2050ல் உலகிலேயே.. அதிக முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட நாடாக.. மாறப்போகும் இந்தியா.. கணிப்பு!

post-img
சென்னை: இந்தோனேஷியாவை 2050ல் இந்தியா முந்தி அதிக முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. உலகிலேயே அதிக இந்துக்கள் மக்கள் தொகை, இஸ்லாமியர்கள் மக்கள் தொகையை கொண்ட நாடாக இந்தியா இன்னும் சில வருடங்களில் உருவெடுக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது. பியூ ஆராய்ச்சி மையத்தின் புதிய மக்கள் தொகை கணிப்புத் தரவுகளின்படி, அடுத்த பத்தாண்டுகளில், உலகில் உள்ள இரண்டு பெரிய மதங்களான இஸ்லாம் மற்றும் இந்து மதம் இரண்டிற்கும் வீடாக இந்தியா மாறும். இரண்டு மதங்களின் மக்கள் தொகையும் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் இருக்கும். இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் இந்துக்களை விட வேகமாக வளர்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய இஸ்லாமியர்களின் சராசரி வயது தற்போது 28க்கும் கீழ் உள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள முக்கிய மத குழுக்களில் அதிக கருவுறுதல் விகிதங்களை இஸ்லாமியர்கள் கொண்டுள்ளனர். 2010 இல், இந்திய முஸ்லீம்களின் சராசரி வயது 22 ஆக இருந்தது, இந்துக்களுக்கு 26 ஆகவும், கிறிஸ்தவர்களுக்கு 28 ஆகவும் இருந்தது. அதேபோல், முஸ்லீம் பெண்களுக்கு சராசரியாக ஒரு பெண்ணுக்கு 3.2 குழந்தைகள் உள்ளனர், இந்துக்களுக்கு 2.5 மற்றும் கிறிஸ்தவர்களுக்கு 2.3 குழந்தைகள் உள்ளனர். இந்த கணக்குப்படி பார்த்தால் உலகில் இஸ்லாமிய நாடுகளை விட அதிக இஸ்லாமியர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருப்பார்கள். இந்தியா ஏற்கனவே உலகின் பெரும்பாலான இந்துக்களின் தாயகமாக உள்ளது. 2010 ஆம் ஆண்டில், உலகின் 94% இந்துக்கள் இந்தியாவில் வாழ்ந்தனர், இது 2050 இல் உண்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 1.3 பில்லியன் இந்துக்கள் நாட்டில் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவும் 2050 இல் 311 மில்லியன் முஸ்லிம்கள் (உலகளாவிய மொத்தத்தில் 11%) இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது, இது உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாகும். தற்போது, இந்தோனேசியாவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் உள்ளனர். இதன் மூலம் இந்தோனேஷியாவை 2050ல் இந்தியா முந்தி அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் மதிப்பீட்டின்படி, உலக மக்கள் தொகை பெருக்கம் இப்போதைக்கு சுணக்கம் அடைய வாய்ப்பு இல்லை. 2024 ஆம் ஆண்டில் 71 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புதிதாக பிறந்து உள்ளனர். இதன் மூலம் ஜனவரி 1, 2025 அன்று உலக மக்கள்தொகை 8.09 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், 1.41 பில்லியன் மக்கள் தொகையுடன், இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தது. ஜனவரி 1, 2025 அன்று உலக மக்கள்தொகை 8,092,034,511 ஆகும். 2025 ஜனவரி மாதத்தில் ஒவ்வொரு நொடிக்கும் உலகம் முழுவதும் 4.2 பிறப்புகளும் 2.0 இறப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. உலகளவில் மொத்த மக்கள் தொகை 75 மில்லியனாக 2023ல் அதிகரித்தது. இதன் உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 0.9 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும். அதாவது கொஞ்சம் மக்கள் தொகை வளர்ச்சி குறையும் என்றும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post