உடை மாற்றும் அறையில் அதிர்ச்சி.. மூன்றாம் கண் வழியாக பார்த்த மீரான்! போலீஸ் எடுத்த அதிரடி ஆக்சன்!

post-img
ராமநாதபுரம்: உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம் அக்னித் தீர்த்த கடற்கரை அருகே பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் அதிரடி நடவடிக்கையாக உடை மாற்றும் அறைக்கு சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள்.. தமிழகத்தில் உள்ள கோவில்களில் பிரசித்தி பெற்றது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில். அதுமட்டுமல்லாமல் சிறந்த சுற்றுலா தளமாகவும் ராமேஸ்வரம் விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் அருகே இருக்கும் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு பின்னர், கோவிலுக்கு சென்று அங்கு புனித நீராடுவதும், பின்னர் சாமி தரிசனம் செய்வதும் வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றனர். அக்னீ தீர்த்த கடல்: தொடர்ந்து அங்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பின் கடற்கரை எதிரே உள்ள உடை மாற்றும் அறையில் உடை மாற்றுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அங்கிருந்த டீ மாஸ்டர் வயதான பெண்களை ஒரு அரைறைக்கும், இளம் பெண்களை மற்றொரு அறைக்கும் சென்று உடை மாற்றுமாறு கூறியிருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த ஒரு இளம் பெண் உடை மாற்றும் அறையில் கவனித்த போது அங்கு டைல்ஸ் கற்களுக்கு நடுவே ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரகசிய கேமரா: மேலும் மற்ற இளம் பெண்கள்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த கேமராவை பிடுங்கி இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் போலீசார் விரைந்து வந்து கேமராவை கைப்பற்றியதோடு உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து பெண்களை படம் பிடித்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா, அங்கு பணியாற்றிய டீ மாஸ்டர் மீரான் மைதீன் ஆகியோரை கைது செய்தனர். இருவர் கைது: இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார். அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் கேமரா வைத்தது எப்படி?, ரகசியமாக எடுத்த இளம்பெண்களின் வீடியோக்களை என்ன செய்தனர் என்பது குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண்களின் வீடியோ: பெண்கள் உடை மாற்றும் அறையில் கருப்பு மற்றும் வெள்ளை கலரில் டைல்ஸ் பதித்து அதில் ஆன்லைனில் ஆர்டர் செய்த கருப்பு கேமராவை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதில் கருப்பு டைல்ஸ்க்கு நடுவே அந்த கேமரா வைக்கப்பட்டதால் அதை எளிதில் பார்க்க முடியாது. கடந்த சில நாட்களாக நிறைய வீடியோக்களை எடுத்து மெமரி கார்டை மாற்றி மாற்றி வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த வீடியோவை பார்த்து வந்ததோடு, சிலருக்கு அதனை பகிர்ந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. உடை மாற்றும் அறைக்கு சீல்: இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் முழுவதும் பல்வேறு தனியார் விடுதிகள் உடைமாற்றும் அறைகளில் திடீர் சோதனை செய்யப்பட்டது. மேலும் அனைத்து உடை மாற்றும் அறைகளிலும் அதிரடி சோதனை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த தனியார் உடை மாற்றும் அறையை சீல் வைக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ராமேஸ்வரம் காவல்துறையினர் லட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடைமாற்றும் அறையை சீல் வைத்தனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post