தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓட ஓட தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்: கனிமொழி எம்பி கடும் எச்சரிக்கை

post-img
சென்னை: தமிழ்நாட்டை, தமிழ் மக்களின் உணர்வுகளை, எங்கள் சுயமரியாதையை அவமானப்படுத்திக் கொண்டே இருப்பீர்கள் எனில், ஒவ்வொரு நாளும் அதைப் பார்த்துக் கொண்டே இருப்போம் என நினைக்காதீங்க.. நீங்கள் ஓட ஓட விரட்டப்படும் நாள் வெகு விரைவில்கூட இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளரும் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்பி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: தமிழ்நாட்டை, தமிழ் மக்களின் உணர்வுகளை தொடர்ந்து கொச்சைப்படுத்திக் கொண்டு, தொடர்ந்து புண்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய ஆளுநர் ரவியை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் கட்டளையை ஏற்று இங்கே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுநர் ரவி ஹாட்ரிக் என்று சொல்வதைப் போல 3 -வது ஆண்டாக ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.. அவர் எதில் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்? பிள்ளைகள் பரீட்சை எழுதச் செல்லும்.. ஆனால் சிலர் தேர்வு எழுதமாட்டார்கள்.. படிக்காமல் போய்விட்டு டீச்சரிடமோ அம்மாவிடமோ ஏதாவது ஒரு கதை சொல்லுங்க.. சுண்டுவிரலில் வலி இருக்கு.. வயிறு சரியில்லை.. பல் வலிக்குது.. ஏதாவது இப்படி ஒரு கண்டுபிடிக்க முடியாத காரணம் சொல்லுவாங்க.. இதனையேதான் நம்முடைய ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 3 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார்.. இதுதான் ஆளுநர் ஆர்.என்.ரவி அடித்த ஹாட்ரிக். ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே! நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே லீவ் லெட்டர் எழுதி அனுப்புங்க.. எங்க முதலமைச்சர் போனால் போகுதுன்னு விட்டுடுவாரு.. அதனால நீங்க எதுக்கு அங்க இருந்து வந்து.. அப்புறமா பாதியில் ஓடுறது ஏன்? எங்களுக்குப் பழகிவிட்டது என்ன தெரியுமா? எங்களுடைய எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்து எங்களுக்குப் பழகிவிட்ட இயக்கம் திராவிடர் இயக்கம். அதனால்தான் கருணாநிதி வழியில் வந்திருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உன்னை ஒவ்வொரு முறை.. நீயா ஏம்பா வந்து நீங்களா வந்து அசிங்கப்பட்டு அவமானப்பட்டு புறமுதுகிட்டு அவர் எழுந்து நின்றாலே பயந்து ஓடுகிறீர்களே.. என்னத்துக்கு உங்களுக்கு இந்த கஷ்டம்? வீட்டிலேயே இருந்து சொல்லுங்க நான் வரலைன்னு... சரிசரி.. வீட்டுலயே இருப்பா ரெஸ்ட் எடுன்னு எங்க முதல்வர் உங்களை விட்டுவிடுவாரு.. எல்லோருக்கும் அன்புடனும் அக்கறையுடனும் இருக்கும் எங்களது முதலமைச்சர், உங்களையும் வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுங்கன்னு விட்டுடுவாரு.. நீங்க வரவேண்டியது இல்லை.. தயவு செய்து வந்து அசிங்கப்படாதீங்க.. எனக்கே பாவமா இருக்கு.. நான் கேட்கிறேன்.. உங்களுக்கு தமிழ்நாடு பற்றி ஒன்றுமே தெரியாமல்தான் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறீங்களா? சட்டமன்றத்திலே இதுநாள் வரை நாங்கள் கடைபிடித்திருக்கக் கூடிய கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, வழிமுறை இதுதான் எங்கள் சட்டம். தமிழ்த் தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். அதுக்கு அப்புறம்தான் எல்லாம்.. நாங்கள் தேசிய கீதத்தை அவமதிக்கவில்லை. அதற்கும் இடம் இருக்கிறது. தமிழ்த் தாய்க்குப் பிறகு. நீங்க ஏன் தேசிய கீதத்தைப் பற்றி பேசுறீங்கன்னே புரியலை.. உங்களுக்கும் (ஆர்.எஸ்.எஸ்) நாட்டின் விடுதலைக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க? தமிழ்நாட்டில் இருந்து எத்தனையோ பேர் இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடினர் தந்தை பெரியார் உட்பட. ஆனால் நீங்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே ஓடிவந்தவங்க.. உங்களுக்கும் (ஆர்.எஸ்.எஸ்) இந்த நாட்டின் உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் தேசிய கீதத்துக்கும் என்ன தொடர்பு? அதைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படுகிறீர்கள்? இந்த நாட்டில் போர் மூண்டபோது இந்தியாவிலேயே அந்த போருக்காக அதிகமாக நிதிதிரட்டித் தந்தவர் கருணாநிதி. அப்ப நீங்க எங்க இருந்தீங்க? அதனால் இந்த நாட்டைக் காப்பாற்றுவது, தேசத்தைக் காப்பாற்றுவது இந்த நாட்டின் தேசிய கீதத்தைக் காப்பாற்றுவதற்கு உங்களை விட எங்களுக்கு எங்களுடைய முதலமைச்சருக்கு அதிகமாகவே தெரியும். இன்றைக்கு இந்த நாட்டை, நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கு, இந்த நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு தேசியத் தலைவராக விஸ்வரூபம் எடுத்து நிற்பவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால் நீங்க வந்து எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.. நாங்க எல்லாம் PHD பாஸ் பண்ணிவிட்டோம்.. நீங்க ஸ்கூலில் நிற்கிறீர்கள்.. எலிமென்ட்ரி ஸ்கூலில் இருந்து ஓடி வந்து கொண்டிருப்பவர்கள் நீங்கள்.. அதனால இந்த வேலை எல்லாம் வேண்டாம் ஆளுநர் ரவி அவர்களே! விட்டுருங்க.. எத்தனை உயிர்த்தியாகத்துக்குப் பிறகு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டது. நீங்க வந்து உட்கார்ந்து கொண்டு தமிழ்நாடு என சொல்லாதே.. தமிழகம் என சொல்லு.. ஆளுநர் ரவி, தமிழ்நாட்டை, தமிழ் மக்களின் உணர்வுகளை, எங்கள் சுயமரியாதையை அவமானப்படுதிக் கொண்டே இருப்பீர்கள் எனில், ஒவ்வொரு நாளும் அதைப் பார்த்துக் கொண்டே இருப்போம் என நினைக்காதீங்க.. நீங்கள் ஓட ஓட விரட்டப்படும் நாள் வெகு விரைவில்கூட இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுமையானவர்; அவரது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பொறுத்தது போதும்! பொங்கி எழு மனோகரா! என எழுதிய கருணாநிதியின் வழிவந்தவர்கள் நாங்கள்.. பொறுத்தது போதும் என்ற நாள் வரும் முன்னர் உங்கள் நாவை அடக்குங்கள்.. உங்கள் நடத்தையை சரி செய்து கொள்ளுங்கள்.. ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் இருக்கும் வரை பாஜகவின் வாக்கு சதவீதம் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டுதான் போகும் எங்களுக்கு அதில் பிரச்சனை இல்லை. இங்கேயே ஆளுநர் இருக்கட்டும். ஏனெனில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் கோரமுகத்தை ஒவ்வொரு நாளும் தமிழனுக்கு நினைவூட்டுவதாகவே இருக்கும். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post