சுந்தர் பிச்சையை விட அதிகம்.. ஒரு நாள் சம்பளம் ரூ.48 கோடி.. யார் இந்த இந்திய வம்சாவளி நபர்?

post-img
வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை விட 10 மடங்கு அதிக சம்பளத்தை ஜெகதீப் சிங்க் என்பவர் பெறுகிறாராம்.. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரது ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ.48 கோடியாகும். அப்போது ஆண்டு வருமானம் எவ்வளவாக இருக்கும் என்பதை கணக்கிட்டு பாருங்கள்.. இவரை பற்றிய விவரங்களை பார்க்கலாம். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெகதீப் சிங் என்பவர் சம்பளம் பெற்றுள்ளார். இவரது ஒருநாள் வருமானம் மட்டும் ரூ.48 கோடியாக உள்ளது. ஆண்டு வருமானம் என எடுத்துக்கொண்டால் 17,500 கோடியாகும். குவாண்டம்ஸ்கேப் (QuantumScape) என்ற நிறுனத்தின் நிறுவனரான இவர் பெறும் சம்பளம்தான் உலகிலேயே அதிக தொகையாகும். இந்திய வம்சாவளி குவாண்டம்ஸ்கேப் நிறுவனம் மின்சார வாகனங்ளுக்கான பேட்டரி உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெகதிப் சிங், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்காகத்தில் எம்பிஏ படித்தார். ஹெச்.பி, சன் மைக்ரோசிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனனங்களில் ஆரம்ப கட்டத்தில் பணியாற்றிய ஜெகதிப் சிங், ஏராளமான ஸ்டார்ட்ப் நிறுவனங்களையும் தொடங்கியுள்ளார். குறிப்பாக 1992 ஆம் ஆண்டில் ஏர் சாப்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை கோண்டு, 2010 ஆம் ஆண்டில் குவாண்டம்ஸ்கேப் கம்பெனியை தொடங்கியுள்ளார். பேட்டரி டெக்னாலஜியில் புதுமையை அறிமுகம் செய்த இந்த நிறுவனம் தற்போது முன்னணியில் உள்ளது. வேகமாக சார்ஜ் ஏறும் திறன் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளில் திரவ பொருட்கள் இல்லாத பேட்டரியை தயாரித்தது. காலம் காலமாக பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக இந்த பேட்டரி உள்ளது. ஏனெனில் திட பேட்டரிகளில் திரவ எலக்ட்ரோலைட்ஸ்கள் பயன்படுத்தபடாது. இந்த வகை பேட்டரி பாதுகாப்பானது என்பதோடு வேகமாக சார்ஜ் ஏறும் திறன் பெற்றது. இதனால் மின்சார வாகனங்களுக்கு அதிக அளவில் இந்த பேட்டரிகளே பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குவாண்டம்ஸ்கேப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய சிங், சிவ சிவராம் என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். சி இ ஓ பொறுப்பில் இருந்து விலகினாலும் நிறுவனத்தின் போர்டு கமிட்டியில் தலைவராக ஜெகதீப் சிங் உள்ளார். சுந்தர் பிச்சையை விட 10 மடங்கு அதிகம் தற்போது "ஸ்டெல்த் ஸ்டார்ட்அப்" இன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெகதீப் சிங் பணியாற்றி வருகிறார். ஜெக்தீப் சிங்க் பெறும் சம்பளம், டெக் உலகின் தனி சாம்ராஜ்யம் நடத்தும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சையை விட 10 மடங்கு அதிகம். இந்திய வம்சாவளி அதிலும் சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக உள்ளார். 2004-ல் கூகுளில் பணிக்கு சேர்ந்த சுந்தர் பிச்சை, தோரயமாக சுமார் ரூ.1663 கோடி சம்பளமாக பெற்று வருகிறார். இவருக்கு சம்பளம் மட்டுமின்றி பல சலுகைகளும் கிடைக்கிறது. இது எல்லாம் சேர்த்தால் கூட சுந்தர் பிச்சைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1854 கோடி கிடைக்கிறது. இதன்படி கணக்கிட்டால் ஒரு நாள் சம்பளம் என்பது ரூ.5 கோடியாக உள்ளது. ஆனால் ஜெகதீப் சிங்கின் சம்பளம் இதை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் ஆகும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post