வாலி.. ஒரே மாதிரியான அண்ணன், தம்பி.. ஒரே மாதிரி டிரஸ்.. சென்னை ஆவடியில் பெண்ணுக்கு என்னதான் நடந்தது

post-img
சென்னை: சென்னை ஆவடியில் இளம்பெண்ணின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிவிட்டுள்ளது.. இது கொலையா? தற்கொலையா? என்ற விசாரணையில் போலீசார் தீவிரமாக இறங்கியிருக்கும் நிலையில், பெண்ணின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கிறார்கள். என்ன நடந்தது ஆவடியில்? சென்னை ஆவடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்... இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலமாகும். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. ராஜ்குமார் தன்னுடைய உறவுக்கார பெண் பியூலா ராணியை காதலித்து வந்தார்.. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பியூலாவையே திருமணமும் செய்து கொண்டார்,. ராஜ்குமார் தன்னுடைய மனைவி, அம்மா, அப்பா, தங்கை, அண்ணன் என அனைவருடனும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜ்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில், பியூலா தன்னுடைய பெட்ரூமில் சடலமாக கிடந்துள்ளார்.. இதைப்பார்த்து அவரது உறவினர் ஒருவர் அதிர்ச்சியில் அலறினார். விசாரணை ஆரம்பம்: பிறகு உடனடியாக போலீசுக்கும் தகவல் தரப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்து, விசாரணையை துவங்கினர். அப்போதுதான் பியூலாவின் கழுத்தில் தழும்பு இருப்பது தெரியவந்தது. இதனால், போலீசார் இந்த வழக்கை துரிதமாக விசாரித்து கொண்டிருக்கிறார்கள். அத்துடன், திருமணம் முடிந்து ஒருவருடமே ஆகியிருப்பதால், திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணைக்கும் மாற்றப்பட உள்ளது. இதனிடையே, உயிரிழந்த பியூலாவின் பெரியப்பா ஜோசப், தன்னுடைய மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி புகார் மனு தந்துள்ளார். அண்ணாகுமாரி: இதனிடையே, மகளின் மரண செய்தி ஆந்திராவிலுள்ள பியூலாவின் அம்மா அண்ணா குமாரிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பதறி துடித்து ஓடிவந்த அண்ணாகுமாரி, மகளின் சடலத்தை கண்டு கதறி துடித்தார்.. பிறகு ஆவடி போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவு 2 மணிக்கு வந்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் அழுதுகொண்டே தெலுங்கில் பேசிய அண்ணாகுமாரி, ''என்னுடைய மகளை அநியாயமாக கொன்றுவிட்டார்கள். இந்த மரணத்துக்கு காரணமான, என் மகளின் மாமனார், 2 மகன்களையும் கொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நான் செத்து போயிடுவேன். ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறேன்.. எனக்கு கணவரும் கிடையாது. டிகிரி படிப்பு: என் மகளை கஷ்டப்பட்டு படிக்க வெச்சோம்.. இதுக்காகவே நெல்லூரில் படிக்க வைத்தோம். இவர்கள் சென்னைக்கு அழைத்து வந்து ஆசை வார்த்தை சொல்லி, கொடுமைப்படுத்தி சம்மதிக்க வைத்து, இந்த கல்யாணத்தை செய்து கொண்டார்கள். கடந்த 3ம் தேதி காலையில் என்னுடைய மகளுடன் போனில் நான் பேசினேன்.. வீட்டில் சாமி கும்பிடும்போது, கணவர் ராஜ்குமாரின் அண்ணன் பிரேம்குமார் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக சொன்னாள்.. அதுதான் என் மகளிடம் நான் கடைசியாக பேசியது.. அந்த ஆடியோவை ஆவடி போலீசில் தந்துள்ளேன்" என்றார். அப்போது, அங்கு வந்த போலீசார், அண்ணாகுமாரியிடம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். திருமணம்: ராஜ்குமாருக்கு உடன்பிறந்தவர் பிரேம்குமார்.. இவர்கள் இருவருமே இரட்டையர்கள்.. அத்தை மகள் பியூலா ராணியை காதலித்த நிலையில், 2 வீட்டினருக்குமே இந்த திருமணம் பிடிக்கவில்லையாம். அதனால் 2 வீட்டார் எதிர்ப்பை மீறியே இந்த திருமணத்தை செய்துள்ளார். எனினும், தங்களது மகளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக முத்திரைத்தாள் பத்திரத்தில் பெண் வீட்டார் எழுதி வாங்கிக்கொண்டார்களாம். சம்பவம் நடைபெற்ற நாளில், அண்ணன் தம்பி இருவருமே ஒரே மாதிரியான டிரஸ் அணிந்திருந்தார்களாம். எனவே, இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று பியூலாவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். உயிரிழந்த பியூலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்றும் சொல்கிறார்கள். போஸ்ட் மார்ட்டம்: இந்த மரணம் தொடர்பாக ராஜ்குமாரையும், பிரேம்குமாரையும் அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் பியூலாவின் மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும். திருமணமான ஒரே ஆண்டில் இளம்மனைவியின் மர்ம மரணமும், கணவனின் அண்ணன் மீதான பாலியல் சீண்டல் குற்றச்சாட்டும், மிகுந்த பரபரப்பை சென்னையில் ஏற்படுத்தி வருகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post