பெங்களூர் நம்ம மெட்ரோ யெல்லோ லைன்: வருது முதல் ரயில்.. இந்த ரூட்களில் இனி டிராபிக் பிரச்சினை இல்லை

post-img
பெங்களூர்: பெங்களூரில் ஆர்.வி. ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 100 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், பெங்களுர் நம்ம மெட் ரோவின் மஞ்சள் வழித்தடம் எப்போது துவங்கப்படும்? என்பது பற்றிய எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தான் வரும் 6 ஆம் தேதியில் இருந்து இந்த ரூட்டில் ரயில் இயக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சிலிகான் வாலி என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூர். ஐடி நிறுவனங்கள் அதிகம் நிறைந்துள்ளதால் சிலிகான் வாலி என்று பெங்களூர் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஏன் ஆசியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக பெங்களூர்தான் உள்ளது. பெங்களூர் பயணிகளுக்கு போக்குவரத்து நெரிசலில் இருந்து கொஞ்சம் விடுதலை கொடுப்பது என்றால் அது மெட்ரோ ரயில்கள் தான். பெங்களூரில் ஒயிட்பீல்டு முதல் சல்லகட்டா வரையிலும், மாதவராவில் இருந்து சில்க் நிறுவனம் வரையிலும் 77 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. இதில் தினமும் 9 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இந்த நிலையில் ஆர்.வி. ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மஞ்சள் நிற பாதை (yellow line) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் நிற பாதை பணிகள் முழுவதுமாக அதாவது 100% நிறைவு பெற்றுள்ளன. அந்த பாதையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனைகளும் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. இன்னும் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டியது மட்டும் தான் பாக்கி உள்ளது. முக்கியமான ரூட் என்பதால் பெங்களுர் நம்ம மெட் ரோவின் மஞ்சள் வழித்தடம் எப்போது துவங்கப்படும்? என்பது பற்றிய எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தான் வரும் 6 ஆம் தேதியில் இருந்து இந்த ரூட்டில் ரயில் இயக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாக ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் கொல்கத்தா திடகா் தொழிற்சாலை நிர்வாகத்துடன் நான் தொடர்பில் இருந்து வருகிறேன். அந்த தொழிற்சாலையில் இருந்து வருகிற 6 ஆம் தேதி முதல் ரயில் அனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், கலந்து கொள்கிறார். நானும் கலந்து கொள்கிறேன். 2 வது ரயில் இந்த மாத இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வந்து சேரும். 3-வது ரயில் ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும். அதன் பிறகு மாதம் ஒரு ரயிலை அந்த தொழிற்சாலையினர் உற்பத்தி செய்து வழங்குவார்கள்" என்றார். இன்போசிஸ் பிய்கான் போன்ற முன்னணி நிறுவனங்கள் அமைந்துள்ள எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதி வழியாக இந்த மெட்ரோ ரயில் இயங்குகிறது. தொடக்கத்தில் 30 நிமிடங்களுக்குள் ஒரு ரயில் இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மூன்று ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் 36 ரயில்களாக அதிகரிக்கப்படும். காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இந்த ரூட்டில் ரயில்கள் இயக்கப்படும். பீக் நேரத்தில் 6-10 நிமிட இடைவெளிகளுக்குள்ளும், பீக் நேரம் தவிர்த்து பிற நேரங்களில் 10-15 நிமிட இடைவெளிகளுக்குள்ளும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த மஞ்சள் வழித்தடத்தில் ரயில்கள் சேவை முழு அளவில் தொடங்கப்பட்ட பிறகு ஐடி மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனங்கள் நிறைந்துள்ள எலக்ட்ரானிக் சிட்டி போன்ற பகுதிகளுக்கு மக்கள் எளிதாக சென்று வர முடியும். ஆர்.வி ரோடு (Interchange with the Green Line) ரகிகுடா ஜெயதேவா ஹாஸ்பீட்டல் (Future interchange with the Pink Line) பிடிஎம் லே அவுட் சென்ட்ரல் சில்க் போர்டு பொம்மனஹல்லி ஹொங்கசந்திரா குட்லு கேட் சிங்கசந்திரா ஹோசா ரோடு பெரடென அக்ரஹாரா எலக்ட்ரனிக் சிட்டி கொன்னப்பன அக்ரஹாரா ஹஸ்கர் ரோடு ஹெப்பகோடி ஆகிய ஸ்டேஷன்கள் உள்ளன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post