக்குழுதான். அவரை நீக்க வேண்டும் என்று பொதுக்குழு கூடும் விதிகளை கூட மாற்றினார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டது செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் கூறுகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தேர்தல் ஆணையம் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்போது எடப்பாடி பாஜகவோடு நெருக்கமாக இருந்தார். இப்போது இல்லை. இனி இவர்கள் சேர்வார்களா இல்லையா என்று தெரியவில்லை. தங்களுடன் கூட்டணி வைக்க அதிமுகவை பாஜக நெருக்கி வருவதாக கூறப்படுகிறது. விஜய் - அதிமுக கூட்டணி வைக்க கூடாது. அப்படி வைத்தால் நம்முடைய எதிர்காலம் போய்விடும் என்பதால் விஜய் கூட்டணிக்கு பதிலாக தங்களுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று பாஜக நெருக்கடி தந்து வருகிறதாம். விஜய் உடன் எடப்பாடி சேர்ந்தால் அங்கே பாஜக வர வாய்ப்பு இல்லை. இதனால் எடப்பாடிக்கு கால் கட்டு போட பாஜக இரட்டை இலை சின்னத்தில் கை வைக்கலாம். தேர்தல் ஆணையத்தை வைத்து பாஜக செக் வைக்கலாம். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. எளிதாக முடிய வேண்டிய விஷயம்.. முடிந்துவிட்டது என்று நினைத்த விஷயம் மீண்டும் பெரிதாகி உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post