இந்தியா பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று! உக்ரைன் செய்த பஞ்சாயத்தால்.. கவனத்தை திருப்பும் ரஷ்யா

post-img
டெல்லி: உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் எரிவாயு விநியோகம் தடைபட்டிருக்கிறது. இதனை செய்தது உக்ரைன்தான். இந்நிலையில் இந்தியாவுக்கு எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன பிரச்சனை?: நேட்டோவை உக்ரைன் ஏற்க கூடாது என்று கூறி ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் எரிவாயு விநியோகம் தடைபட்டிருக்கிறது. அதாவது யுரேங்கோய்-போமரி-உஸ்கோரோட் பைப்லைன் எனும் திட்டத்தின் மூலம் ஐரோப்பாவுக்கு ரஷ்யா எரிவாயுவை சப்ளை செய்து வருகிறது. பைப்லைன் உக்ரைன் வழியாக போவதால், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஆனால் போர் காரணமாக இந்த ஒப்பந்தத்தில் உக்ரைன் இந்த ஆண்டு கையெழுத்திடவில்லை. இதனை உக்ரைன் எரிசக்தி துறை அமைச்சர் கலுஷ்செங்கோ ஒப்புக்கொண்டுள்ளார். எனவே ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா பக்கம் வீசும் காற்று: உக்ரைனின் இந்த முடிவு இரண்டு நாடுகளை பாதிக்கும். ஒன்று ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவா ஆகியவை எரிபொருள் இல்லாமல் தவிக்கும். இரண்டாவது ரஷ்யா பாதிக்கும். போர் என்று வந்துவிட்டலே செலவுகள் அதிகரிக்கும். இந்த செலவுகளை எரிபொருள் விற்பனை மூலமாகத்தான் ரஷ்யா ஈடுசெய்து வருகிறது. இப்படி இருக்கையில், உக்ரைனின் நடவடிக்கையால் ரஷ்யாவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியா பக்கம் ரஷ்யாவின் கவனம் திரும்பும். எரிவாயு விநியோகம்: இந்தியாவுக்கு ரஷ்யா ஏற்கெனவே எல்என்ஜி(LNG) எரிவாயுவை விநியோகித்து வருகிறது. அதாவது ஆண்டுக்கு 3 மில்லியன் டன் எரிவாயுவை விநியோகிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டியிருக்கிறது. ஆனால் எரிவாயுவின் தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20% எரிவாயு தேவை உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டு இது 30% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தியாவுக்கு கூடுதல் எரிவாயு அவசியம். இதுதான் ரஷ்யாவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு. ஏற்கெனவே கச்சா எண்ணெய்யை ரஷ்யா குறைந்த விலையில் அதுவும் இந்திய ரூபாய்க்கு நமக்கு விற்கு வருகிறது. அரபு நாடுகள் அமெரிக்க டாலரில் விற்பனை செய்து வந்த நிலையில், ரஷ்யாவின் இந்திய கரன்சியில் வர்த்தகம் செய்தது நமக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. அதேபோல எரிவாயு விற்பனையும் இனி வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு போக வேண்டிய எரிவாயுவை இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பக்கம் திருப்பிவிட்டு காசு பார்க்க ரஷ்யா ரெடியாகி வருகிறது. சொந்த கரன்சி மற்றும் குறைந்த விலையில் எரிவாயு கிடைப்பதாலும், இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இனி வரும் நாட்களில இந்தியா தீவிரப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. 2024ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, ரஷ்யாவிலிருந்து இந்தியா சுமார் 2.72 மில்லியன் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்திருக்கிறது. இது கடந்த 2023ம் ஆண்டு இறக்குமதியை விட 54% அதிகமாகும். ஆக உக்ரைன் போர் இந்தியாவுக்கு பல வகைகளில் பலன்களை கொடுத்து வருகிறது. அதிலும் எரிவாயு விஷயத்தில் இந்தியாவுக்கு அதிஷ்ட காற்று அடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post