ஆட்டம் மாறுது.. ஆப்கானிஸ்தான் மீது கைவைத்தால் காலி! சப்போர்ட்டுக்கு வந்த இந்தியா! அதிரும் பாகிஸ்தான்

post-img
டெல்லி: ஆப்கானிஸ்தான் தலிபான் - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலில் தாலிபானுக்கு ஆதரவாக இந்தியா களமிறங்கி உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை எதிர்ப்பதில் இந்தியா ஆப்கானிஸ்தானை அவ்வப்போது நாடுவதாக வாதம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா களமிறங்கி உள்ளது. பாகிஸ்தான் இது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதலை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். பாகிஸ்தானின் உள்நாட்டு தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குற்றம் சாட்டுவது பழைய வழக்கம். பாகிஸ்தான் அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை எக்காரணம் கொண்டு ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தாலிபான் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் அரசு கடுமையாக கண்டித்து உள்ளது. பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலைக் கண்டித்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம், இஸ்லாமிய எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் மீதான இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள், பெண்கள், குடும்பங்களை குறி வைத்து தாக்கி உள்ளனர். இது மிருகத்தனமான தாக்குதல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. இதை ஆப்கானிஸ்தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. நாங்கள் இதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க மாட்டோம். இந்த கோழைத்தனமான செயலுக்கு பதிலடி கொடுப்போம். எங்கள் பகுதிகளை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வோம். எங்கள் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதற்கு உரிய பதிலடி தருவோம் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கைபர் பக்துன்க்வாவின் பஜூர் மாவட்டத்தில் உள்ள சலர்சாய் பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ தளத்தை தாலிபான் கைப்பற்றி உள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) படையினர் மூலம் பாகிஸ்தானின் இந்த ராணுவ தளம் கைப்பற்றப்பட்டு உள்ளது. டிசம்பர் 30, 2024 அன்று காலை பாகிஸ்தானின் ராணுவ தளத்தை கைப்பற்றியதாக TTP கூறியுள்ளது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாலிபான் படையினர் களமிறக்கப்பட்டதாகவும்.. அந்த தாக்குதலில் தாலிபான் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தாலிபான் அமைப்பிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்.. தாலிபான் அமைப்பை "நசுக்கி விடுங்கள்" "வீழ்த்தி விடுங்கள்" என்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானின் இந்த முடிவு தாலிபான்களை கடுப்பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்ற அமைப்பு ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பாகிஸ்தானின் தலிபான்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பாகிஸ்தான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகளுக்கும் - இவர்களுக்கும் ஆகாது. பாகிஸ்தான் ராணுவத்திரும் இவர்களுக்கும் கூட மோதல் உள்ளது. பாகிஸ்தானில் தலிபான் ஆட்சியை நிறுவ வேண்டும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். அதற்காக, பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாகத் தாக்கி, அரசியல்வாதிகளைக் கொன்று பாகிஸ்தானை சீர்குலைக்கும் பணியே டிடிபி அமைப்பின் முக்கிய குறிக்கோள் ஆகும். பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தாக்குதல் நடத்துவதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இவர்களுக்கு சொந்தமான தளவாடங்களில் திடீரென பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரண்டு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எச்சரிக்கை: தாலிபான் அமைப்பிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்.. தாலிபான் அமைப்பை "நசுக்கி விடுங்கள்" "வீழ்த்தி விடுங்கள்" என்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானின் இந்த முடிவு தாலிபான்களை கடுப்பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பாகிஸ்தானின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தலிபான்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். நாட்டின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த தீவிரவாத குழு "நசுக்கப்பட வேண்டும்" .. அதற்கு தாலிபான் தடுக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்தார். ஆப்கானிஸ்தான் நாட்டை இந்த அறிவிப்பு கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post