ஜாதி ஒழிப்புக் கொள்கைக்காக தலைவர், மகன், பேரன்.. அத்தனை பேரையும் ஏற்றுக் கொள்வோம்: ஆ.ராசா

post-img
சென்னை: ஜாதி ஒழிப்புக் கொள்கைக்காக தலைவர், மகன், பேரன் என கருணாநிதி குடும்பத்தின் அத்தனை பேரையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்; ஜாதி ஒழிப்புக் கொள்கையைக் கொண்ட குடும்பமாக, பெரியாரையும் அம்பேத்கரையும் தாங்கி நிற்பது கருணாநிதி குடும்பம் என்ற திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி பேசினார். பெரம்பலூரில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆ.ராசா எம்பி பேசியதாவது: இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என அம்பேத்கர் சொன்னதில் நமக்கு உடன்பாடு இல்லை. பெரியாரோ ஜாதி ஒழிந்த ஒரு தனிநாட்டை- திராவிடநாட்டை கேட்டார். பெரியார்- அம்பேத்கர் மொழி, பூகோள கொள்கைகள் வேறானவைதான். ஆனால் ஜாதி ஒழிப்பை இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள். அதனால்தான் பெரியாரும் அம்பேத்கரும் இணைந்து பயணிக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடு. இந்த இணைப்பானது கருத்தியல் ரீதியானது. இதனைத்தான் கருணாநிதியும் விரும்பினார். திமுக என்பது ஜாதி ஒழிப்புக்கான இயக்கம் என்பதில் பெருமையாக சொல்வோம். அதை செய்து முடித்துவிட்டோமா என்பது தெரியாது. 3,000 ஆண்டுகளாக ஜாதி இருக்கிறது. இந்த ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் இணைந்து பயணிக்கிற ஒரே மாநிலம் தமிழகம்- ஒரே கட்சி திமுக. பிறப்பால் என்னைவிட எவனும் உயர்ந்தவனும் தாழ்ந்தவனும் இல்லை என்கிற உணர்வைக் கொடுத்தது பெரியாரும் அம்பேத்கரும் திராவிடர் இயக்கமும்தான். பிறப்பால் என்னைவிட ஒருவன் உயர்ந்தவன் என்பதை ஏற்க முடியாது என்கிற மனவலிமையை கொடுத்தது திராவிடர் இயக்கம்.. கொடுத்தவர் தந்தை பெரியார்.. இதனைத்தான் அண்ணல் அம்பேத்கர் விரும்பினார். அதேபோல எனக்கு கீழே ஒருவன் இருக்கிறான் என்று சொன்னாலும் தப்பு. அதையும் நாம் ஏற்கக் கூடாது. ஜாதி ஒழிப்புக் கொள்கையைக் கொண்ட குடும்பமாக, பெரியாரையும் அம்பேத்கரையும் தாங்கி நிற்பது கருணாநிதி குடும்பம். ஜாதி ஒழிப்புக்கான ஒரு குடும்பத்தை விரும்புகிறோம். பாரபட்சம் இல்லாத ஒரு அரசியல் குடும்பத்தை விரும்புகிறோம். ஜாதி ஒழிப்புக்காக திமுகவின் தலைவராக இருந்தாலும் மகனாக இருந்தாலும் பேரனாக இருந்தாலும் அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இந்தக் குடும்பத்தைப் போல வேறு ஒரு குடும்பத்தைக் காட்டச் சொல்லுங்கள். இதுவரை இந்த குடும்பத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்,. இவ்வாறு ஆ.ராசா எம்பி பேசினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post