2025ல் 3ம் உலகப்போர்? கொரோனா டூ டிரம்ப் வெற்றி வரை சரியாக கணித்தவர் சொன்ன தகவல்! மிரளும் நாடுகள்

post-img
லண்டன்: கொரோனா பரவல், 2024ல் ஏஐ வளர்ச்சி, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று முன்கூட்டியே சரியாக கணித்த நிகோலஸ் அஜுலா, 2025ல் 3ம் உலகப்போர் வருமா? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. மறுபுறம் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கி உள்ளது. இந்த போர் நடவடிக்கையால் இஸ்ரேல் - லெபனான், இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர புதிதாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் தொடங்கி உள்ளது. அதோடு சீனாவும், தைவானை கைப்பற்றும் முனைப்பில் அந்த நாட்டுடன் மோதலுக்கு தயாராகி வருகிறது. இதனால் உலக நாடுகள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20ம் தேதி பொறுப்பேற்று செயல்பட உள்ளார். இதுவும் சர்வதேச அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. இதனால் நேற்று முன்தினம் பிறந்த 2025ம் ஆண்டு புத்தாண்டு நம் அனைவருக்கும் இந்த ஆண்டை சிறப்பானதாக அமையுமா? இல்லாவிட்டால் 3ம் உலகப்போரை ஏற்படுத்தி விடுமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இந்நிலையில் தான் 2025ம் ஆண்டில் 3ம் உலகப்போருக்கு வாய்ப்புள்ளது என்று நிகோலஸ் அஜுலா கணித்துள்ளார். இவர் லண்டனை சேர்ந்தவர். ஹிப்னோதெரபிஸ்ட்டான இவர் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் பல கணிப்புகள் அப்படியே நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் கொரோனா பரவல், Black Lives Mattter Movement, 2024ல் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி உள்ளிட்டவற்றை முன்கூட்டியே இவர் சரியாக கணித்து கூறியிருந்தார். இதனால் தான் நிகோலஸ் அஜுலாவின் இந்த கணிப்பு என்பது அதிக கவனம் பெற்றுள்ளது. அதாவது இந்த ஆண்டு மூன்றாவது உலகப்போருக்கான சாத்தியக்கூறு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார். ‛‛2025ம் ஆண்டு என்பது இரக்கம் இல்லாத ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் உலகம் முழுவதும் கொடூரமான செயல்களை நம் கண்கள் பார்க்கும். குறிப்பாக நாடு, மதத்தின் பெயரால் மக்கள் மோதிக்கொள்வார்கள். இதில் இழப்புகள் ஏற்படும். அரசியல் படுகொலைகள் நிகழும். இந்த ஆண்டில் வன்முறையும், மக்களுக்கு எதிரான தீமையும் தான் பூமியை ஆக்கிரமித்து கொள்ளும். இது 3ம் உலகப்போருக்கான சாத்தியக்கூறுகளாகும். இந்த சம்பவங்கள் ஆண்டின் மையப்பகுதியில் தொடங்கும்'' என்று கணித்துள்ளார். மேலும், ‛‛பிரிட்டன் இந்த ஆண்டு மோசமான நிலையை எதிர்கொள்ளும். பணவீக்கம், பொருளாதார நெருக்கடியில் பிரிட்டன் சிக்கும். பிரிட்டனை விட்டு முக்கிய நிறுவனங்கள் வெளியேறும். இந்த ஆண்டு இறுதியில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வார். அவருக்கு பதில் புதிதாக பெண் ஒருவர் பிரதமராக பொறுப்பேற்பார்'' என்றும் கூறியுள்ளார். இவரது இந்த கணிப்புகள் என்பது பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா மற்றும் பிரான்சை சேர்ந்த ஜோதிட கலைஞரான நாஸ்ட்ரடாமஸ் ஆகியோரின் கணிப்புகளுடன் ஒத்துப்போகின்றன. பாபா வங்கா தனது கணிப்பில் , ‛‛2025ல் உலக அளவில் ஒரு மாபெரும் பேரழிவு நிகழ போகிறது. ஐரோப்பாவில் ஒரு முக்கிய பிரச்சனை எழப்போகிறது. இருநாடுகள் இடையே பெரிய போர் உருவாகும். இது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்று கூறியிருக்கிறார். அதேபோல் நாஸ்ட்ரடாமஸ், ‛‛2025ல், பயங்கர போர்கள் வெடிக்கும் என்றும் மாபெரும் பேரழிவு ஏற்படும். ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரும். எரிமலை வெடிப்பு, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் நடக்கும்'' என்று கணித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post