கஜானா காலி? அரசுப் பள்ளிக்கு தனியார் உதவுவது ஏன்? இதில் இவ்வளவு வருமானம் இருக்கா?

post-img
சென்னை: தனியார் பள்ளிகள் சங்கம் 500 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து அதனை மேம்படுத்துவதற்கான பொருளாதார உதவியைச் செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த முயற்சி அரசுப் பள்ளிகளை அபகரிக்கும் விதமாக இருக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்படச் சிலர் கடுமையாக எதிர்க்கின்றனர். அது ஏன்? அதற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? அரசுப் பள்ளிகளைக் கைகழுவும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கி இருப்பதாக திமுக கூட்டணியில் இருக்கும் சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சிலர் ஒரு குண்டை தூக்கிப் போட்டு உள்ளன. இதற்குக் கல்வியாளர்கள் பலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் கொடுத்து தொடங்கி வைத்தார். அன்று முதல்வரின் சிறிய நிதியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இப்போது ரூ,504 கோடி சேர்ந்துள்ளது எனப் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருக்கிறார். இதன் ஒரு பகுதியாக தனியார் பள்ளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்திற்காக 500 பள்ளிகளைத் தேர்வு செய்து அதனை மேம்படுத்த நிதியுதவி செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தனர். அந்த விவகாரம் தான் இப்போது அரசுக்கு தலைவலி தரும் சமாச்சாரமாக மாறியுள்ளது. இது மறைமுகமாக தனியார் கைக்கு அரசுப் பள்ளிக்களை தாரைவார்க்கும் செயல் என அச்சம் தெரிவித்துவருகின்றனர். ஆனால், அந்தக் கருத்து தவறானது என மறுத்துள்ளார் அன்பில் மகேஸ். 'அரசுப் பள்ளி என்பது எங்கள் பிள்ளை. அதைத் தத்து கொடுக்கும் அவசியம் இல்லை' என்று அவர் மறுத்திருக்கிறார். ஆனால், இந்தச் சர்ச்சை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில் தாங்கள் அரசுப் பள்ளியை தத்தெடுக்கவில்லை. உதவிதான் செய்ய உள்ளதாகச் சொன்னோம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். ஆனால், அது பற்றியும் சில சந்தேகங்களை முன்வைக்கிறார் பிரின்ஸ். இந்தத் தனியார் பள்ளி முதலாளிகள் பச்சையப்பர், பிடி தியாகராஜரைப் போல தங்களின் சொந்த பணத்தைச் செலவழிக்கப் போகிறார்களா? அவர்கள் எந்தப் பணத்தைக் கொடுக்கப் போகிறார்கள். பாட்டன், முப்பாட்டன் சேர்த்த சொத்தையா? இல்லை மாணவர்களின் கட்டணத்தை உயர்த்தி அதிலிருந்து செலவு செய்யப் போகிறார்களா? அதை அனுமதித்தால் கட்டணக் கொள்ளை அதிகரிக்குமா? இல்லையா?" என்று ஆவேசமாகப் பேசுகிறார். இது பற்றி பேசி இருக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "காமராஜர் காலத்தில் கஜானாவில் காசு இல்லை. அப்படியான காலத்தில் பணக்காரர்களிடம் நிலத்தை வாங்கி அங்கே கட்டடங்களைக் கட்டவைத்து அதை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்தார். பள்ளி கட்டியைவிட்டார். ஆசிரியர் போட்டுவிட்டார்கள். ஆனால், டேபிள், நாற்காலி, மின் விசிறி வாங்கப் பணம் இல்லை. அதற்காகக் கல்வி மாநாடு நடத்தி மக்களிடம் தேவையான பொருட்களை தனமாகப் பெற்றார். அது காமராஜர் காலம். இன்று 2025இல் இருக்கிறோம். சுதந்தரம் பெற்றும் 78 ஆண்டுகள் ஆகிவிட்டது. அரசின் பொருளாதாரம் இன்னும் உயரவே இல்லையா? இன்னும் மாட்டு வண்டியில்தான் போகிறோமா? தனியார் பள்ளிகள் சங்கம் நடத்தும் மாநாட்டில் அதன் தலைவர் அறிவிக்கிறார் 500 பள்ளிகளை தத்து எடுப்போம் என்று. அதை அரசு சொல்லவில்லை. முதல்வர் அறிவிக்கவில்லை. ஒரு சங்கத் தலைவர் அறிவிக்கிறார். அதேமேடையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டிப் பேசுகிறார். அப்படி என்றால் தனியார் பள்ளிக்கு அந்த வருமான எங்கிருந்து கிடைக்கும்? அவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கட்டும் கட்டணத்திலிருந்தானே? ஏற்கெனவே கட்டணத்தைக் குறைக்கச் சொல்லிப் பெற்றோர்கள் போராடி வருகிறார்கள். அதைக் குறைக்கச் சொல்ல வேண்டி அமைச்சர், அரசுப் பள்ளியையும் சேர்த்து அவர்கள் தலையில் கட்டப்பார்க்கிறார். ஒரு தனியார்ப் பள்ளி தன் பள்ளியை மேம்படுத்த மாணவர்களிடம் கட்டணத்தை உயர்த்தி செய்தால் அது சட்டப்படி சரி. அதற்குப் பெயர் இலாபம். அடுத்த பள்ளியில் செலவை ஏற்கும் அளவுக்கு மாணவர்களின் கட்டணத்தைச் சுரண்டினால் அது கொள்ளை. Profit என்பதற்கும் Profitary என்பதற்கு வித்தியாசம் உள்ளது. அதை நீதிமன்றமே தீர்ப்பில் சொல்லி இருக்கிறது. அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றப் போகிறோம் என்று சொல்லி இந்தத் தனியார் பள்ளிகள் அந்தச் செலவை யார் தலையில் கட்டப் போகிறார்கள்? பொதுமக்கள் தலையில்தானே? தேசிய கல்விக் கொள்கை 7.10 விதி என்ன சொல்கிறது? ஒரு அரசுப் பள்ளியை அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியுடன் இணைத்துவிடுவோம் என்கிறது. அதைத்தானே இப்போது தமிழக அரசு மறைமுகமாகச் செய்கிறது?" என்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post