மாத ராசி பலன் 2025: சவால்கள் வரிசை கட்டும்.. கடக ராசிக்கான ஜனவரி மாத பலன்கள்

post-img
சென்னை: புதிய நம்பிக்கைகளுடன் 2025 புத்தாண்டு பிறந்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் ஜனவரி மாதத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நுழைந்துள்ளனர். 2025 ஜனவரி மாதம் ராசி பலன்களில், இந்த தொகுப்பில் கடகம் ராசிக்கான பலன்களை பார்க்க உள்ளோம்.. கடகம் ராசிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கலாம். ஆனால் இந்த மாதம் அவர்களின் எதிர்பார்ப்பு முழுமையாக பூர்த்தி ஆகாது. சராசரியாகவே செல்லும். உங்களின் முயற்சிகள் வழக்கம் போல தொடரலாம். கடகம் ராசிக்கு எட்டில் உள்ள சனி பகவான் இன்னும் இடம் மாறவில்லை. செவ்வாய் கிரகம் ஜனவரி 22 ஆம் தேதிக்கு பிறகு பின்னோக்கி வக்கிரமாக மிதுனம் ராசிக்கு செல்கிறார். குரு பகவான் 11 ஆம் இடத்தில் உள்ளார். புதன் ஆறாம் இடத்தில் உள்ளார். சூரியன் பார்வை உள்ளது. சனிப்பெயர்ச்சி மாற்றம் வரை உங்களுக்கு சற்று சுமாராகவே இருக்கும். உங்கள் முயற்சிக்கு உடனடி பலன் கிடைக்காவிடினும் சரியாக திட்டமிடுங்கள். அதேநேரத்தில் அதை செயல்படுத்துவதற்கு ஜனவரி மாதம் சரியான காலகட்டம் இல்லை. தற்போதுள்ள வேலை உள்ளிட்டவற்றுக்கு குரு பகவானால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. சனி மற்றும் செவ்வாய்யின் நிலை சாதகமாக இல்லை. அதனால் பணியிடத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். மாணவர்களுக்கும் இந்த ஜனவரி மாதம் சற்று சவாலாகவே இருக்கும். நினைத்த காரியங்களை அவ்வளவு எளிதாக நிறைவேற்ற முடியாது. மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். எனவே எந்த காரியத்தையும் கவனமாக, விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். பயிற்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். கடுமையான உழைப்பை செலுத்தினால் வெற்றி நிச்சயம். குடும்ப வாழ்க்கையிலும் சங்கடங்கள் வந்து செல்லும். தேவையில்லாத விஷயங்களில் தலையை நுழைத்து அவப்பெயர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். இருக்கும் சூழ்நிலையே போதும் என்ற மனநிலையுடன் கொண்டு செல்லுங்கள். உடல் நலத்தின் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வாகனம் இயக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். இரவு நேர பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் அலட்சியமாக இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும். உணவு பழக்க வழக்கத்திலும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதியவர்களை நம்பி முதலீடு செய்வது, சிபாரிசு செய்வதை முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது. வீண் செலவுகளை தவிர்த்துவிட்டு, சேமிப்பில் அதிகம் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தினரிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து, மனம் விட்டு அதிக நேரம் செலவிடுங்கள் அது உங்கள் மனதுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பெண்களுக்கும் மனதில் கவலைகள் அதிகம் இருக்கும். மனம் நிம்மதிக்கு ஏங்கும். நடப்பதை பெரிதாக யோசிக்காமல் கடந்து செல்ல பழகிக் கொள்ளுங்கள். முதியவர்கள் யாருடனும் வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக கடந்து செல்லலாம். அதிர்ஷ்டங்கள், யோகங்கள் குறைவாக இருந்தாலும் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து முன்னேற்றத்துக்கான பாதைக்கு திட்டமிடும் அனுபவத்தை இந்த மாதம் கொடுக்கும். உடற்பயிற்சி, தியானம் செய்வதன் மூலம் மனதிலும், உடலிலும் தெளிவு பிறக்கும். சனியின் நிலை தோல்வியை கொடுக்கும் என்ற எதிர்மறையான சிந்தனையை எடுத்துக் கொள்ள வேண்டும். சவால்களை அதிகரித்து தீவிர முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். எனவே தீவிரமான முயற்சியும், பயிற்சியும் அவசியம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post