சபாநாயகர் அப்படி சொன்னதுமே சட்டுனு “கட்” ஆன சட்டப்பேரவை நேரலை.. விஜய் கூட சொன்னாரே! என்னாச்சு?

post-img
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிலையில், நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை, விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்ததுமே நேரலை நிறுத்தப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின், மூன்றாம் நாளான இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். மேலும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். இந்நிலையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அதிமுக, விசிக, சிபிஐஎம் உள்ளிட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். சிறப்பு கவன ஈர்ப்பு என்ற முறையில் என்ற முறையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதுவரை சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. சபாநாயகர் அப்பாவு அறிவித்து, விவாதம் தொடங்கியதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசத் தொடங்கினர். அந்த பேச்சுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழக கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் நேரலை துண்டிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக, பாஜக முதல், தவெக வரை அனைத்துக் கட்சிகளுமே, சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் தவெக தலைவர் விஜய், "ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியம். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்திருந்தார். ஆளுநர் உரையின்போது நேரலை ஒளிபரப்பு செய்யப்படாதது பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "அங்க போட்ட தகராறில் என்ன தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை. நான் கேட்டு சொல்கிறேன். எனக்கு அதை பற்றி தெரியாது. நீங்கள் நேரலை செய்து வருகிறீர்கள் என்று நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்" எனக் கூறி இருந்தார். கடந்த திங்கட்கிழமை அன்று சட்டசபை நிகழ்வுகள் லைவாக ஒளிபரப்பப்படாதது குறித்து தனக்கு தெரியாது, ஒளிபரப்பப்பட்டதாகத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என சபாநாயகர் அப்பாவு கூறி இருந்த நிலையில், இன்றும் சட்டசபை விவாதத்தின்போது நேரலை ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. மேலும், அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது அவர்கள் முகம் காட்டப்படாமல் சபாநாயகர், அமைச்சர்களின் காட்சிகளே காட்டப்பட்டதும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால், முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதனையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரையில் உள்ளது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்த சிறப்புத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் நாள் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 7) காலை 9.30 மணியளவில் தொடங்கியது. அப்போது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டசபை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை உறுப்பினர்கள அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று (ஜனவரி 8) முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. வரும் 10 ஆம் தேதி வரை விவாதம் நடைபெறும். இறுதி நாளான 11 ஆம் தேதி, விவாதத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சார்பில் சபாநாயகக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, விசிக உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக நோடடீஸ் வழங்கியுள்ளன. அதிமுகவினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், 'டங்க்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்' என்ற அரிட்டாபட்டி டங்ஸ்ட சுரங்க எதிர்ப்பு வாசகம் கொண்ட மாஸ்க்கும் அணிந்து வந்தனர். உடல்நிலை பாதிப்பு காரணமாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்றும் சட்டப்பேரவைக்கு வரவில்லை. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post