குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதில் ரொக்கம்.. புதுச்சேரி அரசு குட்நியூஸ்

post-img
புதுச்சேரி: தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்த முறை ரொக்கப்பணம் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துவிட்டது. ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ.750 பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை என்பது விவசாயிகள், இயற்கைக்கும், தனக்காக உழைக்கும் விலங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அறுவடை முடிந்ததும் அதனை இயற்கைக்கு படைத்து பொங்கல் வைத்து வழிபாடுகள். ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் என கிட்டத்தட்ட புத்தாண்டை போல் வரவேற்று கொண்டாடுவார்கள். உலகில் எந்த மூளையில் இருந்தாலும், தை பொங்கல் பண்டிகைக்கு பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகள் சார்பில் பொதுமக்களுக்கு பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், பாசிப்பருப்பு, செங்கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களுடன் கூடிய தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் ஆகும். ஒவ்வொரு ஆண்டை போல், இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பு அரசால் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு என பொங்கல் தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வீடுகள் தோறும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்ததும் வரும் 9-ந்தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதனிடையே அண்டை மாநிலமான புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு ரொக்கப்பணமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தபடியே அரசு முடிவெடுத்துள்ளது. ஆண்டைபோலவே இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வழங்க முதலில் அறிவிப்பு வெளியானது. அதன்பின் தமிழகத்தில் பொங்கல் பொருட்களுடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து புதுச்சேயில் கூடுதலாக ரூ.250 என ஒட்டுமொத்தமாக ரூ.750 வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.750 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பொருட்கள் தொடர்பாக முதல்வர் ரங்கசாமியிடம் நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, கடந்த ஆண்டைப்போல் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ.750 பொங்கல் பரிசு வழங்கப்படும். இந்த தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றார். ரொக்க பரிசு 3.5 லட்சம் ரேஷன் கார்டு தாரர்கள் பயனடைவார்கள் என்று கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post