மதுரை ஜெயசூர்யா,பக்கத்திலயே பாண்டீஸ்வரி.. மளிகை கடையில் கண்ட காட்சி.. உசிலம்பட்டியை உலுக்கிய சம்பவம்

post-img
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான பாண்டீசுவரியும் காதலித்து வந்தார்களாம். இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். அத்துடன் பாண்டீஸ்வரிக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்களாம்.. இதனால் கவலை அடைந்த ஜெயசூர்யாவும், பாண்டீஸ்வரியும் நேற்று இரவு மளிகை கடைக்கு வந்தனர். அங்கு அவர்கள் இருந்த கோலம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. இன்றைக்கு சில 2கே கிட்ஸ் காதல் என்பது மிகவும் அவசரமாக இருக்கிறது. வாழ்க்கையில் எல்லாமே எளிதாக நடந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. காதலிப்பவர் எந்த அளவிற்கு நல்ல குணம் நலம் உடையவர், வருமானம் எவ்வளவு, எப்படி வாழ்க்கையை நடத்துவார சரியானவரா என்பதை கவனிப்பது இல்லை.. பருவ வயதில் வரும் கவர்ச்சியை காதல் என்று நம்பி வாழ்க்கைய தொலைக்கிறார்கள். அவர் இல்லாமல் வாழ முடியாது.. அவள் இல்லாமல் வாழ முடியாது என்று முட்டாள்தனமாக முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் தயங்குவது இல்லை.. சிறு வயது முதலே சின்ன சின்ன பிரச்சனைகளை கூட பெற்றோர் புகுந்து தீர்த்து வைப்பதால், வாழ்வில் பிரச்சனைகளை கையாளத் தெரியாமல் தடுமாறுகிறார்கள்.. சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை என்று ஆழாம நம்பும் 2கே கிட்ஸ்கள் சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் மனம் உடைந்து போகிறார்கள். தங்கள் உறவினர்கள், நண்பர்கள் முன்பு தன்னை யாராவது கேள்வி கேட்டால் அவமானம் நடந்ததாக கருதிவிடுகிறார்கள். பிரச்சனைகளை பக்குவமாக கையாளத் தெரியாமல் வளர்கிறார்கள். இறுதியில் 18 வயது வந்த உடன், தனக்கு பிடித்த பெண்ணோடு அல்லது ஆணோடு வாழ வேண்டும் என்று சில 2 கே கிட்ஸ் முடிவெடுக்கிறார்கள். அதற்கு போராடுவதற்கு கூட தயாராக இருப்பது இல்லை. பெற்றோர் எதிர்க்கிறார்கள் என்ற உடன், இந்த வாழ்க்கையை வேண்டாம் என்று நினைக்கிறார்கள். அப்படித்தான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த எழுமலை அருகே உலைப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவருடைய மகன் ஜெயசூர்யா (வயது 21). பட்டதாரி. இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார்.. ஜெயசூர்யாவும் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான பாண்டீஸ்வரியும் (18) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே பாண்டீஸ்வரிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலன் ஜெயசூர்யாவின் கடைக்கு நேற்று முன்தினம் இரவு பாண்டீசுவரி வந்திருக்கிறார். நம்மை சேர்ந்து வாழவிடமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்ட அவர்கள், உயிரைவிட்டு விடலாம் என்று விபரீத முடிவு எடுத்துள்ளார்கள். இதனிடையே அன்று இரவே இருவரும் மருந்தை குடித்து அந்த மளிகை கடையிலேயே பேச்சுமூச்சின்றி கிடந்துள்ளாரகள். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை உடனடியாக மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்த உசிலம்பட்டி எம்.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் காதல் ஜோடியின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் ஜோடி உயிரை மாய்த்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காதலுக்கு எதிர்ப்பு எழுந்தால் தைரியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர வாழ்க்கையை முடித்துக் கொள்ளக்கூடாது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post